கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-11-2025

 

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-11-2025 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 13.11.2025

கிழமை:- வியாழக்கிழமை



*திருக்குறள்:*


பால்:- பொருட்பால்

இயல்:- நட்பியல்

அதிகாரம்:- பெரியாரைப் பிழையாமை


*குறள் : 896*



எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் 

பெரியார்ப் பிழைத்தொழுகு வார். 



*விளக்க உரை:*



தீயால் சுடப்பட்டாலும் ஒருகால் உயிர் பிழைத்து வாழ முடியும், ஆற்றல் மிகுந்த பெரியவரிடத்தில் தவறு செய்து நடப்பவர் தப்பி பிழைக்க முடியாது.



*பழமொழி :*


Life is what you make it. 



வாழ்க்கை நீ உருவாக்குவது போலவே இருக்கும்.



*இரண்டொழுக்க பண்புகள் :*



1.கோபம் என் அறிவை மறைக்கும்.



2.எனவே எப்போதும் கோபப்படமாட்டேன்.



*பொன்மொழி :*



உங்களை நீங்களே காத்துக் கொள்ளுங்கள் . மற்றவர்களை சார்ந்து இருக்காதீர்கள் - கௌதம புத்தர்



*பொது அறிவு :*



01. காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டியவர் யார்?



பல்லவ மன்னன் ராஜசிம்மன்


Pallava king Rajasimha



02. இந்தியாவில் உள்ள முக்கியமான துறைமுகங்கள் எத்தனை?



13-துறைமுகங்கள்


13-Ports



*English words :*



scrotching- extremely hot


shovels-tools used for digging



*தமிழ் இலக்கணம்:*



வியங்கோள் வினைமுற்றுக்குப் பின் வல்லினம் மிகாது.



வாழ்க + தமிழ் = வாழ்க தமிழ்


வாழிய + பல்லாண்டு = வாழிய பல்லாண்டு.



*அறிவியல் களஞ்சியம் :*


 அமெரிக்காவின் வாஷிங்டன் மருத்துவ பல்கலையைச் சேர்ந்த மருத்துவர்கள் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, 60 வயது நோயாளிக்கு மிகவும் சிக்கலான, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை, ரோபோவை வைத்து வெற்றிகரமாக செய்துள்ளனர். ரோபோவின் அருகில் இருந்தபடி, அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் அதனை இயக்கி வெற்றி கண்டுள்ளனர்.



*நீதிக்கதை*



*மனம் இருந்தால் போதும்*



ஒரு பிச்சைக்காரர் சாலையில் சென்ற பெரியவரிடம் பிச்சை கேட்டார். இளகிய மனம் படைத்த பெரியவர் அந்தப் பிச்சைக்காரருக்கு பிச்சையிட வேண்டும் என்ற ஆர்வத்தில், தன் கையைச் சட்டைப் பைக்குள் விட்டுத் துழாவினார். ஒரு காசுக்கூடக் கிடைக்கவில்லை. வேதனையோடு பிச்சைக்காரரிடம், பணமில்லையே தம்பி! என்றார். அதைக் கேட்ட பிச்சைக்காரரின் முகத்திலோ ஓர் ஒளி...!



ஐயா, காசு இல்லை என்பதற்காக நீங்கள் வருந்த வேண்டாம். பிச்சை கொடுப்பதைக் காட்டிலும் பெரிய உதவி ஒன்றை நீங்கள் எனக்குச் செய்துவிட்டீர்கள்! யாருமே என்னை மதிக்காதபோது தம்பி என்றல்லவா என்னை அழைத்து விட்டீர்கள், அதுபோதும் என்றார் .



பணமோ, காசோ கொடுப்பது மட்டுமல்ல. இனிமையாகப் பேசுவதும் அறம் தான். யாவருக்குமாம் பிறருக்கு இன்னுரை தானே என்பதைத் திருமூலரும் கூறியிருக்கிறார்...! எனவே பணம் இருந்தால் தான் அறம் செய்ய முடியும் என்பதில்லை... மனம் இருந்தால் போதும் ஆயிரம் அறங்கள் செய்யலாம். அன்பு மட்டுமே மிகச் சிறந்த ஆயுதம்.



*இன்றைய செய்திகள்*


 13.11.2025



⭐ ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 155 பேர் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஆண்டுதோறும் 100 அரசு ஊழியர்களை உருவாக்கும் இலக்குடன் நான் முதல்வன் திட்டம் உள்ளதாக துணை முதலமைச்சர் பெருமிதம்.



⭐உலக அளவில் காலநிலை ஆபத்து குறியீட்டில் இந்தியாவுக்கு 9-வது இடம்.



⭐ சீனாவில் புதிதாக கட்டப்பட்ட பாலம் நிலச்சரிவால் இடிந்து விழுந்தது.



*🏀விளையாட்டுச் செய்திகள்*



🏀ஷெஃபீல்ட் சீல்ட் (2025-26) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு 425 ரன்கள் வெற்றி இலக்காக விக்டோரியா அணி நிர்ணயித்தது.


விக்டோரியா அணி 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



*Today's Headlines*



⭐ In the UPSC Exam, 155 people from 


Tamil Nadu has passed, which is a great joy. The Naan Multhavan project aims to produce 100 government employees annually, Deputy CM proudly said.



⭐India ranks 9th in the global climate risk index



⭐ A newly built bridge in China collapsed due to a landslide. 



 *SPORTS NEWS*


🏀The Sheffield Shield (2025-26) series is underway in Australia. Victoria set a target of 425 runs for New South Wales to win. Victoria won by 300 runs.



Milton Aura 1000 Thermosteel Bottle, 1 Litre, Dark Blue | 24 Hours Hot and Cold




Amazon வலைதள முகவரி இணைப்பு:


https://amzn.to/3LyO48X


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2026ஆம் ஆண்டு அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு

2026ஆம் ஆண்டு அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு புத்தாண்டு தினம் – ஜனவரி 1 (வியாழன்) பொங்கல் – ஜனவரி 15 (வியாழன்) திருவள்ளுவர் தினம் – ஜனவரி 1...