கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தொழில்நுட்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொழில்நுட்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

The deadline to apply for the typing test is January 31

 


தட்டச்சு தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 31 வரை அவகாசம்


The deadline to apply for the type writing test is January 31


தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக தொழில்நுட்ப கல்வித்துறை அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக தொழில்நுட்ப கல்வி ஆணையரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான டி.ஆபிரகாம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:


தொழில்நுட்ப கல்வித்துறையால் தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் ஆகிய வணிகவியல் தேர்வுகள் வரும் பிப்ரவரி மாதம் நடத்தப்பட உள்ளன. இத்தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு, ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பத்தில் பிப்ரவரி 2 முதல் 4-ம் தேதி வரை திருத்தம் செய்துகொள்ளலாம். இதற்கு எவ்வித அபராத கட்டணமும் செலுத்த தேவையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


ICT Training for PG Teachers - SCERT Director's Proceedings...


 மாநில அளவில்‌ முதுகலைப்‌ பட்டதாரி ஆசிரியர்களுக்கான ICT கணினி மற்றும்‌ தொழில்நுட்பம்‌ சார்ந்த பயிற்சி - மாநிலக்‌ கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவன இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌.000523/எஃப்‌4/2023 நாள்‌: 05.09.2024...



மாநிலக்‌ கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவன இயக்குநரின்‌ செயல்முறைகள்‌. சென்னை.06.

ந.க.எண்‌.000523/எஃப்‌4/2023 நாள்‌: 05.09.2024.


பொருள்‌: சென்னை.6 மாநிலக்‌ கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவனம்‌ - செயல்திறன்மிகு வகுப்பறை மற்றும்‌ கணினி தொழில்நுட்பவியல்‌ சார்ந்த பணித்திறன்‌ மேம்பாட்டு பயிற்சி மாநில அளவில்‌ திருச்சியில்‌ நடத்துதல்‌ - பயிற்சியில்‌ பங்கேற்கும்‌ கருத்தாளர்களை பணியிலிருந்து விடுவித்தல்‌ - அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ மற்றும்‌ மாவட்ட ஆசிரியர்‌ கல்வி மற்றும்‌ பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுறுத்துதல்‌ - தொடர்பாக.

பார்வை: 1. இந்நிறுவன இயக்குநரின்‌ அறிவுரை நாள்‌. 09.2024.

2. இந்நிறுவன இணை இயக்குநரின்‌ (பயிற்சி) அறிவுரை, நாள்‌.03.09.2024.


மாநிலக்‌ கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவனம்‌ மற்றும்‌ ஒருங்கிணைந்த 
பள்ளிக்‌ கல்வி இணைந்து ஆசிரியர்களுக்கு பனித்திறன்‌ மேம்பாட்டு பயிற்சிகள்‌ 2024 . 2025 ஆம்‌ கல்வியாண்டில்‌ நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத்‌ தொடர்ந்து தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வித்‌ துறை செயலர்‌ அவர்களது வழிகாட்டுதலின்படி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதற்கட்டமாக செப்டம்பர்‌ 2024 ஆம்‌ மாதத்தில்‌ செயல்திறன்மிகு வகுப்பறை (ICT) மற்றும்‌  கணினி தொழில்நுட்பவியல்‌ சார்ந்த பணித்திறன்‌ மேம்பாட்டு பயிற்சியானது மாநில அளவில்‌ நேரடியாக கீழ்கண்டவாறு நடைபெறவுள்ளது.

மாநில அளவில்‌ முதுகலைப்‌ பட்டதாரி ஆசிரியர்களுக்கான ICT கணினி மற்றும்‌ தொழில்நுட்பம்‌ சார்ந்த பயிற்சி...



>>> மாநிலக்‌ கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவன இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌.000523/எஃப்‌4/2023 நாள்‌: 05.09.2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


 



காணாமல் போன போன் ஆஃப்லைனில் இருந்தாலும் கண்டுபிடிக்கலாம் - கூகுள் ஃபைண்ட் மை டிவைஸ் அப்டேட்...



