இடுகைகள்

Technology லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காணாமல் போன போன் ஆஃப்லைனில் இருந்தாலும் கண்டுபிடிக்கலாம் - கூகுள் ஃபைண்ட் மை டிவைஸ் அப்டேட்...

படம்
காணாமல் போன போன் ஆஃப்லைனில் இருந்தாலும் கண்டுபிடிக்கலாம் - கூகுள் ஃபைண்ட் மை டிவைஸ் அப்டேட்... கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபைண்ட் மை டிவைஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த அப்டேட் ஆப்பிளின் ஃபைண்ட் மை டிவைஸ் வழங்குவதை போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. புது அப்டேட் மூலம் ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களின் காணாமல் போன சாதனங்களை எளிதில் கண்டறிய முடியும். குறிப்பிட்ட சாதனம் ஆஃப்லைனில் இருந்தாலும் இந்த அம்சம் சீராக இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் ஃபைண்ட் மை டிவைஸ் போன்றே, கூகுளின் அப்டேட் செய்யப்பட்ட ஃபைண்ட் மை டிவைஸ் சேவையும் ப்ளூடூத் சிக்னல்களை கொண்டு காணாமல் போன சாதனங்களை கண்டறியும். இதன் மூலம் அருகாமையில் உள்ள ஆண்ட்ராய்டு சாதனங்களில் இண்டர்நெட் இணைப்பு இல்லை என்றாலும், கண்டறிய முடியும். தற்போது இந்த அம்சம் ஆண்ட்ராய்டு 9 மற்றும் அதற்கு பின் வெளியான வெர்ஷன்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. கூடுதலாக பிக்சல் 8, பிக்சல் 8 ப்ரோ என தேர்வு செய்யப்பட்ட சாதனங்களிலும் இந்த அம்சம் உள்ளது. மேலும், காணாமல் போன சாதனம் தொலைந்து போனாலும் அ

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் புதிய பரிமாணம் - ரேபிட் நிறுவனத்தின் புதிய கருவி...

படம்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் புதிய பரிமாணம் - ரேபிட் நிறுவனத்தின் புதிய கருவி... Pocket Companion & Future of Human Machine Interface அமெரிக்காவின் ஸ்டார்ட் அப் நிறுவனமான ரேபிட் இன்க். (Rabbit inc.) லாஸ் வேகாசில் நடந்த சிஇஎஸ் - 2024 (CES - 2024) நிகழ்ச்சியில் தனது புதிய செய்யறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி தன் போட்டியாளர்களை மிரளவைத்துள்ளது. கையடக்க கருவி ஒன்றினை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள நிறுவனம் அதன் பயன்பாடுகளைக் காணொலி ஒன்றின் மூலம் விளக்கியுள்ளது. இந்தக் கையடக்க கருவியின் மூலம் குரலைக் கொண்டு பல வேலைகளைச் செய்யலாம். ஏற்கனவே இதே வசதியை அறிமுகம் செய்த மற்ற நிறுவனங்கள், வெறும் பாடல்கள் கேட்பதற்கும், கடிகாரத்தில் அலாரம் வைப்பதற்குமே பயன்பட்டு வந்த நிலையில், இந்த புதிய ரேபிட், அதையும் தாண்டி பல வேலைகளைச் செய்கிறது. அதாவது, இந்தக் குட்டி கருவியிடம் நீங்கள் 'எனக்கு அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு செல்ல ஒரு கார் வேண்டும், அப்படியே வீட்டிற்கு ஒரு பிரியாணி ஆர்டர் செய்துவிடு. அதோடு நான் விளையாட வரவில்லை என என் நண்பர்களிடம் சொல்லிவிடு' எனச் சொன்னால் போதும், உங்களது

5ஜி சேவைகளுக்கு 5-10% கூடுதல் கட்டணம் வசூலிக்க ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் முடிவு...

