விடுமுறை முடிந்த பிறகு பணி ஏற்கும் நாளில் CL/ EL /ML எடுக்கலாமா?
நண்பர்களே வணக்கம் 🙏
விடுமுறை பணியாளர்களாக ( vacation staff) கருதப்படும் ஆசிரியர்கள்....
விடுமுறை முடிந்த பிறகு பணி ஏற்கும் நாளில் CL/ EL /ML எடுக்கலாமா?
1) விடுமுறை + விடுப்பு = 10 நாள் வரை எனில் CL allowed
2) கடைசி வேலை நாள் (26/9/25) அன்று பணிக்கு வந்த இருந்தால்
Vacation + EL எடுத்துக் கொள்ளலாம்...
(FR leave rules 12 பார்க்க இணைப்பு)
6, 7 & 8 மூன்று நாட்கள் EL எனில் மூன்று நாட்கள் மட்டும் விடுப்பு ( முன்னர் உள்ள 9 நாட்கள் விடுமுறை அனுமதி) ...
3) மருத்துவ விடுப்பு பொறுத்தவரை...
மருத்துவர் என்று உடல்நலக்குறைவு என சான்று வழங்குகிறாறோ அன்று முதல் விடுப்பு ஆரம்பம்... ( அதற்கு முன் உள்ளவற்றை பார்க்க வேண்டியதில்லை)
Fitness certificate உடன் விடுப்பு முடிகிறது...
ஒருவேளை fitness date அன்று விடுமுறை எனில்...
அதை பின் இணைப்பாக அனுமதி வழங்கி அடுத்த வேலை நாளன்று பணியில் சேரலாம்...
(1995 அரசுக் கடிதம் இணைத்துள்ளேன்) ...
4) EL இல் prefix ,suffix , prefix and suffix allowed...
But sandwich not allowed...
இதன் பொருள்...
வெள்ளி EL அடுத்த திங்கள் EL எனில் இடைப்பட்ட சனி/ஞாயிறு இரண்டும் EL தான்...
வெள்ளி EL அடுத்த திங்கள் பணியில் சேர்ந்தார் என்றால் மட்டுமே சனி/ஞாயிறு பின் இணைப்பு அனுமதி 🙏
5) ( விடுமுறை + விடுப்பு ) 10 நாட்களுக்கு மிகாமல் என்பது CL க்கு மட்டுமே. EL/ML க்கு கிடையாது
தகவலுக்காக...
க.செல்வக்குமார்
தலைமை ஆசிரியர்
அரசு மேல்நிலைப் பள்ளி
மோ சுப்புலாபுரம்
மதுரை 625702
8/10/25
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.