"ஏறுனா ரயிலு... இறங்குனா ஜெயிலு... போட்டா பெயிலு..." என்று பள்ளி ஆசிரியரிடம் மரியாதையின்றி வீரவசனம் பேசிய மாணவன் பணம் கொள்ளையடித்த வழக்கில் கைது
முக்கிய வழக்கில் கைது செய்து இழுத்து சென்ற போலீஸ் .
"ஏறுனா ரயிலு.. இறங்குனா ஜெயிலு.." - வீரவசனம் பேசிய இந்த பையன ஞாபகம் இருக்கிறதா? - முக்கிய வழக்கில் இழுத்து சென்ற போலீஸ்
ATM பணம் கொள்ளை-கைதானவரின் பழைய வீடியோ வைரல்/ கடந்த மாதம் ஏ.டி.எம்மில் பணம் நிரப்ப கொண்டு செல்லப்பட்ட ரூ.29 லட்சம் கொள்ளை சம்பவத்தில் சிறுவன் உட்பட 6 பேர் கைது /ஏடிஎம்-இல் பணம் நிரப்பும் ஊழியர் நாக அர்ஜுன் பணம் கொள்ளை போனதாய் நாடகம்/ ஏடிஎம் பணம் கொள்ளை போன சம்பவத்தில் கைதான 19 வயது ப்ரீத்திவின் வீடியோ வைரல்/ பள்ளியில் ப்ரீத்திவ் சக மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியரை மிரட்டிய வீடியோ/ “ஏறுனா ரயிலு...இறங்குனா ஜெயிலு...போட்டா பெயிலு“ - வீரவசனம் பேசிய வீடியோ வைரல்
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர்களிடம் மரியாதையின்றி வீர வசனம் பேசிய மாணவன் ஒருவர், தற்போது ஏடிஎம் பணம் கொள்ளை வழக்கில் கைதாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர்களிடம் மரியாதையின்றி பேசும் வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் பேசிய மாணவன், ‘ஏறுனா ரயிலு... எறங்குனா ஜெயிலு... போட்டா பெயிலு...இந்த தவம் இருக்கிற வரையில் எதுவும் செய்யமுடியாது’ என ரைமிங் வசனத்துடன் சொல்ல முடியாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளான். இதனை அங்கிருந்த சமூக ஆர்வலர்கள் சிலர் வீடியோவாக பதிவு செய்த நிலையில், அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், திண்டுக்கல் செம்பட்டி அருகே நடந்த ATM கொள்ளை வழக்கில் அந்த மாணவன் கைதாகியுள்ளான். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியைச் சேர்ந்த முருகன் என்பவர் தனியார் ஏடிஎம்மில் பணம் வைப்பதற்கான ஏஜென்சி ஒன்றை நடத்தி வருகிறார். இவரிடம், தேவதானப்பட்டியைச் சேர்ந்த நாகர்ஜுன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள ஏடிஎம்மில் பணம் வைக்க வந்த போது ரூ.29 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக நாகர்ஜுன், ஏஜென்சி உரிமையாளர் முருகனிடம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து முருகன் செம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படைட்யில் செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், நாகர்ஜுன் தான் தனது கூட்டாளிகளுடன் அந்த பணத்தை கொள்ளையடித்ததையும், ஏடிஎம்மில் பணம் வைக்க வந்த போது சிலர் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்துவிட்டு போனதாக அவர் நாடகம் ஆடியதும் போலீஸுக்கு தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக நாகர்ஜுன், சுரேந்தர், முகமது, ரிதீஷ், கார்த்திகேயன், ஒரு சிறுவன் உட்பட மொத்தம் 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தேவதானப்பட்டியைச் சேர்ந்த தவம் எனும் ப்ரீத்திவ் என்ற 19 வயது இளைஞனும் கைதாகியுள்ளான். அந்த ப்ரீத்திவ், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் படித்த போது ஆசிரியர்கள் முன்பு மரியாதையின்றி வீரவசனம் பேசிய மாணவன் என்று கூறப்படுகிறது. ப்ரீத்திவ் பேசும் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.
இந்த கொள்ளை குறித்து மற்றொரு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் :
திண்டுக்கல் மற்றும் தேனியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான 18 ஏ.டி.எம்.,களில் இவர்கள் பணம் வைக்கும் பணியில் ஒரு தனியார் நிறுவனம் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில், நாகஅர்ஜுன் கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி மாலை வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி, கே.சிங்காரக்கோட்டை, செம்பட்டி உள்ளிட்ட ஏ.டி.எம்.,மில் பணம் வைத்துள்ளார்.
அங்கு பணி முடிந்ததும் சின்னாளபட்டியில் உள்ள ஏ.டி.எம்.,மில் பணம் வைப்பதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் ரூபாய் 29 லட்சத்துடன் செம்பட்டி அடுத்த, புதுகோடாங்கிபட்டி - அம்பாத்துரை சாலையில் சென்றுள்ளார். அப்போது, புதுகோடாங்கிபட்டி அடுத்த டாஸ்மாக் மதுக்கடை அருகே, இவரை வழிமறித்த 3 மர்ம நபர்கள் இவரின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை செய்து விடுவோம் என மிரட்டி ரூபாய் 29 லட்சத்தை பறித்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.
அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து ஏஜென்சி உரிமையாளர் முருகனுக்கு தகவல் தெரிவித்தார். இந்நிலையில், முருகன் செம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த புகாரின் பேரில் ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி.கார்த்திகேயன் விசாரணை நடத்தி, செம்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரான்சிஸ் தீபா, விஜயபாண்டி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து, அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர்.
விசாரணையில் கொள்ளையர்கள் தப்பி ஓடிய வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து அந்த இருசக்கர வாகனம் தேவதானப்பட்டி பகுதியைச் சேர்ந்தது என தெரிய வந்துள்ளது. இதன்படி இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தேவதானப்பட்டியைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் சுரேந்தர் (25) ஆமனுல்ஸ் மகன் முகமது இத்ரீஸ் (20) காமாட்சி மகன் பிரித்விவ்(19) மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 4 கொள்ளையர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாக அர்ஜூன் வங்கியில் பணம் செலுத்துவதற்காக பணத்துடன் சென்று வந்ததை இவர்கள் பல நாட்களாகவே நோட்டமிட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் தான் சம்பவம் நடந்த அன்று நாக அர்ஜுன் தனியாக வருவதை பயன்படுத்தி கத்தியை வைகாட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்துச் சென்றது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட தவம் என்ற ப்ரீத்திவ் என்பவர் தேவதானப்பட்டி பள்ளியில் படித்தபோது, பள்ளி வளாகத்தில் சக மாணவர்கள் முன்னிலையில், ஏறுனா ரயிலு, இறங்கினால் ஜெயிலு, போட்டால் பெயிலு எனவும், தவம் இருக்கும் வரை, இந்த தவம் ? *** கூட புடுங்க முடியாது என ஒருமையில் பேசி, பள்ளி ஆசிரியரை மிரட்டும் தொனியில் பேசியவர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. படிக்கும் ஆசிரியர்களை மதிக்காத நிலையில், தற்போது அவரே கொள்ளையனாக மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாணவனிடமிருந்து அரசாங்கம் பாடம் கற்க வேண்டும். பள்ளியில் மாணவர்களை கண்டிக்கும் சுதந்திரத்தை ஆசிரியர்களுக்கு வழங்காவிட்டால் நாடு முழுவதும் இப்படித்தான் நிகழும் என சமூக ஆர்வலர்களும், பெற்றோரும் கூறுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.