படம்
 5ஜி சேவைகளுக்கு 5-10% கூடுதல் கட்டணம் வசூலிக்க ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் முடிவு...

அமெரிக்காவில் புதிய ஆப்பிள் வாட்ச்களுக்கு தடை...

படம்
அமெரிக்காவில் புதிய ஆப்பிள் வாட்ச்களுக்கு தடை... ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ள Series 9, Ultra 2 மாடல் ஸ்மார்ட் வாட்ச்கள் விற்பனைக்கு அமெரிக்கா தடை விதிப்பு.  வாட்ச்-ல் பயன்படுத்தப்பட்டுள்ள 'Pulse Oximeter' தொழில்நுட்பத்துக்கான காப்புரிமை மீறப்பட்டதாக புகார். காப்புரிமையை Masimo என்ற நிறுவனம் கையகப்படுத்தியுள்ள நிலையில், மாற்று தொழில்நுட்பம் அங்கீகரிக்கப்படும் வரை தடை உத்தரவை தற்காலிகமாக நிறுத்தக் கோரி ஃபெடரல் நீதிமன்றத்தில் ஆப்பிள் மேல்முறையீடு. ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ள Series 9, Ultra 2 மாடல் ஸ்மார்ட் வாட்ச்கள் விற்பனைக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்திற்கும் - மசிமோ என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கும் நீண்ட காலமாக காப்புரிமை சிக்கல் இருந்து வருகிறது. ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை கணக்கிட்டு சொல்லும்’ Pulse Oximeter' sensor தொழில்நுட்பம்தான் ஆப்பிள் மற்றும் மசிமோ மருந்து நிறுவனத்தின் இடையே ஏற்பட்டு உள்ள பிரச்னை என கூறப்படுகிறது. வாட்ச்-ல் பயன்படுத்தப்பட்டுள்ள 'Pulse Oximeter' தொழில்நுட்பத்துக்கான காப்புரிமை மீறப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டு

ஜார்கண்டில், பள்ளி வளாகத்தில் இருந்து மட்டுமே ஆசிரியர்கள் வருகையைக் குறிக்க அனுமதிக்கும் புதிய தொழில்நுட்பம் (In Jharkhand, new technology allows teachers to mark attendance only from school premises)...

படம்
ஜார்கண்டில், பள்ளி வளாகத்தில் இருந்து மட்டுமே ஆசிரியர்கள் வருகையைக் குறிக்க அனுமதிக்கும் புதிய தொழில்நுட்பம் (In Jharkhand, new technology allows teachers to mark attendance only from school premises)... ராஞ்சி: மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு ஆசிரியர்களும் 2023 ஜனவரி முதல் "ஜியோஃபென்சிங்" என்ற தலைப்பில் அந்தந்த பள்ளி வளாகத்திற்குள் 100 மீட்டர் வரம்பிற்குள் தங்கள் வருகையைக் குறிக்க வேண்டும் என்று மாநில பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை தெரிவித்துள்ளது.  புதிய தொழில்நுட்பம் ஆசிரியர்களின் இருப்பை பச்சை விளக்கு மற்றும் அவர்கள் இல்லாதது அந்தந்த ஸ்மார்ட்போன்களில் சிவப்பு ஒளியாகக் குறிக்கும் மற்றும் அவர்கள் சரியான நேரத்தில் வருகை மற்றும் வெளியேறுவதை உறுதி செய்யும்.  தற்போது, ​​ஆசிரியர்கள் தங்கள் தொலைபேசியில் நிறுவப்பட்ட இ-வித்யா வாஹினி செயலி மூலம் தங்கள் வருகையைக் குறிக்கின்றனர். ஆப்லைன் மற்றும் ஆன்லைன் வருகைத் தரவை ஆப்ஸ் கைப்பற்ற முடியும், ஆனால் ஆசிரியர்கள் இணையம் மூலம் மட்டுமே தரவைப் புதுப்பிக்க முடியும்.  மொபைல் போன்களின் இருப்பிடத்தையும் ஆப்ஸ் கண்டறிய முடியாது. இப்போது, ​​இ

பணிப்பதிவேடுகள் ஸ்கேன் செய்யப்பட்டு அப்டேட் செய்யப்படும் தொழில்நுட்ப முறை (Service Registers - Scanning and Updating Technology)...

