பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-07-2025 - School Morning Prayer Activities
திருக்குறள்:
குறள் 101:
விளக்கம்: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.
வெற்றி பெறுவோர் ஒரு போதும் கைவிட மாட்டார்கள். கைவிடுவோர் வெற்றி பெற மாட்டார்கள்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. வார்த்தையால் பேசுவதை விட..வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன்
2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.
பொன்மொழி :
அன்புள்ள மனிதன் தான் எதிலும் வெற்றியைப் பெறுகின்றான் - ரமணர்
பொது அறிவு :
01.உலகின் கூரை என்று அழைக்கப்படும் பீடபூமி எது?
திபெத் பீடபூமி(Tibetan plateau)
02..தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் ஆணையர் யார்?
திருமதி. அர்ச்சனா பட்நாயக் I.A.S
Tmt. Archana patnaik, I.A.S
English words :
variants–a slightly different form of a thing. திரிபு வடிவம் அல்லது உருவம்
Grammar Tips:
அறிவியல் களஞ்சியம் :
மூளையின் அடிப் பகுதியில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி தான் உடல் வளர்ச்சியையும், பாலின தன்மையையும் கட்டுப்படுத்துகிறது. ஒரு சிறு பட்டாணி அளவே உள்ள இது, உடலின் பல்வேறு பகுதிகளுடன் 50 ஆயிரம் நரம்புகளால் தொடர்பு கொண்டுள்ளது.
ஜூலை 11
உலக மக்கள் தொகை நாள்
உலக மக்கள் தொகை நாள் (World Population Day) என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது. 1987 ஆம் ஆண்டில் இதே நாளிலேயே உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனைத் தாண்டியது.
ஒரு ஊரில் ஒரு எலி இருந்தது. ஒருநாள் அதற்கு உணவு எதுவும் கிடைக்கவில்லை. பசியோட அலைந்த எலி ஓரிடத்தில் ஒரு ஓட்டை தெரிவதை பார்த்தது. அதன் உள்ளே சென்றது. அங்கு பார்த்தால் நிறைய தானியங்கள் வைக்கப்பட்டு இருந்தது. அதைக் கண்ட எலி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது. அங்கே இருந்து அந்த தானியங்களை உண்ண ஆரம்பித்தது. அதிக ஆசையால் சோம்பேறித்தனத்தால் அங்கேயே தங்கியிருந்து எல்லா தானியங்களையும் தானே சாப்பிட்டு முடிக்க முடிவு செய்தது. உணவுத் தேடி எங்கும் அலைய வேண்டாம் என்று நினைத்து சந்தோஷப்பட்டது. சில நாட்களுக்குப் பின்பு வெளியில் வந்து வெளி உலகப் பார்க்க நினைத்தது. ஆனால் வேலை செய்யாமல் இருந்து சாப்பிட்டதினால் உடம்பு மிகவும் பெருத்து விட்டது. இப்போது அதனால் அந்த ஓட்டை வழியாக வெளியே வர முடியவில்லை. அங்கேயே முட்டி மோதி இறந்து போனது
நீதி: பேராசை பெருநஷ்டம்
இன்றைய செய்திகள்
11.07.2025
⭐தமிழகத்தில் தொழில்துறை தலைநிமிர்ந்து நிற்கிறது மு.க.ஸ்டாலின்
⭐டெல்லியில் நிலநடுக்கம் - பீதியில் மக்கள்
⭐எலான் மஸ்க்கின் Starlink செயற்கைகோள்களுக்கு இந்திய விண்வெளி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி
⭐டிரம்ப் உத்தரவு எதிரொலி: 2,000 மூத்த அதிகாரிகளை பணிநீக்கம் செய்யும் நாசா
🏀 விளையாட்டுச் செய்திகள்🥳
🏀லார்ட்ஸ் டெஸ்ட்: ஒரே ஓவரில் இங்கிலாந்தின் தொடக்க வீரர்களை வீழ்த்திய நிதிஷ் ரெட்டி..!
🏀ஆசிய கோப்பை தகுதிச்சுற்று ரவுண்ட் போட்டியில் ஹாங்காங்கிற்கு எதிராக இந்தியா 0-1 எனத் தோல்வியடைந்தது.
Today's Headlines
✏️ Tamil nadu CM M.K. Stalin noticed our Industry in Tamil Nadu is standing High
✏️ Coimbatore District Collector has advised people to be cautious. Because, Nipah virus has been reported in the state of Kerala. Therefore, the
✏️ Earthquake in Delhi ,so that the People in panic
✏️Indian Space Regulatory Authority approves Elon Musk's Starlink satellites
✏️Echo of Trump's order: NASA to lay off 2,000 senior officials
*SPORTS NEWS
🏀 Lord's Test: Nitish Reddy bowls out England openers in one over.
🏀 India lost 0-1 to Hong Kong in the Asia Cup qualifiers.
Covai women ICT_போதிமரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.