காணாமல் போன போன் ஆஃப்லைனில் இருந்தாலும் கண்டுபிடிக்கலாம் - கூகுள் ஃபைண்ட் மை டிவைஸ் அப்டேட்...


கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபைண்ட் மை டிவைஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த அப்டேட் ஆப்பிளின் ஃபைண்ட் மை டிவைஸ் வழங்குவதை போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.


புது அப்டேட் மூலம் ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களின் காணாமல் போன சாதனங்களை எளிதில் கண்டறிய முடியும். குறிப்பிட்ட சாதனம் ஆஃப்லைனில் இருந்தாலும் இந்த அம்சம் சீராக இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் ஃபைண்ட் மை டிவைஸ் போன்றே, கூகுளின் அப்டேட் செய்யப்பட்ட ஃபைண்ட் மை டிவைஸ் சேவையும் ப்ளூடூத் சிக்னல்களை கொண்டு காணாமல் போன சாதனங்களை கண்டறியும்.


இதன் மூலம் அருகாமையில் உள்ள ஆண்ட்ராய்டு சாதனங்களில் இண்டர்நெட் இணைப்பு இல்லை என்றாலும், கண்டறிய முடியும். தற்போது இந்த அம்சம் ஆண்ட்ராய்டு 9 மற்றும் அதற்கு பின் வெளியான வெர்ஷன்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. கூடுதலாக பிக்சல் 8, பிக்சல் 8 ப்ரோ என தேர்வு செய்யப்பட்ட சாதனங்களிலும் இந்த அம்சம் உள்ளது. மேலும், காணாமல் போன சாதனம் தொலைந்து போனாலும் அதனை ஃபைண்ட் மை டிவைஸ் மூலம் கண்டுபிடித்துவிட முடியும்.


புதிய ஃபைண்ட் மை டிவைஸ் நெட்வொர்க்கின் நோக்கம் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தான் என்று கூகுள் குறிப்பிட்டுள்ளது. காணாமல் போன சாதனங்களின் லொகேஷன் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்டு விடும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இதன் மூலம் கூகுள் மற்றும் இதரானவர்கள் லொகேஷன் விவரங்களை இயக்க முடியாது.


செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் புதிய பரிமாணம் - ரேபிட் நிறுவனத்தின் புதிய கருவி...



செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் புதிய பரிமாணம் - ரேபிட் நிறுவனத்தின் புதிய கருவி...


Pocket Companion & Future of Human Machine Interface


அமெரிக்காவின் ஸ்டார்ட் அப் நிறுவனமான ரேபிட் இன்க். (Rabbit inc.) லாஸ் வேகாசில் நடந்த சிஇஎஸ் - 2024 (CES - 2024) நிகழ்ச்சியில் தனது புதிய செய்யறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி தன் போட்டியாளர்களை மிரளவைத்துள்ளது.


கையடக்க கருவி ஒன்றினை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள நிறுவனம் அதன் பயன்பாடுகளைக் காணொலி ஒன்றின் மூலம் விளக்கியுள்ளது.


இந்தக் கையடக்க கருவியின் மூலம் குரலைக் கொண்டு பல வேலைகளைச் செய்யலாம். ஏற்கனவே இதே வசதியை அறிமுகம் செய்த மற்ற நிறுவனங்கள், வெறும் பாடல்கள் கேட்பதற்கும், கடிகாரத்தில் அலாரம் வைப்பதற்குமே பயன்பட்டு வந்த நிலையில், இந்த புதிய ரேபிட், அதையும் தாண்டி பல வேலைகளைச் செய்கிறது.


