கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

10 ரூபாய்க்காக 86,390 ரூபாய்களை இழக்கலாமா? - இன்று ஒரு சிறு கதை

 

 10 ரூபாய்க்காக 86,390 ரூபாய்களை இழக்கலாமா? - இன்றைய சிறுகதை - Today's Short Story 


ஒரு முறை ஒரு ஆசிரியர் தனது மாணவர்களிடம்  பின்வருமாறு ஒரு கேள்வி கேட்டார்:


உங்களிடம் 86,400 ரூபாய்கள் இருந்தால், யாராவது ஒரு திருடன் அதில் 10 ரூபாய்களை பறித்துக்கொண்டு ஓடினால், உங்கள் கையில் இருக்கும் அந்த 86,390 ரூபாய்களை விட்டுவிட்டு அந்த 10 ரூபாய்களை பிடிக்க ஓடுவீர்களா? அல்லது பரவாயில்லை என்று உங்கள் வழியில் செல்வீர்களா?


அனைத்து மாணவர்களும் ஒரு மித்த குரலில் : நிச்சயமாக நாங்கள் 10 ரூபாய்களை விட்டுவிடுவோம். அந்த 86,390 ரூபாய்களைதான் பாதுகாப்போம் ' என்று பதிலளித்தனர்.


ஆசிரியர் சொன்னார்: உண்மையில், பெரும்பாலான மக்கள் இதற்கு நேர்மாறாகவே நடக்கின்றனர். அந்த 10 ரூபாய்களுக்காக அவர்கள் அந்த 86,390 ரூபாய்களையும் இழக்கின்றனர். 


அதற்கு மாணவர்கள் : யாராவது அப்படி செய்வார்களா?!  எப்படி அது? என்று கேட்டனர். 


அதற்கு ஆசிரியர்: உண்மையில் 86,400  என்பது ஒரு நாளில் உள்ள வினாடிகளின் எண்ணிக்கை. யாராவது ஒருவர் 10 வினாடிகள் உங்களை எரிச்சலூட்டினால் அல்லது மனதை துன்புறுத்தும் வார்த்தைகளை சொன்னால் அல்லது விரும்பத்தகாத ஒரு சம்பவம் நடந்தால் அதற்காக நாள் முழுதும் யோசித்து எஞ்சிய 86,390 வினாடிகளையும் நீங்கள் வீணாக்கி விடுவீர்கள், என்றார்.


ஆதலால் எரிச்சலூட்டும் ஒரு  வார்த்தைக்காக, அல்லது எதிர்மறையான ஒரு நிகழ்வுக்காக உங்கள் ஆற்றல்களையும், சிந்தனைகளையும் எஞ்சிய நேரங்களையும் வீணாக்கி விடாதீர்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு வினாத்தாள்கள் குறித்து மாவட்டக் கல்வி அலுவலரின் தகவல்

   காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு வினாத்தாள்கள் குறித்து மாவட்டக் கல்வி அலுவலரின் தகவல் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் வணக்கம்!...