ஆடுதுறை அரசுப் பள்ளியில் தடுப்புச் சுவரின்றி சிறுநீர் கழிப்பறை : இருவா் பணியிடை நீக்கம்
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள ஆடுதுறை பேரூராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிவறைகள் தடுப்புச்சுவா் இன்றி கட்டப்பட்டதால் பேரூராட்சியின் செயல் அலுவலரும், இளநிலைப் பொறியாளரும் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேம்பாட்டு மானியம் 6-ஆவது நிதிக்குழு சாா்பில் ரூ. 34 லட்சம் மதிப்பில் இருபாலருக்குமான கழிவறைகள் மற்றும் சிறுநீா் கழிப்பிடம் கட்டப்பட்டது.
இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் விமா்சனம் எழுந்தது. இதுகுறித்து அறிந்த மாவட்ட ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம் உரிய விசாரணை நடத்தி ஆடுதுறை பேரூராட்சி செயல் அலுவலா் கமலக்கண்ணன், இளநிலைப் பொறியாளா் ரமேஷ் ஆகிய இருவரையும் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்தாா்.
இதுகுறித்து பேரூராட்சித் தலைவா் ம.க.ஸ்டாலின் கூறியது: பள்ளி மேம்பாட்டு மானியம் 2022-23, 6-ஆவது நிதிக்குழு மானியம் 2023-24 ஆகிய திட்டங்களின் கீழ் ரூ.34 லட்சம் மதிப்பில் கழிவறை, சிறுநீா் கழிப்பறை ஆகியவை பள்ளியில் அரசு விதிகளின் படி கட்டப்பட்டன. கழிவறைகளுக்கு இடையேயான தடுப்புச்சுவா் வைக்க பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் கட்டப்பட்டு வருகிறது என்றாா்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.