அதாவது, இந்தக் குட்டி கருவியிடம் நீங்கள் 'எனக்கு அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு செல்ல ஒரு கார் வேண்டும், அப்படியே வீட்டிற்கு ஒரு பிரியாணி ஆர்டர் செய்துவிடு. அதோடு நான் விளையாட வரவில்லை என என் நண்பர்களிடம் சொல்லிவிடு' எனச் சொன்னால் போதும்,


உங்களது ஊபர் (uber) கணக்கிற்குள் சென்று உங்கள் முகவரிக்கு ஒரு காரை அதுவே பதிவு செய்து அனுப்பிவிடும், உங்களுக்கு விருப்பமான கடையில் பிரியாணி ஆர்டர் செய்து வீட்டு முகவரிக்கு அனுப்பிவிடும். உங்களை விளையாட அழைத்த அனைத்து நண்பர்களுக்கும் நீங்கள் வரமாட்டீர்கள் என குறுஞ்செய்தியும் அனுப்பிவிடும்.


வெறும் குரல்வழிக் கட்டுப்பாடு மட்டுமல்லாமல், இதிலுள்ள 360 கோணங்களில் திரும்பக்கூடிய கேமரா மூலம் பார்க்கவும் செய்கிறது. இதிலுள்ள கேமராவை ஆன் செய்து, சமையலறையில் காய்கறிக்கூடையைக் காட்டி இதை வைத்து என்ன சமையல் செய்யலாம் எனக் கேட்டவுடன், இருக்கும் பொருள்களை வைத்து என்ன செய்யலாம் என்ற சமையல் குறிப்புகளையும் வழங்குகிறது.


அது மட்டுமல்லாமல் இதற்கு புதிய வேலைகளையும் கற்றுக்கொடுக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.16,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இதில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜும் அளிக்கப்படுகிறது. தொடுதிரை, ஸ்பீக்கர்ஸ், கேமரா மற்றும் 1000mAh பேட்டரி திறனையும் கொண்டுள்ளது இந்த ரேபிட். புளூடூத் மற்றும் வைபை வசதிகளும், ஒரு சிம்கார்ட் பொருத்தும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.


விற்பனை அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே முன்பதிவுகள் குவிந்துவருவதாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


அமெரிக்காவில் புதிய ஆப்பிள் வாட்ச்களுக்கு தடை...



அமெரிக்காவில் புதிய ஆப்பிள் வாட்ச்களுக்கு தடை...


ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ள Series 9, Ultra 2 மாடல் ஸ்மார்ட் வாட்ச்கள் விற்பனைக்கு அமெரிக்கா தடை விதிப்பு. 


வாட்ச்-ல் பயன்படுத்தப்பட்டுள்ள 'Pulse Oximeter' தொழில்நுட்பத்துக்கான காப்புரிமை மீறப்பட்டதாக புகார்.


காப்புரிமையை Masimo என்ற நிறுவனம் கையகப்படுத்தியுள்ள நிலையில், மாற்று தொழில்நுட்பம் அங்கீகரிக்கப்படும் வரை தடை உத்தரவை தற்காலிகமாக நிறுத்தக் கோரி ஃபெடரல் நீதிமன்றத்தில் ஆப்பிள் மேல்முறையீடு.


ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ள Series 9, Ultra 2 மாடல் ஸ்மார்ட் வாட்ச்கள் விற்பனைக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.


ஆப்பிள் நிறுவனத்திற்கும் - மசிமோ என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கும் நீண்ட காலமாக காப்புரிமை சிக்கல் இருந்து வருகிறது.


ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை கணக்கிட்டு சொல்லும்’ Pulse Oximeter' sensor தொழில்நுட்பம்தான் ஆப்பிள் மற்றும் மசிமோ மருந்து நிறுவனத்தின் இடையே ஏற்பட்டு உள்ள பிரச்னை என கூறப்படுகிறது.


வாட்ச்-ல் பயன்படுத்தப்பட்டுள்ள 'Pulse Oximeter' தொழில்நுட்பத்துக்கான காப்புரிமை மீறப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.


