முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற மாணவர்களை அழைத்து வாழ்த்து : அமைச்சர் அவர்களின் பதிவு
இந்திய ஒன்றியத்திலேயே அரசுப்பள்ளி மாணவர்களை அழைத்து வாழ்த்தும் ஒரே முதலமைச்சர் மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்!
திராவிடமாடல் அரசு பொறுப்பேற்றதில் இருந்து உலகின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறும் தமிழ்நாட்டு அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக 2025-26ஆம் கல்வியாண்டில்…
🌠50 துறைகளில், 93 முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் 901 அரசுப் பள்ளி மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
🌅150 மாற்றுத்திறன் மாணவர்களும் இதில் அடங்குவர்.
🔆ஐஐடி-களில் ஒற்றை இலக்கத்தில் சேர்க்கை பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை இந்தாண்டில் 27ஆக உயர்ந்துள்ளது.
இவர்களை அழைத்துப் பாராட்டிய தமிழ்நாட்டின் தாயுமானவர் மாண்புமிகு முதலமைச்சர்
@mkstalin
அவர்களுக்கு மாணவர்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.