கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Passport லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Passport லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Major changes in Indian passport

 


இந்திய கடவுச்சீட்டில் முக்கிய மாற்றங்கள்


Major changes in Indian passport


இந்திய பாஸ்போர்ட்டில் முக்கிய மாற்றங்கள்


இந்திய அரசாங்கம் சமீபத்தில் பாஸ்போர்ட் வழங்கும் முறையில் சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இவை பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் பாதுகாப்பையும் தனியுரிமையையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளன. முக்கிய மாற்றங்கள் பின்வருமாறு:


1. புதிய நிற அடையாள முறை:


- அரசு அதிகாரிகளுக்கு: வெள்ளை நிற பாஸ்போர்ட் வழங்கப்படும்.


- வெளிநாட்டு தூதர்களுக்கு: சிவப்பு நிற பாஸ்போர்ட் வழங்கப்படும்.


- சாதாரண குடிமக்களுக்கு: முந்தையபோல் நீலம் நிற பாஸ்போர்ட் வழங்கப்படும்.


இந்த நிற அடையாள முறை பாஸ்போர்ட் வகைகளை வேறுபடுத்துவதற்கு உதவுகிறது.  


2. பிறப்புச் சான்றிதழ் அவசியம்:


அக்டோபர் 1, 2023 முதல் பிறந்த அனைவருக்கும் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும்போது உள்ளாட்சி/நகராட்சி/ மாநகராட்சியில் பிறப்பு மற்றும் இறப்புப் பதிவாளர் வழங்கிய பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 


3. முகவரி விவரங்கள்:


தனியுரிமை பாதுகாப்பு கருதி பாஸ்போர்ட்டில் இனி குடியிருப்பு முகவரி அச்சிடப்படாது. அதற்கு பதிலாக, முகவரி விவரங்கள் பார்கோடில் (Barcode) பதியப்படும், இது தேவையானபோது குடிவரவு (Immigration) அதிகாரிகளால் மட்டும் ஸ்கேன் செய்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.


4. பெற்றோரின் பெயர்கள்:


பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் இனி பெற்றோரின் பெயர்கள் வழங்க தேவையில்லை. இது தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்.  


இந்த மாற்றங்கள் பாஸ்போர்ட் வழங்கும் செயல்முறையை பாதுகாப்பானதாகவும் தனியுரிமை பாதுகாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


மேலும் தகவல்களுக்கு, அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் சேவை தளமான https://passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink#  சென்று தெரிந்து கொள்ளலாம்.


Birth Certificate Mandatory for Passport - Central Govt



கடவுச்சீட்டு பெற பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் - மத்திய அரசு அறிவிப்பு


Birth Certificate Mandatory for Passport - Central Govt


பாஸ்போர்ட்  - பிறப்பு சான்றிதழ் கட்டாயம்


2023 அக்டோபர் 1ம் தேதிக்கு பின் பிறந்தவர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம்


மற்றவர்கள் பாஸ்போர்ட் திருத்த விதிகள் 2025-ன் படி பிறப்பு சான்றாக மாற்று ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் என்றும் அறிவிப்பு



2023 அக்டோபர் 1ஆம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் புதிதாக கடவுச்சீட்டு பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம்.


இந்திய கடவுச்சீட்டு சட்டம் 1980 விதிகளில் மத்திய வெளியுறவு அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது. இதன்படி கடவுச்சீட்டு பெறுவதற்கு இனி பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.



இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,


'கடந்த, 2023ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் புதிதாக கடவுச்சீட்டு பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம்.


மாநகராட்சி, நகராட்சி அல்லது அதற்கு நிகரான அமைப்புகள் வழங்கும் பிறப்பு சான்றிதழ் ஆவணமாக ஏற்கப்படும். அரசிதழில் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.


எனினும் 2023, அக்டோபர் 1ஆம் தேதிக்கு முன்பு பிறந்தவர்களுக்கு இத்தகைய பிறப்பு சான்றிதழ் தேவை இல்லை.