காப்புரிமையை Masimo என்ற நிறுவனம் கையகப்படுத்தியுள்ள நிலையில், மாற்று தொழில்நுட்பம் அங்கீகரிக்கப்படும் வரை தடை உத்தரவை தற்காலிகமாக நிறுத்தக் கோரி ஃபெடரல் நீதிமன்றத்தில் ஆப்பிள் மேல்முறையீடு செய்துள்ளது.


இதனால் ஆப்பிள் Series 9, Ultra 2 மாடல் ஸ்மார்ட் வாட்ச்கள் விற்பனைக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.


அரசு தொழில்நுட்பத் தேர்வுகள் - பிப்ரவரி 2023 - சுருக்கெழுத்து, கணக்கியல் மற்றும் தட்டச்சு பாடங்களின் தேர்வு முடிவுகள் வெளியீடு - அறிவிக்கை (Government Technical Examinations – February 2023 – Shorthand, Accountancy and Typing Subjects Result Release – Notification)...


>>> அரசு தொழில்நுட்பத் தேர்வுகள் - பிப்ரவரி 2023 - சுருக்கெழுத்து, கணக்கியல் மற்றும் தட்டச்சு பாடங்களின் தேர்வு முடிவுகள் வெளியீடு - அறிவிக்கை (Government Technical Examinations – February 2023 – Shorthand, Accountancy and Typing Subjects Result Release – Notification)... 






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஜார்கண்டில், பள்ளி வளாகத்தில் இருந்து மட்டுமே ஆசிரியர்கள் வருகையைக் குறிக்க அனுமதிக்கும் புதிய தொழில்நுட்பம் (In Jharkhand, new technology allows teachers to mark attendance only from school premises)...



ஜார்கண்டில், பள்ளி வளாகத்தில் இருந்து மட்டுமே ஆசிரியர்கள் வருகையைக் குறிக்க அனுமதிக்கும் புதிய தொழில்நுட்பம் (In Jharkhand, new technology allows teachers to mark attendance only from school premises)...


ராஞ்சி: மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு ஆசிரியர்களும் 2023 ஜனவரி முதல் "ஜியோஃபென்சிங்" என்ற தலைப்பில் அந்தந்த பள்ளி வளாகத்திற்குள் 100 மீட்டர் வரம்பிற்குள் தங்கள் வருகையைக் குறிக்க வேண்டும் என்று மாநில பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை தெரிவித்துள்ளது. 

புதிய தொழில்நுட்பம் ஆசிரியர்களின் இருப்பை பச்சை விளக்கு மற்றும் அவர்கள் இல்லாதது அந்தந்த ஸ்மார்ட்போன்களில் சிவப்பு ஒளியாகக் குறிக்கும் மற்றும் அவர்கள் சரியான நேரத்தில் வருகை மற்றும் வெளியேறுவதை உறுதி செய்யும். 

தற்போது, ​​ஆசிரியர்கள் தங்கள் தொலைபேசியில் நிறுவப்பட்ட இ-வித்யா வாஹினி செயலி மூலம் தங்கள் வருகையைக் குறிக்கின்றனர். ஆப்லைன் மற்றும் ஆன்லைன் வருகைத் தரவை ஆப்ஸ் கைப்பற்ற முடியும், ஆனால் ஆசிரியர்கள் இணையம் மூலம் மட்டுமே தரவைப் புதுப்பிக்க முடியும். 

மொபைல் போன்களின் இருப்பிடத்தையும் ஆப்ஸ் கண்டறிய முடியாது. இப்போது, ​​இ-வித்யா வாஹினி செயலியானது "ஜியோஃபென்சிங்" மூலம் புதுப்பிக்கப்படும், ஆசிரியர்கள் உள்நுழையும் போது அல்லது வெளியேறும் போது அவர்கள் வளாகத்தில் இருப்பதை உறுதிசெய்யும். 

