கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-10-2025

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-10-2025 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 10.10.2025

கிழமை:- வெள்ளிக்கிழமை

 


*திருக்குறள்:*


பால்:- பொருட்பால்

இயல்:- நட்பியல்

அதிகாரம்:- நட்பு


*குறள் : 781* 


செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் 

வினைக்கரிய யாவுள காப்பு. 


*விளக்க உரை:*


நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன, அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன.


*பழமொழி :*


One good deed teaches more than a hundred words. 


ஒரு நல்ல செயல் நூறு வார்த்தைகளை விட அதிகம் கற்பிக்கும்.


*இரண்டொழுக்க பண்புகள் :*


1.மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமாக உபயோகிப்பேன்.


2.சூரிய சக்தியை பயன்படுத்த முயற்சிப்பேன்.


*பொன்மொழி :*


பயத்தை வெல்ல விரும்பினால், வீட்டில் உட்கார்ந்து கொண்டு அதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தால் மட்டும் போதாது.வெளியில் வந்து செயலில் இறங்க வேண்டும்- டேல் கார்னகி


*பொது அறிவு :*


01.உலகின் மிகப்பெரிய விதை எது?



இரட்டைத் தேங்காய் double coconut எனப்படும் "கோகோ-டி-மெர்

(Coco de Mer)


02.ஒளியின் செல்லும் வேகத்தை முதன்முதலில் கண்டுப்பிடித்த

விஞ்ஞானி யார்?



ஓலே ரோமர் (Ole Rømer) 


*English words :*


Kind - friendly and helpful.



Music - organised sound.


*தமிழ் இலக்கணம் :*


 இரண்டு பெயர்ச்


சொற்களுக்கிடையில் ஒற்று  பெரும்பாலும் தோன்றும்

எ. கா. தண்ணீர்க் குடம். பள்ளிக் கூடம். இந்த எடுத்துக்காட்டுகளைக் கவனியுங்கள். தண்ணீர், குடம் - இரண்டும் பெயர்ச்சொற்கள். 

பள்ளி, கூடம் - இரண்டும் பெயர்ச்சொற்கள். 

இவை தொடராய் ஆகும்பொழுது இரண்டாம் சொல் எந்த வல்லின மெய்யில் தொடங்குகிறதோ அந்த ஒற்றெழுத்து மிகுந்தது. கூடுதலாய்த் தோன்றியது.


*அறிவியல் களஞ்சியம் :*


 உணவைச் சேகரித்து வைப்பது எறும்பின் வேலைகளில் மிக முக்கியமானது. ஆனால் இப்படி சேகரித்துவைக்கும் உணவு, மழைக்காலத்தில் பூசனம் பூத்து கெட்டுப்போய் விடாமல் இருக்க அவை ஒரு வேதிப்பொருளை பயன்படுத்துகின்றன. அந்த வேதிப்பொருளும், அதன் இயல்பும் தற்போது கண்டறியப்பட்டு மருந்து தயாரிப்பில், அது பயன்படுத்தப்படுகிறது.


*அக்டோபர் 10*


*உலக மனநல நாள்*



உலக மனநல நாள் (World Mental Health Day) ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று உலகளாவிய மனநலக் கல்வி, விழிப்புணர்வு மற்றும் சமூக மனப்பான்மைக்கு எதிராக வாதிடும் நாளாக கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்நாள் முதன் முதலாக 1992 ஆம் ஆண்டில் உலக மனநல மையத்தின் முன்னெடுப்பில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் 150 இற்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன. ஆத்திரேலியா போன்ற சில நாடுகளில் இந்நாள் மனநல வாரமாக ஒரு கிழமைக்கு கொண்டாடப்படுகிறது.


*நீதிக்கதை*


 *அழகிய ரோஜா செடி*



அது ஒரு வசந்த காலம். பூங்காவில் எண்ணற்ற மரம் செடி கொடிகள் இருந்தன. அதில் ஒரு ரோஜாச் செடியும், கள்ளிச்செடியும், சவுக்கு மரமும் அருகருகே இருந்தன. வசந்த கால காலை நேரம். அந்த ரோஜாச்செடி அழகாகப் பூத்திருந்தது. அதைக் கடந்து சென்ற அனைவரும் ஒரு நொடி நின்று பார்த்து சென்றனர். அந்தச் சவுக்கு மரம் ரோஜாச் செடியிடம் நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய். பூங்காவிற்கு வரும் அனைவரும் உன்னைப் பார்த்து மகிழ்ந்து செல்கின்றனர் என்றது. ரோஜாச் செடி வெட்கத்தில் நாணி அதன் இதழ்கள் மேலும் சிவந்தன. கர்வமும் தலைக்கு ஏற தொடங்கியது.




