நடிகர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழப்பு : அக்கறையில்லாத தலைமைதான் காரணமா? (முகநூல் பதிவு)
களத்திலிருந்த நிருபர்கள் கொதித்துப் பேசுகின்றனர்.
நிகழ்வின் அத்தனை நெறிமுறைகளும் மிக கேவலமாக பின்பற்றப் பட்டிருக்கின்றன, இது நெரிசல் பலி அல்ல, படுகொலைகள் என்று ஆற்றாமையுடன் அவர்கள் வெடித்துப் பேசுவது காட்டப்பட்ட அலட்சியத்தைத்தான் !
காவல் துறை அனுமதித்த உரிய நேரத்திற்கு விஜய் வந்து பேசியிருந்தால் இவ்வளவு நெரிசலுக்கு வாய்ப்பே இல்லை என்கின்றனர்.
இன்னொரு நிருபர் (நியுஸ் தமிழ் 24 × 7) கதறி அழுகிறார். தன் கைகளால் பல குழந்தைகளின் உயிரற்ற உடல்களை ஆம்புலன்சில் ஏற்றியதாகச் சொன்னார். அவரால் தொடர்ந்து பேச முடியவில்லை. நூற்றுக்கும் மேற்பட்டோர் ஓரிடத்தில் நெரிசலில் சரிந்து கிடந்ததாகச் சொல்கிறார். அவர்களைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. அத்தனைபேரும் விஜய் பேச்சைக் கேட்பதில்தான் ஆர்வம் காட்டினர் என்று குரல் கம்மப் பேசினார்.
நீங்க சொல்றதுக்கும் பலி எண்ணிக்கைக்கும் தொடர்பே இல்லையே என்றார் அவரிடம் பேசிய நெல்சன். அப்போது 11 பேர் பலி என்றுதான் பிரேக்கிங் நியூஸ் வந்திருந்தது. அவர்கள் உரையாடிக் கொண்டிருந்தபோதே அது 25 என்றானது அவ்வளவு அதிர்ச்சியாக இருந்தது !
கல்வி நல்ல வேலையைத் தந்தது, பணமீட்டியது, வாழ்வின் அனைத்து ருசிகளையும் விரைவாக ருசிக்கச் செய்தது. அவ்வளவுதான். பகுத்தறிவை தரவில்லை. ஒரு தலைமுறையின் பெரும்பகுதிக்கு பகுத்தறிவு என்றால் என்னவென்றே தெரியவில்லை.
குழந்தைகளுடைய எந்த ஆசையையும் உடனடியாக நிறைவேற்றுவதுதான் தன் தலையாய கடமை என்று பகுத்தறிவற்ற அந்த மூளை சிந்திக்கிறது. அதுதான் எதற்கும் துணிகிறது !
இப்படி நடக்கலாமென நாம் முதல் மாநாட்டின் போதிருந்தே சொல்லி வருகிறோம். தன் குழந்தைகளை அத்தகைய கூட்டத்திற்கு அனுப்பும் பெற்றோர்களை தொடர்ந்து எச்சரித்தும் வந்தோம். அவர்களாலும் என்ன செய்ய முடியும் ?
முழு முட்டாள் ரசிகர்கள் ஆன இவர்களை புயல் காற்று. மேகவெடிப்பு மழை, பெரு நிலச்சரிவு. சுனாமி. யாராலும் இவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. காலம் மட்டுமே திருத்தும் ..
#கரூர்கூட்டநெரிசல்பலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.