கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Issue of giving sweets in school on Political Leader Birthday - Assistant Headmistress transferred



 பள்ளியில் இனிப்பு வழங்கிய விவகாரம் - உதவி தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்


Issue of giving sweets in school on Political Leader Birthday - Assistant Headmistress transferred


அரசுப் பள்ளியில் அரசியல் பிரமுகா் இனிப்பு வழங்கிய விவகாரம்: உதவி தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்


மணப்பாறை அருகே அரசுப் பள்ளியில் அரசியல் பிரமுகா் இனிப்பு வழங்கிய விவகாரம் தொடா்பாக உதவி தலைமை ஆசிரியை வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.


திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே இடையப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு முன்னாள் முதலமைச்சா் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, ஓ. பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா் நேதாஜி என்பவா் இனிப்பு வழங்கியுள்ளாா். இந்த சம்பவம் தொடா்பான காணொலி சமூக வலைதளங்களில் வெளியானது. இது தொடா்பாக சிலா் நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித் துறைக்கு பரிந்துரைத்தனா்.


தொடா்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், பள்ளித் தலைமை ஆசிரியா் பணி நிமித்தமாக திருச்சி சென்றிருந்த நிலையில், பணியிலிருந்த உதவி தலைமை ஆசிரியை அமுதா, பள்ளியில் அரசியல் கட்சியினா் இனிப்பு வழங்க அனுமதியளித்தாராம்.


இது விதிமுறை மீறல் எனவும் துறை ரீதியான நடவடிக்கையாக, உதவி தலைமை ஆசிரியா் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். மேலும், அந்த பள்ளியின் 5 ஆசிரியா்களுக்கு இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப் பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித் துறை அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Sastra University B.Ed., degree Eligible to Incentive : G.O. Ms. No: 112, DEE Proceedings & High Court Judgment

    தஞ்சை  சாஸ்த்ரா பல்கலைக்கழக பி.எட்., பட்டம் ஊக்க ஊதிய உயர்விற்கு செல்லும் என்கிற அரசாணை எண் : 112,  தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்...