Calculatorல் அழுத்தும் எண் எப்படி ஒளிர்கிறது?
ஒரு கால்குலேட்டரில்
ஏதாவது எண்ணை அழுத்தினால் அந்த எண் திரையில் தெரியும்.
அந்த திரை ஒரு ஆச்சரியம்தானே...
எப்படி நான் அழுத்தும் எண் திரையில் ஒளிர்கிறது என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா...
ஆங் அது எப்படியோ வருது... அல்லது அது எப்படியோ வருமாய் இருக்கும் என்று கடந்து விடுவோம்.
இப்போது இருக்கும் திரைகளை LED , LCD , OLED என்று நிறைய சொல்கிறோம்.
ஆனால் முதன் முதலில் ஒளிரும் திரைக்கு உறுதுணையாக இருந்தது Nixie Tube என்னும் ஒளிக்கருவி மட்டுமே...
இதை கண்டுபிடித்தவர் David Hagelbarger என்னும் விஞ்ஞானி.
Nixie Tube வடிவமைப்பை புரிந்து கொள்ளுதல் எளிது.
ஒரு கண்ணாடி குடுவைக்குள் எண் 1 முதல் 9 ஒன்பது எண்கள் இருக்கும். அந்த எண்கள் இப்போதைய Tube light அமைப்பில் இருக்கும்.
1 - வடிவத்தில் ஒரு கலர் டியூப் லைட்
2 வடிவத்தில் ஒரு கலர் டியூப் லைட்
இப்படி 9 வரை ஒரு கண்ணாடி குடுவையில் இருக்கும்.
நாம் கேல்குலேட்டரில் 1 + 3 என்று எழுத்தினால் அதில் உள்ள சர்கியூட் முழுமையாகி இந்த Nixie Tubeல் உள்ள நான்கு என்கிற எண்ணுக்கு பவர் கொடுத்து அதை மட்டும் ஒளிர வைக்கும்.
இப்படித்தான் முதல் Electronics Calculatorல் Nixie Tube களே ஒளித்திரையாகி இருந்திருக்கின்றன.
( படம் பார்க்க )
கூகிளில் Nixie Tube என்று தேடினால் நிறைய வீடியோக்கள் படங்கள் வரும். அதைப் பார்த்தாலே பரவசப்பட்டு போவீர்கள்.
இந்த Nixie Tube பற்றி மாணவர்களுக்கு சொல்லலாம். கொஞ்சம் அறிவு புத்துணர்ச்சி அடைவார்கள்.
ஆறாம் வகுப்பு தாண்டிய எந்த மாணவருக்கும் Nixie Tube பற்றி சொல்லாம்.
இந்த Nixie Tube க்கு இந்த எண்ணை ஒளிர விடு என்கிற உத்தரவை பிறப்பிப்பது யார்? இந்த கேள்வியை மாணவர்களிடம் கேளுங்கள்.
தெரியாது என்பார்கள்.
அந்த உத்தரவை பிறப்பிப்பது Micro controller அல்லது IC என்று சொல்லுங்கள். அதுவானது மனிதனின் மூளை போன்றது என்று சொல்லுங்கள்.
அடுத்து சொல்லுங்கள்.
இந்த Nixie Tube ஐ ஒளிர வைக்க அதிகம் கரெண்ட் தேவை ( பவர் )
ஆனால் இந்த மூளையான Integrated Circuit ஐ செயல்பட வைக்க கம்மியான கரெண்ட் மட்டும்தான் வேண்டும்.
அப்படியானால் Nixie Tube எப்படி செயல்படும் ... ?
முதலில் மூளைக்கு ரெசிஸ்டர், கெப்பாசிட்டர் முலமாக கரெண்ட் பவரை குறைத்து கொடுப்பார்கள்.
மூளையான மைக்ரோ கண்ட்ரோலர் / IC செயல்படும். அது முடிவெடுத்த உடன் அதனால் Nixie Tube ஐ இயக்க முடியாது.
