தீபாவளியையொட்டி இனிப்பு / காரம் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டிய உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது:
உணவு பொருட்களை வணிகர்களுக்கு விற்பதற்கு முன் பாதுகாப்பு உரிமம், சான்றிதழ் பெறப்பட்டதை உறுதி செய்ய வேண்டும்.
உரிமம், சான்றிதழ் இல்லாவிடில் ரூ.10 லட்சம் அபராதம் 6 மாத சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு.
உணவு தயாரிப்புக்கு பொட்டலமிடப்பட்ட தரமான எண்ணெய், நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
உணவை கையாள்வோர் அனைவரும் மருத்துவ தகுதிச்சான்று பெற்றிருக்க வேண்டும்.
புகையிலை, உமிழ்தல் போன்ற செயல்பாடுள்ளோரை உணவு தயாரிப்பு வளாகத்தில் அனுமதிக்க கூடாது.
பணியாளர்கள் அனைவரும் தலையுறை, கையுறை மற்றும் மேலங்கி அணிந்திருக்க வேண்டும்.
உணவு பாதுகாப்பு குறித்து விதிமீறல் இருந்தால் 94440 42322 & TNFSD consumer app மூலமாக தெரிவிக்கலாம்- உணவு பாதுகாப்பு துறை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.