அகத் தணிக்கை மேற்கொள்ளும் பொருட்டு 31.05.2026 வரை ஓய்வு பெற உள்ள தலைமையாசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
// மிக மிக அவசரம் //
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்கக நிதி ஆலோசகர் மற்றும் முதன்மைக் கணக்கு அலுவலரின் செயல்முறைகள், சென்னை -6
ந.க.எண்.015689 /அகத/2026, நாள். 13.03.2026.
பொருள்:
பள்ளிக் கல்வி பள்ளி 31.05.2026 வரை துறைத் தணிக்கை அரசு / அரசு நிதியுதவி பெறும் மற்றும் நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் /நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் ஓய்வு பெறவுள்ளவர்கள் அகத்தணிக்கை மேற்கொள்ளல் சார்ந்து.
பள்ளிக் கல்வி இயக்ககத்தின் (அகத்தணிக்கை) கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அரசு / அரசு நிதியுதவி பெறும் மற்றும் நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் மாவட்டம் வாரியாக 31.05.2026 வரை ஓய்வு பெற்ற / ஓய்வு பெறவுள்ள பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் பணிபுரிந்தக் காலங்களை அகத்தணிக்கை மேற்கொள்ள அலுவலர்கள் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எனவே, 31.05.2026 வரை ஓய்வு பெறவுள்ள அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், அலுவலர்களின் விவரங்களையும் மற்றும் நிதி உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் விவரங்களையும் இணைப்பில் கண்ட படிவங்களில் ( EXCEL - படிவம் 1, 2, 3) தனித்தனியாக பூர்த்தி செய்து பள்ளிக்கல்வி இயக்கக நிதி ஆலோசகர் மற்றும் முதன்மைக் கணக்கு அலுவலருக்கு 18.03.2026 - மாலை 5 மணிக்குள் அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தாங்கள் பணிபுரிந்த காலங்களில் துறை ரீதியாக அகத்தணிக்கை மேற்கொள்ளும் பொருட்டு 31.05.2026 வரை ஓய்வு பெறவுள்ள பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் விவரங்களை coseaudit.sec@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மீளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு படிவம் 1 முதல் 3 வரை
ஒம்/-ஆர்.லோகநாதன்
நிதி ஆலோசகர் (ம)
முதன்மைக் கணக்கு அலுவலர்
பெறுநர்.
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்.
நகல்
1. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை / தொடக்கக்கல்வி)
2. தொடக்கக் கல்வி இயக்குநர், சென்னை-06 (தகவலுக்காக பணிந்தனுப்பலாகிறது).
3. இயக்குநர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை-06 (தகவலுக்காக பணிந்தனுப்பலாகிறது).
4. நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர். சென்னை -06 (தகவலுக்காக பணிந்தனுப்பலாகிறது).
5. இயக்குநர், தனியார் பள்ளிகள் இயக்ககம், சென்னை-06 (தகவலுக்காக பணிந்தனுப்பலாகிறது).

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.