காரணம் முடிவெடுத்த பல்ஸ் மிக குறைவாக இருக்கும். அப்படியானால் Nixie Tube ஐ ஒளிர வைக்க மைக்ரோ கண்ரோலர் முடிவெடுத்த பல்ஸை இன்னும் அதிகப்படுத்தும் ஒரு Driver IC வேண்டும். அது மைக்ரோ கண்ட்ரோலர் / IC க்கும் Nixie Tube க்கும் இடையே பாலமாக செயல்படும்.
மூன்று சீட்டுகள் இருக்கின்றன.
சீட்டு ஒன்று நார்மல் உயரம்
சீட்டு இரண்டு கொஞ்சம் உயரம்
சீட்டு மூன்று நல்ல உயரம்.
இதில் சீட்டு ஒன்றையும் சீட்டு மூன்றையும் அடுத்து அடுத்து நிற்க வைத்தால் சீட்டு ஒன்றால் சீட்டு மூன்றை தள்ளிவிட முடியாது.
ஆனால் நடுவில் இரண்டு சீட்டுக்கும் நடு உயரத்தில் இருக்கும் சீட்டு இரண்டை வைத்தால்,
சீட்டு ஒன்று சீட்டு இரண்டை தள்ளும்,
சீட்டு இரண்டு மிக உயரமான சீட்டை தள்ளும்.
அதே கதைதான் இங்கும்.
மைக்ரோ கண்ட்ரோலர் / IC யால் Nixie Tube ஐ நேரடியாக ஒளிர வைக்க முடியாது. அதனால் முடிவெடுக்கும் பல்ஸ் மட்டுமே வெளியிட முடியும்.
அந்த நடு சீட்டு செய்யும் வேலையைத்தான் Driver IC செய்கிறது....
இப்படியே மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கலாம்.
இதை ஒரு ஆசிரியரோ பெற்றோரோ வெறும் பதினைந்து நிமிடத்தில் மாணவர்களுக்கும், சிறார்களுக்கும் சொல்லிக் கொடுக்க முடியும்.
ரொம்ப எல்லாம் நுணுக்கமாக உள்ளே போய் அவர்களை பயமுறுத்த வேண்டாம்.
மேலோட்டமாக சொன்னாலே போதுமானது.
Digital Display என்கிறோமே அதன் முதல் தாய் இந்த Nixie Tube என்று அதன் படத்தை நன்றாக மாணவர்களுக்கு காட்டி, அதன் உள்ளே இருக்கும் ஒன்பது எண்களையும் கூர்ந்து பாருங்கள் என்று மாணவர்களுக்கு காட்டி, அந்த Nixie Tube எப்படி உத்தரவை பெறுகிறது என்றும் சொல்லிக் கொடுத்தால் மாணவர்கள் சிறுவயதிலேயே எலக்டிரானிக்ஸ் துறையில் ஆர்வமாக யோசிக்க ஆரம்பிப்பார்கள்.
இப்படி Nixie Tube ஐ வைத்து முதன் முதலில் வந்த Digital Display பற்றிய அறிவை மாணவர்களோ சிறார்களோ பெறுதல் என்பது ஒரு சிந்தனையில் Turning Point ஏற்படுத்தும் அறிவாகும்...
இன்றைய ஏ.ஐ காலத்தில் இதை எல்லாம் ஏ.ஐயில் போட்டால், வீடியோ சர்ச்சில் போட்டாலே தெளிவாக சொல்லிக் கொடுக்குமாய் இருக்கும்.
இருந்தாலும் ஒரு ஆசிரியராக, பெற்றோராக மாணவர்களுக்கு, சிறார்களுக்கும் கண்கள் விரிய, உயிரோட்டமான குரலில், இந்த Nixie Tube பற்றி ஒன் டு ஒன் சொல்லிக் கொடுக்கும் போது ஏற்படும் நல் விளைவு போன்ற பாசிட்டி அறிவு வைப் முக்கியமானது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.