அருகே இருந்த கள்ளிச்செடியை பார்த்து இவ்வளவு கோரமான தோற்றத்தைக் கொண்ட நீ என்னருகே இருப்பது எனக்கு அவமானமாக உள்ளது என்று கூறி தள்ளிப்போக முயன்றது. ஆனால் ரோஜா செடியால் தள்ளிப்போக முடியவில்லை. இவ்வாறு தினசரி அந்த கள்ளிச்செடியை குறை கூறிக்கொண்டே இருந்தது ரோஜா செடி. ஆனால் இதற்கு அந்த கள்ளிச்செடி எந்த முக சுளிப்பும் கோவமும் படாமல் இருந்தது.


நாட்கள் ஓடின. கோடைக்காலம் சுட்டெரிக்க தொடங்கியது. கோடைக்காலத்தில் வெட்பத்தினால் பூங்காவில் பார்வையாளர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. தண்ணீர் பற்றாக்குறையும் வந்தது. பூங்கா நிறுவனத்தினரால் ஒழுங்காகத் தண்ணீர் ஊற்றிப் பராமரிக்க முடியவில்லை. ரோஜா செடியும் வாட தொடங்கியது. ஆனால் கள்ளிச்செடி எப்போதும் போல இருந்தது. குருவிகள் பல வந்து கள்ளிச்செடி மீது அமர்ந்து அதைக் கொற்றி நீர் குடித்தன. இதைக்கண்ட ரோஜா செடி சவுக்கு மரத்திடம் குருவிகள் கொற்றுவதால் கள்ளிச்செடிக்கு வலிக்காதா? என்று கேட்டது. 



சவுக்கு மரமோ கள்ளிச்செடிக்கு வலிக்கத் தான் செய்யும் இருந்தாலும் அதைத் தாங்கி கொண்டு தாகத்தில் தவிக்கும் குருவிகளுக்கு தண்ணீர் கொடுப்பது தனக்குக் கிடைத்த வரமாகக் கருதுகிறது. நீயும் கேட்டுப்பார். கள்ளிச்செடி சம்மதித்தால் குருவிகளின் உதவியினால் உனக்குத் தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறியது. கேட்க முகமில்லாமல் ஆனால் உயிர் வாழ நீர் இல்லாததால் அந்த ரோஜா செடி. கள்ளிச்செடியிடம் நீர் கேட்டது. கள்ளிச்செடியும் குருவியின் உதவியால் ரோஜா செடிக்கு நீர் கொடுத்து உதவியது. தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பிடக்கூடாது என ரோஜா செடி புரிந்துகொண்டது.


*இன்றைய செய்திகள்*


10.10.2025



⭐இலங்கை சிறையில் இருந்து மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- முதலமைச்சர் வலியுறுத்தல்


⭐ குடியிருப்புகள், தெருக்கள், சாலைகளில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்கும் பணிகளை நவம்பர் 11-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


⭐ குழந்தைகளின் மனநலனைக் காக்கும் விதமாக, 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த டென்மார்க் அரசு தடை விதித்துள்ளது.


*🏀 விளையாட்டுச் செய்திகள்*


🏀மதுரையில் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார் தோனி.

ரூ.325 கோடி செலவில் இந்த ஸ்டேடியம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மைதானத்தில் டி.என்.பி.எல்., ஐ.பி.எல்., ரஞ்சி கிரிக்கெட் போன்ற போட்டிகள் நடக்க வாய்ப்புள்ளது.


*Today's Headlines*



⭐The Chief Minister has urged that steps have to be taken to rescue fishermen from Sri Lankan prisons.


⭐ The Tamil Nadu government has issued an order stating that the removal of caste names from residential areas, streets, and roads is to be completed by November 11th.


⭐ To protect children's mental health, the Danish government has banned children under the age of 15 from using social media.



 *SPORTS NEWS*


🏀Dhoni inaugurated the cricket stadium in Madurai, which was built at a cost of Rs. 325 crores and is likely to host matches like TNPL, IPL, and Ranji cricket.


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TTSEக்கு வழங்கப்படும் உதவித்தொகை : DGE செய்திக் குறிப்பு

TTSE தேர்வுக்கு வழங்கப்படும் உதவித்தொகை : DGE செய்திக் குறிப்பு தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வுக்கு TTSE  வழங்கப்படும் உதவித்தொகை குறித்...