சிறப்பு தீவிர வாக்காளர் (SIR) திருத்தப் பட்டியல் முக்கிய அறிவிப்புகள்
தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரின் செய்தி வெளியீடு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
*1)* கணக்கீட்டுப் படிவங்களை பெற்றுக்கொண்ட வாக்காளர்கள், இறுதி நாளான டிசம்பர் *-4* வரை காத்திருக்காமல்...
படிவங்களை, உடனடியாக பூர்த்தி செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
*2)* கணக்கீட்டுப் படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்துள்ள அனைத்து வாக்காளர்களின் பெயர்களும், வரும் டிசம்பர் *9*-ம் தேதி வெளியிடப்படும் 'வரைவு வாக்காளர் பட்டியலில்' இடம்பெறும்.
*3)* கடந்த *-2002* மற்றும் *-2005* வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயர் அல்லது தங்களது உறவினரின் பெயரை கண்டுபிடிக்க முடியாமல்...
தங்களுடைய விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து கொடுக்கும் வாக்காளர் பெயரும், டிசம்பர் *9*-ம் தேதி வெளியிடப்படும் 'வரைவு வாக்காளர் பட்டியலில்' இடம்பெறும்.
*4)* வரும் டிசம்பர் *4*-ம் தேதிக்குள், கணக்கீட்டுப் படிவங்களை பூர்த்தி செய்து தராத வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது.
*5)* *BLO*, *3* முறை வீடு தேடிச் சென்றும் கணக்கீட்டுப் படிவம் பெறாத வாக்காளரின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது.
*6)* வரும் டிசம்பர் *9*-ம் தேதி வெளியிடப்படும் 'வரைவு வாக்காளர் பட்டியலில்' பெயர் இடம் பெறாதவர்கள்...
டிசம்பர் *9*-ம் தேதி முதல் ஜனவரி *8* -ம் தேதி வரை, படிவம் *6*-உடன் உறுதிமொழிப் வடிவத்தையும் இணைத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதியதாக விண்ணப்பிக்கலாம்.
*7)* தங்கள் பாகத்தில் உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில், ஆட்சேபனைக்குரிய - சம்பந்தமில்லாத வாக்காளர் பெயர் இடம் பெற்றிருந்தால், அந்த பாகத்தில் பட்டியலில் உள்ள வாக்காளர் எதிர்ப்பு தெரிவிக்கலாம்.
*8)* டிசம்பர் *9* -ம் தேதி முதல் ஜனவரி *31*-ம் தேதி வரை *"Notice Period"* காலமாகும்.
இந்த காலகட்டத்தில், வாக்காளரின் தகுதி ஆய்வு செய்யப்பட்டு தேவை ஏற்படின் சம்பந்தப்பட்ட வாக்காளருக்கு *BLO* மூலமாக அறிவிப்பு வழங்கப்பட்டு விசாரணை நடத்தப்படும்.
*9)* வாக்காளரின் அனைத்து உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகள் பரிசீலனை செய்யப்பட்டு...
வரும் பிப்ரவரி *7*-ம் தேதி, 'இறுதி வாக்காளர் பட்டியல்' வெளியிடப்படும்.
*- தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையம் செய்திக்குறிப்பு வெளியீடு!*
டிசம்பர் 4க்குள் SIR படிவம் கொடுக்காவிடில் வரைவு பட்டியலில் பெயர் இருக்காது
3 முறை வீட்டுக்கு வந்தும் படிவம் வழங்க முடியாதவர்களின் பெயர் இடம்பெறாது
வாக்காளர்கள் உரிமை கோரலுக்கு டிசம்பர் 9 - ஜனவரி 8 வரை விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.