தஞ்சாவூர் அருகே ஆலங்குடி அரசு தொடக்கப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றும் காவியா, கொலை செய்யப்பட்டார்.
நேற்று காலை பள்ளிக்குச் செல்லும் போது, அஜித்குமார் என்பவர் கொலை செய்துள்ளார். காதல் விவகாரத்தில் இக்கொலை நடந்துள்ளதாக தகவல்
கொலை செய்த அஜித்குமார் காவல் நிலையம் சென்று சரணடைந்துள்ளார். அவரை கைது செய்து விசாரணை
தஞ்சாவூர் அருகே திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை கொலை: காதலன் கைது
தஞ்சாவூர் அருகே திருமணத்துக்கு மறுத்த ஆசிரியையை, காதலன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோயில் அருகே உள்ள மேல களக்குடியைச் சேர்ந்தவர் காவியா (26). இவர் ஆலங்குடி அரசு தொடக்கப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரும் அதே ஊரில் அவரது சமூகத்தை சேர்ந்த அஜித்குமார் (29) என்பவரும் கடத்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் காவியாவின் பெற்றோர் வற்புறுத்தலின்படி, அவரது உறவினருக்கு திருமணம் செய்து வைக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்துள்ளனர்.
தனக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட தகவலையும், அதற்கான போட்டோக்களையும் அஜித்குமாருக்கு காவியா காட்டியதாகவும். இதனால் அஜித் குமார் கோபத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று (நவம்பர் 27) காலை காவியா பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, மாரியம்மன் கோவில் கொத்தட்டை காலனி ராமகிருஷ்ண மடம் அருகே சென்றபோது அவரை அஜித்குமார் வழி மறித்து அவரிடம் தகராறில் ஈடுபட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவியாவை குத்தி கொலை செய்துள்ளார்.
காவியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை அடுத்து, அங்கு விரைந்து சென்ற அம்மாபேட்டை போலீஸார், காவியாவின் உடலை கைப்பற்றி தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக பாபநாசம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.