ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு தொடர்பாக மனித வள மேலாண்மைத் துறை பொதுத் தகவல் அலுவலர்/ அரசு சார்புச் செயலாளர் அவர்களின் விளக்கக் கடிதம், நாள் : 15-09-2025
RTI letter from the Public Information Officer/Deputy Secretary to the Government, Human Resource Management Department, regarding the Surrender of Earned Leave, Date: 15-09-2025
EL Surrender Clarification RTI Reply
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005
மனித வள மேலாண்மைத் (அவி.3) துறை.
தலைமைச் செயலகம்.
சென்னை 600 009.
தொலைபேசி: 044 2566 5252
மின்னஞ்சல்: usfr2.hrm@tn.gov.in
கடித எண்.11588824/அவி-3(2)/2025-1,நாள் 15.09.2025
அனுப்புநர்
திரு.அ.ரெ.ராஜன், பி.எஸ்.சி., பி.எட்., எம்.ஏ.
பொதுத் தகவல் அலுவலர்/
அரசு சார்புச் செயலாளர் (அவி-2).
பெறுநர்
ஐயா.
பொருள்: தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 - சில தகவல்கள் கோரியது பதில் வழங்குவது தொடர்பாக.
பார்வை: தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 இன் கீழ் பெறப்பட்ட தங்களின் மனு நாள் 28.08.2025.
(இத்துறையில் பெறப்பட்ட நாள் 03.09.2025).
பார்வையில் கண்டுள்ள மனுவின் மீது தங்களின் கவனம் ஈர்க்கப்படுவதுடன், அம்மனுவில் தாங்கள் கோரியுள்ள தகவல்கள், கேள்விகள் / தெளிவுரைகளாக உள்ளதால், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005-ன் கீழ் உள்ள பிரிவு 2(f) இன் படி அதற்கு பதிலோ/ விளக்கங்களோ/ தெளிவுரைகளோ வழங்க வழிவகையில்லை. இருப்பினும் அரசாணை (நிலை) எண்.35, மனித வள மேலாண்மைத் (அ.வி.III) துறை, நாள் 30.06.2025 இல் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.10.2025 முதல் 15 நாட்கள் ஈட்டிய விடுப்பினை முன்னர் ஒப்புவிப்பு செய்த நாளினை அடிப்படையாகக் கொண்டும், தற்போது சரண் செய்து பணப்பலன்களை பெறுவதற்கு அனுமதி அளித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அவ்வரசாணையில் 27.04.2020 முதல் 30.09.2025 வரை புதிதாகப் பணியில் சேர்ந்த பணியாளர்கள் எவ்வாறு ஈட்டிய விடுப்பினை சரண் செய்து பணப்பலன் பெறுவது குறித்தும் ஆணையிடப்பட்டுள்ளது.
மேலும், மேற்காண் இரண்டு நிகழ்வுகளுக்கும் உட்படாமல், இதுவரை ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்யாத அரசுப் பணியாளர்கள் 01.10.2025 முதல் 15 நாட்கள் ஈட்டிய விடுப்பினை அவரவர் விருப்பப்பட்ட நாளில் ஒப்படைப்பு செய்து பணப்பலன் பெற்றுக் கொள்ளலாம் என்பதனைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்கள் உண்மையுள்ள,
அ.ரெ.ராஜன்
(அ.ரெ.ராஜன்) 17.09.2025
பொதுத் தகவல் அலுவலர்/
அரசு சார்புச் செயலாளர் (அவி-2).
15.09-25

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.