படம்
>>> பணிப்பதிவேடுகள் ஸ்கேன் செய்யப்பட்டு அப்டேட் செய்யப்படும் தொழில்நுட்ப முறை (Service Registers - Scanning and Updating Technology) - காணொளி...

அடுத்த தேர்தலில் 'ரிமோட் ஓட்டிங்' முறை அறிமுகம்...

படம்
 அடுத்த நாடாளுமன்ற தேர்தலில், 'ரிமோட் ஓட்டிங்'முறை அறிமுகப்படுத்தப்படும்,'' என, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நம்பிக்கை தெரிவித்தார்.  டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பேசியதாவது: தேர்தலில் ஓட்டளிக்கும் முறையில், புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளோம். இந்த தொழில்நுட்பத்தை, சென்னை, ஐ.ஐ.டி., யுடன் இணைந்து, ஆய்வு செய்து வருகிறோம்.  Remote Voting எனப்படும், இந்த புதிய தொழில்நுட்பம் வாயிலாக, தேர்தலின்போது, தங்கள் தொகுதியில் உள்ள ஓட்டுச் சாவடிக்கு நேரில் செல்லாமல், வாக்காளர்களால் ஓட்டளிக்க இயலும். நாட்டின் எந்த பகுதியில் இருந்தாலும், அங்கு, அதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்துக்குச் சென்று, வாக்காளர்கள் ஓட்டளிக்கலாம்.   இந்த புதிய தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதற்கான சோதனை முயற்சி, இன்னும், இரண்டு அல்லது மூன்று மாதங்களில் துவங்க உள்ளது. நாடாளுமன்றத்துக்கு, 2024ல் நடக்கும் தேர்தலில், ரிமோட் ஓட்டிங் முறையை அறிமுகப் படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடி, வாக்காளர

இனி சார்ஜ் போட கூட போனை கீழே வைக்க வேண்டாம் - வருகிறது புதிய தொழில்நுட்பம்...

படம்
 வயர்லெஸ் முறையில் பல சாதனங்களை சார்ஜ் செய்யக்கூடிய ஒரு புதிய சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதாக mi xiaomi நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் நீங்கள் விளையாடும்போது அல்லது வீடியோக்களைப் பார்க்கும்போது சார்ஜ் தீர்ந்துவிட்டால், நீங்கள் வயர்டு அல்லது வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்ய போனை ஒரே இடத்தில் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதற்காக, சியோமி அறிமுகம் செய்துள்ள தொழில்நுட்பத்தின் பெயர் என்ன? இது எப்படி செயல்படுகிறது? என்பதையெல்லாம் இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம் வாங்க. எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் ஸ்மார்ட் சாதனங்களை சார்ஜ் செய்ய ரிமோட் வயர்லெஸ் சார்ஜிங் நுட்பமான ‘Mi ஏர் சார்ஜ்’ எனும் தொழில்நுட்பத்தை சியோமி அறிமுகம் செய்துள்ளது. இந்த தொழில்நுட்பம் செயல்பட, நீங்கள் உங்கள் தொலைபேசியை ஒரே இடத்தில் வைக்க வேண்டும் என்ற அவசியமில்லை, ஆனால் சார்ஜருக்கு அருகில் இருக்க வேண்டுமென்பது அவசியம், இதனால் உங்கள் தொலைபேசியை வயர் ஏதும் இல்லாமல் சார்ஜ் செய்யலாம். ரிமோட் சார்ஜிங் நுட்பத்தைப் பற்றி நிறைய நிறுவனங்கள் பேசியுள்ளன, ஆனால் அதை முதலில் நி

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...