பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 02-07-2025 - School Morning Prayer Activities
திருக்குறள்:
குறள் 77:
என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்.
விளக்கம்: எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.
ஒவ்வொரு முயற்சியும் வெற்றியின் வாளியை நிரப்பும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. பெரியோர் , பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.
2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.
பொன்மொழி :
எல்லையற்ற அதிகாரம் அபாயகரமான முறைகேட்டில் முடியும் - எட்மண்ட் பர்க்
பொது அறிவு :
01. இந்திய வரலாற்றில் புகழ்பெற்ற பானிபட் என்ற இடம் எந்த மாநிலத்தில் உள்ளது?
அரியானா (Haryana)
02. இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை துறைமுகம் எது?
மும்பை-மகாராஷ்டிரா
Mumbai - Maharashtra
English words & Tips :
Race - competition between people or vehicle. பந்தயம், இனம்
* Raise - to lift or move, உயர்த்துதல்
அறிவியல் களஞ்சியம் :
புவிப்பரப்பில் 71 சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது. இதில் கடல்நீரின் அளவு 97 சதவீதம் மற்றும் நன்னீரின் அளவு 3 சதவீதமாகும். சூழ்ந்துள்ள கடல்நீர் பரப்பு 1,49,400,000 சதுர கிலோ மீட்டர்கள்
ஜூலை 02
உலக விளையாட்டுத் துறை செய்தியாளர்கள் தினம்
சாதி, மதம், இனம், நாடு, மொழி எல்லாவற்றையம் கடந்து மக்களை விளையாட்டால் ஒன்று சேர்க்கும் பணியைச் செய்யும் விளையாட்டு பத்திரிகையாளர்களை கவுரவிக்கும் நாள் இன்று.
நீ ஒரு மன்னாதி மன்னனாயினும், உன் நன்கொடைகளை நான் ஏன் பொருட்படுத்த வேண்டும்? என்று கூறினார். பேரரசனோ, என்னைத் தூயவனாக்கவும், மகிழ்விக்கவுமே, ஏதேனும் ஒன்றை நன்கொடையாகப் பெறுக; நகருக்குள் ஒன்றை நன்கொடையாகப் பெறுக; நகருக்குள் என்னோடு எழுந்தருள்க என்று வேண்டினான். இறுதியில் முனிவர் பேரரசனோடு செல்ல இசைந்தார். அவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். அங்கே அவர் பொன்னும் மணியும், பளிங்கும் மற்றும் பல வியத்தகு பொருள்களும் இருக்கக் கண்டார். செல்வமும் அதிகாரமும் எங்கும் விளங்கின. மன்னன் முனிவரைக் காத்திருக்குமாறு கூறி, ஒரு மூலைக்குச் சென்று, இறைவா! இன்னும் மிகுந்த செல்வமும், மக்களும் நாடும் எனக்கு அருள்க என்று பிரார்த்தனை செய்யத் தொடங்கினான். இதற்கிடையே முனிவர் எழுந்து வெளியே செல்ல முற்பட்டார். அவர் செல்வதைக் கண்ட பேரரசன். அவரைப் பின் தொடர்ந்து, ஐயா, நில்லுங்கள்; நீங்கள் எனது நன்கொடையைப் பெறாது செல்கின்றீர்களே! என்றான். முனிவர் அவனை நோக்கி, மன்னா! பிச்சைக்காரரிடம் நான் இரப்பதில்லை. உன்னால் என்ன கொடுக்க இயலும்? நீயே பொழுதெல்லாம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாய் என்று கூறினார். அன்பு வெளிப்படும் முறை இதுவன்று. இறைவனிடம் இதைத் தா அதைத்தா என்று நீ வேண்டுவாயானால் அன்பிற்கும் வியாபாரத்திற்கும் என்ன வேறுபாடு?
என்று முனிவர் கூறினார். மன்னன் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டான்.
இன்றைய செய்திகள்
02.07.2025
⭐யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற 57 பேரில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள்- மு.க.ஸ்டாலின்.
⭐காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் 74 அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பு.
⭐மத்திய அரசின் ஆலோசனையின் படி, வட சென்னையின் வியாசர்பாடி பணிமனையிலிருந்து 120 மின்சாரப் பேருந்துகளின் சேவை துவங்கப்பட்டு உள்ளது.
⭐விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதி- முதலமைச்சர் உத்தரவு.
🏀 விளையாட்டுச் செய்திகள்
🏀ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை: ஸ்மிரிதி மந்தனா 3ஆவது இடத்திற்கு முன்னேற்றம்.
Today's Headlines
✏️Proud moment of "Naan Muthalvan scheme" - 50 out of 57 candidates who cleared the UPSC exam.
✏️Israeli attack on people waiting for food in Gaza leaves 74 innocent civilians dead.
*SPORTS NEWS*
🏀 ICC T20 Batting Rankings: Smriti Mandhana moves up to 3rd position.
🏀 England-India 2nd Test begins in Birmingham tomorrow
Covai women ICT_போதிமரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.