கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உயிரிழப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உயிரிழப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு - CEO அறிவுறுத்தல்



பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு - முதன்மைக் கல்வி அலுவலரின் அறிவுறுத்தல்


ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி திருவேங்கட உடையான்பட்டி தஞ்சாவூர் ஒன்றியம் பள்ளி மாணவர்கள் நீரில் முழ்கி இறந்த சோக நிகழ்வு


பள்ளி தலைமை ஆசிரியர்கள் தம் பள்ளி மாணவர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கும்படியும், ஆறு மற்றும் குளங்களில் இறங்கவேண்டாம் என அறிவுறுத்தும்படியும் வேண்டுகோள்.


தகவல்:

முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள், தஞ்சாவூர்.


குட்டையில் குளிக்கச் சென்ற 6 குழந்தைகள் உயிரிழப்பு

 


குட்டையில் குளிக்கச் சென்ற 6 குழந்தைகள் உயிரிழப்பு


ராணிப்பேட்டை - மேட்டு குன்னத்தூரில் குட்டையில் குளிக்கச் சென்ற 3 குழந்தைகள் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு


புவனேஸ்வரன்(7), சுஜன்(7), மற்றும் சிறுமி மோனி(9) ஆகிய 3 குழந்தைகளும் குட்டையில் மூழ்கி மரணம்


நீரில் மூழ்கிய 3 குழந்தைகளும் தீயணைப்பு வீரர்கள் உதவியோடு சடலமாக மீட்பு - காவல்துறையினர் விசாரணை




தஞ்சாவூர் மாவட்டம் மருதகுடியில் குளத்தில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்.


தஞ்சாவூர் மாவட்டம் திருவேங்கப்புடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ் மகன் மாதவன் (10), அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரின் மகன் பாலமுருகன் (10), ஸ்ரீதர் மகன் ஜஸ்வந்த் (8) ஆகிய மூன்று பேரும் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லாமல் மருதகுடி ஊரணி குளத்தில் குளித்துள்ளனர்.


வெகு நேரம் ஆகியும் மாதவன் உட்பட மூன்று பேரும் வீட்டிற்கு வராததால் அவர்களின் பெற்றோர்கள் தேட ஆரம்பித்துள்ளனர். அப்போது அவர்கள் மருதகுடி கிராமத்திற்கு சென்றதாக தகவல் கிடைத்து அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது ஊரணி குளத்தின் கரையில் சிறுவர்கள் அணிந்திருந்த செருப்புகளை பெற்றோர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


உடன் அந்த பகுதி மக்கள் குளத்தில் இறங்கி தேடிப் பார்த்தபோது மூன்று சிறுவர்களும் குளத்தில் மூழ்கி கிடந்தது தெரியவந்தது. உடன் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிறுவர்களை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மருத்துவமனையில் சிறுவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.


இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



RCB கிரிக்கெட் அணி வீரர்களை பார்ப்பதற்காக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு



 RCB கிரிக்கெட் அணி வீரர்களை பார்ப்பதற்காக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு


RCB வெற்றி விழா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு


உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு


பெங்களூரு: IPL போட்டியில் கோப்பையை வென்ற Royal Challengers Bangaluru அணி வீரர்களை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூடியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு



 மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் - டி.கே.சிவக்குமார்.


ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.


பெங்களூரு மற்றும் கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.


கூட்ட நெரிசல் ஏற்படும் என்றுதான் திறந்தவெளி வாகன உலாவை ரத்து செய்தோம் - கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்.




ஆர்சிபி கொண்டாட்டத்தில் துயரம்: பெங்களூரு மைதான கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு; 50 பேர் காயம்


ஐபிஎல் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றதைக் கொண்டாட இன்று (ஜூன் 4) பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்; 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


18 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதை கொண்டாட பெங்களூரு சின்னசாமி மைதானத்துக்கு வெளியே சிறுவர்கள், பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினர். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.


ஆர்சிபி அணியை பாராட்ட கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (கேஎஸ்சிஏ) நடத்தும் நிகழ்ச்சிக்காக பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே கூட்டம் கூடியதைத் தொடர்ந்து கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், காயமடைந்தவர்கள் மற்றும் மயக்கமடைந்தவர்களை சிவாஜி நகரில் உள்ள பவுரிங் மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். முன்னதாக, கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தீவிர முயற்சியில் ஈடுபட்டது.


இந்தச் சம்பவம் குறித்து பேசிய கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார், “இன்று கூடிய கூட்டம் கட்டுப்படுத்த முடியாதது. அதிக கூட்டத்துக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 5,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களை நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம். இது ஓர் இளம் துடிப்பான கூட்டம், அவர்கள் மீது நாங்கள் லத்தியைப் பயன்படுத்த முடியாது” என்று கூறினார்.


நேற்று இரவு முதல் ஆர்சிபி வெற்றியை கொண்டாடும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது. இரவு முழுவதும், காவல் துறையினர் கூட்டத்தை நிர்வகிப்பதிலும், எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்காமல் பார்த்துக் கொள்வதிலும் முழுமையாக ஈடுபட்டுள்ளனர் என்று அரசு தெரிவித்துள்ளது.


புதன்கிழமை பெங்களூருவில் தரையிறங்கிய ஆர்சிபி அணியினரை கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் வரவேற்றார். அவர் ஒவ்வொரு வீரருக்கும் பூங்கொத்துகளை வழங்கினார். குறிப்பாக விராட் கோலியை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். அவருக்கு ஆர்சிபி அணியின் கொடி மற்றும் கன்னட கொடி இரண்டையும் அவர் வழங்கினார். இதனையடுத்து, ஆர்சிபி அணியினரை கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் விதான் சவுதாவில் அவர்களைப் பாராட்டினர். தற்போது ஆர்சிபியின் வெற்றிக் கொண்டாட்டம் பெருந்துயரமாக மாறியுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

PG TRB Exam Date Announced

  முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு நடைபெறும் தேதி - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு  PG TRB Exam Date Announced  >>...