கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-11-2025

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-11-2025 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 10.11.2025

கிழமை:- திங்கள்கிழமை



*திருக்குறள்:*


பால்:- பொருட்பால்

இயல்:- அரசியல்

அதிகாரம்:- குற்றங்கூறாமை


*குறள் : 437*



செயற்பால செய்யா திவறியான் செல்வம்

உயற்பால தன்றிக் கெடும். 



*விளக்க உரை:*



செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும்.



*பழமொழி :*


keep trying until failure kneels before you. 



முயன்று கொண்டே இரு, தோல்வி உன்னிடம் மண்டியிடும் வரை.



*இரண்டொழுக்க பண்புகள் :*



1.கோபம் என் அறிவை மறைக்கும்.



2.எனவே எப்போதும் கோபப்படமாட்டேன்.



*பொன்மொழி :*



எல்லா விஷயங்களையும் நன்மையானதாகவே பார்க்க மனதை பழக்குங்கள்-  புத்தர்



*பொது அறிவு :*



01.தமிழ்நாட்டில் செஞ்சிக் கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது?



    விழுப்புரம் - Villuppuram 




2.காவிரியின் மிக நீளமான கிளை நதி எது?



அமராவதி ஆறு- Amaravathi  River



*English words :*



terrible-extremely bad



jostle -to push



*தமிழ் இலக்கணம்:*



 அத்தனை, இத்தனை, எத்தனை என்னும் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகாது.



அத்தனை + படங்கள் = அத்தனை படங்கள்


இத்தனை + பறவைகள் = இத்தனை பறவைகள்.


எத்தனை + காக்கைகள் = எத்தனை காக்கைகள்.



*அறிவியல் களஞ்சியம் :*



 பட்டுப் புழுக்கள் மல்பெரி இலையிலிருந்து வரும் "சிஸ்ஜேஸ்மோன்'' எனப்படும் வாசனைப் பொருளை மோப்பம் பிடித்து வருகின்றன. அவை பிற உணவுப் பண்டங்களை சட்டை செய்யாதிருப்பதன் காரணம் இந்த வாசனைப் பொருள் அவற்றில் இல்லாததே. ஜெனட்டிக் தொழில் நூட்பம் மூலம் சிஸ் ஜேஸ்மோன் வாசனைப் பொருளை வேறு செடிகளுக்குப் பொருத்தி அவற்றையும் பட்டுப்புழுக்களுக்கு உகந்த ஆகாரமாக மாற்றலாம்.



*நீதிக்கதை*



 *மாற்றம்*



ஒரு நாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று பார்க்க சென்றனர். அதில் உங்கள் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்த நபர் நேற்று காலமானார். அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும் என்று எழுதி இருந்தது.



நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென்றனர். சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராக செல்ல ஆரம்பித்தனர். சவப்பெட்டியை நெருங்க நெருங்க, நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவன் யாராக இருக்கும். நல்ல வேளை அவன் இறந்துவிட்டான் என்று நினைத்தபடியே முன்னோக்கி சென்றனர்.



சவப்பெட்டியினுள் எட்டி பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது. அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது. சவப்பெட்டியினுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ அவர்கள் முகமே அதில் தெரிந்தது. கண்ணாடி அருகில் ஒரு வாசகம் எழுதி இருந்தது.



உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம். நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது. உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று எழுதியிருந்தது. உங்கள் வாழ்கையை உங்கள் முதலாளியால் மாற்ற முடியாது. உங்கள் நண்பர்களால் மாற்ற முடியாது. 



நீதி :



நீங்கள் நினைத்தால் மட்டுமே உங்கள் வாழ்வை மாற்ற முடியும்



*இன்றைய செய்திகள்*


 10.11.2025



⭐11 மெட்ரோ ரெயில் நிலையங்களில் மின்சார 'மைக்ரோ' பஸ்கள்- 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். முதல் கட்டமாக 11 மெட்ரோ ரெயில் நிலையங்களில் இந்த மின்சார மைக்ரோபஸ் சேவைகளை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.



⭐தமிழகம் முழுவதும் போலீஸ் வேலைக்கு எழுத்து தேர்வு- சென்னையில் 10 மையங்களில் 9ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.



⭐ஜப்பானில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம். சுனாமி எச்சரிக்கை.



⭐வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம்- பதிவு செய்ய நேற்று 6 இடங்களில் சிறப்பு முகாம்.



⭐கிளிமஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை படைத்தான் தமிழகத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன்



*🏀 விளையாட்டுச் செய்திகள்*



🏀உலக கோப்பை செஸ் போட்டி:


அர்ஜூன் எரிகைசி,பிரக் ஞானந்தா, பிரணவ், அரிகிருஷ்ணா ஆகிய 4 இந்திய வீரர்கள் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.



*Today's Headlines*



⭐Electric micro-buses to operate at 5 Minutes intervals at 11 Metro Rail stations. It has been decided to operate these electric micro bus services at 11 Metro Rail stations in the first phase.



⭐Written exam for police jobs across Tamilnadu- more than 9 thousand candidates participated in 10 centers in Chennai. 



⭐ If the domestic dogs are not microchipped Rs. 5000 will be collected as fine –  special camps held at 6 locations yesterday for registration. 



⭐5-years-old boy from Tamilnadu sets record by climbing Mount Kilimanjaro.



⭐Tsunami warning- Powerful earthquake measuring 6.7 on the Richter scale hit  Japan. 



 *SPORTS NEWS* 



🏀World Cup Chess Tournament: 4 Indian players Arjun Erikaisi, Prak Gnananda, Pranav, Arikrishna advanced to the 4th round..


Leather World Vegan Leather 15.6 Inch Laptop Office Briefcase Messenger Bag Satchel for Men and Women, with Adjustable Strap and Expandable Bottom






Actual Price: 2999

Offer Price : 999

Benefit : Rs. 2000



Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/47OsEw7


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-11-2025

    பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-11-2025 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்   🌀🌀...