கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TET உச்சநீதிமன்றத் தீர்ப்பு - 13.09.2025 டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழுக் கூட்ட முடிவுகள்

 

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) சம்பந்தமான உச்சநீதிமன்றத் தீர்ப்பு 13.09.2025 டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழுக் கூட்ட முடிவுகள்


தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்)

மாநில அமைப்பு

நாள்: 13.09.2025

****************** 

டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் சந்திப்பு!


டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழுக் கூட்டம்


* உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திரு பி.வில்சன்,M.P அவர்களுடன் சந்திப்பு!

******************** 

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் நேற்று (13.09.2025) காலை 8:30 மணிக்கு சென்னையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்துப் பேசினார்கள். இச்சந்திப்பின் போது ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) தொடர்பாக 01.09.2025 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புத் தொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு (Review petition) தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் நிலைகுலைந்து நின்ற தமிழ்நாட்டு ஆசிரியர்களுக்கு ஆதரவாக, ஆறுதலாக மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தொடர்ந்து கருத்துத் தெரிவித்து வருவதற்கும் டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.


* மேலும், டிட்டோஜாக் பேரமைப்பு முன்வைத்த 10 அம்சக் கோரிக்கைகளில் சில கோரிக்கைகள் சார்ந்து விரைவில் உரிய ஆணைகள் பிறப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள். மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடனான சந்திப்பு திருப்திகரமாகவும், பயனுள்ளதாகவும், நம்பிக்கையூட்டுவதாகவும் அமைந்திருந்தது.இந்நிகழ்வில் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களும் பங்கேற்று ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு சார்ந்து பல்வேறு சட்டப்பூர்வக் கருத்துக்களை எடுத்துரைத்தார்கள்.டிட்டோஜாக் சார்பிலும் பல்வேறு முக்கியக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.


* அதனைத் தொடர்ந்து முற்பகல் 11:30 மணிக்கு டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகத்தில், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளரும், டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினருமான திரு இரா.தாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்புத் தொடர்பாக டிட்டோஜாக் சார்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட சட்டப்பூர்வ நடவடிக்கை சார்ந்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதனால் ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்குரிய பணிகளை டிட்டோஜாக் சார்பில் துரிதகதியில் மேற்கொள்ள ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் முன் வைக்கப்பட்டுள்ள 10 அம்சக் கோரிக்கைகள் தொடர்பாக விரைந்து உரிய ஆணைகள் பெற தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது


  * மாலை 4.00 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திரு.சங்கரன் அவர்களுடன் இணைந்து உச்சநீதிமன்ற வழக்கறிஞரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான திரு பி.வில்சன் அவர்களை டிட்டோஜாக்  மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் நேரில் சந்தித்து ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) சம்பந்தமான உச்சநீதிமன்றத் தீர்ப்புத் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. மதிப்புமிகு வழக்கறிஞர் அவர்கள் தனது மேலான ஆலோசனைகளை வழங்கினார். இப்பிரச்சனையில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.

*******************

இப்படிக்கு

 மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் டிட்டோஜாக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

8ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 17.09.2025 அன்று வெளியீடு

8ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 17.09.2025 அன்று வெளியீடு தனித்  தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 17.09.2025 அன்று வெளியீடு - ...