பள்ளிச் சான்றிதழ், நிரந்தர கணக்கு அட்டை, ஓய்வூதிய உத்தரவு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை கடவுச்சீட்டு விண்ணப்பத்துக்கு பிறந்த தேதிக்கான ஆவணங்களாக பயன்படுத்தலாம்.


இது குறித்து பேசிய அதிகாரிகள், நாட்டில் பெரும்பாலும் கிராமப்புறங்களில் இருந்து வருபவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் இல்லை. இருப்பினும், 1969 ஆம் ஆண்டு பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் சட்டத்தை அமல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதால், பிறப்புச் சான்றிதழ்களை மட்டுமே பிறந்த தேதிக்கான சான்றாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


அரசு ஊழியர்கள் கடவுச்சீட்டு (Passport) பெற தடையின்மை சான்று (NOC) தேவையில்லை - மதுரை பாஸ்போர்ட் அதிகாரி தகவல் (Govt Employees do not need No Objection Certificate to get passport - Madurai Passport Officer informs)...

 


அரசு ஊழியர்கள் கடவுச்சீட்டு (Passport) பெற தடையின்மை சான்று (NOC) தேவையில்லை - மதுரை பாஸ்போர்ட் அதிகாரி தகவல் (Govt Employees do not need No Objection Certificate to get passport - Madurai Passport Officer informs)...


அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு தடையின்மைச் சான்று அளிக்க வேண்டிய கட்டாயமில்லை என பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்துள்ளார்.



இது குறித்து மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொதுத்துறை மற்றும் அரசு சார்புடைய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் போது தடையின்மைச் சான்றிதழ் அளித்தால் மட்டுமே பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது. சில அரசு அலுவலகங்களில் தடையின்மைச் சான்று பெறுவது மிகவும் கடினமாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு மத்திய வெளியுறவுத் துறை, தடையின்மைச் சான்றுக்குப் பதிலாக புதிய நடைமுறையை பின்பற்றக் கூறியுள்ளது.


இதன்படி அரசு ஊழியர்கள் தங்களது அலுவலகத்தில் தடையின்மைச் சான்று வழங்கும் அதிகாரியின் முகவரிக்கு பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வதை முன் அறிவிப்பாக படிவம் "ச' இல் தெரியப்படுத்த வேண்டும். அதன் நகலை பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் சமர்ப்பித்தால் போலீஸ் அறிக்கை பெற்று பாஸ்போர்ட் வழங்கப்படும்.  ஊழியருக்கு பாஸ்போர்ட் வழங்குவதில் ஆட்சேபனை இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி, மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நேரில் சென்று தெரிவிக்க வேண்டும். பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கும் இதே நடைமுறை பின்பற்றப்படும். இதற்குரிய "ச' படிவத்தை பாஸ்போர்ட் அலுவலக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



>>> அரசுப் பணியாளர்கள் / ஆசிரியர்கள் வெளிநாடு சென்றுவர (Foreign Trip) கடவுச்சீட்டு பெறுதல் / புதுப்பித்தல் மற்றும் விடுப்பு அனுமதி கோரும் விண்ணப்பப் படிவங்கள் மற்றும் சான்றுகள்...


அரசுப் பணியாளர்கள் / ஆசிரியர்கள் வெளிநாடு சென்றுவர (Foreign Trip) கடவுச்சீட்டு பெறுதல் / புதுப்பித்தல் மற்றும் விடுப்பு அனுமதி கோரும் விண்ணப்பப் படிவங்கள் மற்றும் சான்றுகள் (Application Forms and Certificates for Govt Employees / Teachers for Travel Abroad Obtaining / Renewal of Passport and Requesting Leave Permission)...



>>> அரசுப் பணியாளர்கள் / ஆசிரியர்கள் வெளிநாடு சென்றுவர (Foreign Trip) கடவுச்சீட்டு பெறுதல் / புதுப்பித்தல் மற்றும் விடுப்பு அனுமதி கோரும் விண்ணப்பப் படிவங்கள் மற்றும் சான்றுகள் (Application Forms and Certificates for Govt Employees / Teachers for Travel Abroad Obtaining / Renewal of Passport and Requesting Leave Permission)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

17-03-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-03-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: சான்றாண்மை...