கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அன்பு என்பது என்ன? - இன்றைய சிறுகதை



 அன்பு என்பது என்ன? - இன்று ஒரு சிறு கதை


ஒரு நாள் வகுப்பறையில் ஆசிரியை மாணவர்களிடம், அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று கூறி நான்கு மாணவிகளை அனுப்பினார்.


திரும்பி வந்த மாணவிகளில் ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது. இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் மலர் இருந்தது. மற்றொரு மாணவியிடம் ஒரு சிறு பறவை இருந்தது. நான்கு மாணவிகளில் முதலில் கிளம்பிப்போன மாணவி கடைசியில் வெறும் கையுடன் திரும்பி வந்தாள். ஆசிரியையிடம் "நீ ஏன் எதையும் கொண்டு வரவில்லை" என்று கேட்டார.


அதற்கு அந்த மாணவி, "நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன். குஞ்சுப்பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன்" என்று பதில் கூறினாள்.


மாணவி கூறிய பதிலைக் கேட்டவுடன் ஆசிரியை அந்த மாணவியை அணைத்துக் கொண்டார்.


"அன்பு என்றால் இது தான். ஒன்றும் கொடுக்க வேண்டாம். எதையும் பறிக்காமல் இருந்தால் அதுவே போதும்" என்றார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

12-10-2025 அன்று நடைபெற்ற PGTRB தேர்வு முடிவுகள் வெளியீடு

    கடந்த மாதம் 12-10-2025 அன்று நடைபெற்ற முதுகலை ஆசிரியர் PGTRB தேர்வு முடிவுகள் வெளியீடு - ஆசிரியர் தேர்வு வாரியம் பத்திரிகை செய்தி வெளியீ...