சில ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வராமலோ அல்லது அவர்கள் வராத நேரத்திலோ கூட தற்போது குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொழில்நுட்பக் கோளாறாக இருக்கலாம் அல்லது வேண்டுமென்றே செய்யப்படும் நடைமுறையாக இருக்கலாம். 

இந்த சிக்கலை சரிசெய்ய அல்லது நடைமுறையைச் சரிபார்க்க, திணைக்களம் ஜியோஃபென்சிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (ஜிபிஎஸ்) அல்லது ரேடியோ அதிர்வெண் அடையாளத்தை (ஆர்எஃப்ஐடி) பயன்படுத்தி அவர்களின் தொலைபேசிகள் ஒரு மெய்நிகர் புவியியல் எல்லையை உருவாக்குகிறது. 

ஆசிரியர்களின் வருகைக்கு ஜியோஃபென்சிங் பயன்படுத்துவது குறித்து விளக்கமளித்த துறையின் இணைச் செயலர் அபிஜீத் சின்ஹா, 

“மொபைலில் உள்ள இ-வித்யா வாஹினி செயலியை ‘ஜியோஃபென்சிங்’ மூலம் புதுப்பித்தவுடன், அனைத்து வருகைப் பதிவுகளும் பதிவு செய்யப்படும். ஒரு ஆசிரியர் பள்ளி வளாகத்தில் 100 மீ. வரம்பிற்கு வெளியே அவரது வருகையைக் குறித்தால், தரவு பதிவு செய்யப்படாது மற்றும் அவர்கள் இல்லாததாகக் குறிக்கப்படும். வருகையைக் குறிக்கும் குறிப்பிட்ட நேரத்தில் வளாகத்தில் உள்ள தொலைபேசிகளின் இருப்பிடத்தை தொழில்நுட்பம் கண்காணித்து, தொழில்நுட்பத் துறைக்கு தகவல்களை அனுப்புகிறது என்றும் அவர் கூறினார். 

சின்ஹா ​​மேலும் கூறுகையில், “புதிய, புதுப்பிக்கப்பட்ட முயற்சியானது சோதனைக்கு உட்பட்டு வருகிறது, மேலும் ஆசிரியர்கள் தங்கள் வருகையை பதிவு செய்ய ஜியோஃபென்சிங் முறையைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜனவரி முதல், குறிப்பிட்ட பகுதிக்குள் புதுப்பிக்கப்பட்ட செயலி மூலம் அவர்களின் வருகையைக் குறிக்க வேண்டியது கட்டாயமாகும்.


இணைய இணைப்பு வேகம் வருகைப் பதிவேடுகளைப் பாதிக்காது என்று அவர் மேலும் கூறினார், “ஆசிரியர்கள் இணைய இணைப்பு இல்லாமல் தங்கள் வருகையைக் குறிக்கலாம், ஆனால் பதிவைப் புதுப்பிக்க அவர்கள் அலைபேசி இணையத்துடன் ஒரு கட்டத்தில் இணைக்கப்பட வேண்டும். இதுவரை, முன்னோடி திட்டத்தின் போது இணைய இணைப்பு அல்லது தொழில்நுட்ப கோளாறுகள் குறித்து எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. எங்களுக்கு ஏதேனும் புகார்கள் வந்தால், அவற்றை விரைவில் சரி செய்ய முயற்சிப்போம்,'' என்றார். 

இதற்கிடையில், ஆசிரியர்கள் புதிய தொழில்நுட்பத்தை வரவேற்றனர், ஆனால் பயன்பாட்டை ஆதரிக்க கல்வித் துறை இணைய செலவுகளை ஈடுகட்ட வேண்டும் என்று விரும்புகிறார்கள். அகில் ஜார்கண்ட் பிராத்மிக் சிக்ஷக் சங்கத்தின் பொதுச் செயலர் ராம் மூர்த்தி தாக்கூர் கூறுகையில், “ வருகைப் பதிவுகள் உட்பட அறிக்கையிடல் நோக்கங்களுக்காக, இணைய இணைப்பு தேவை. கணினி மூலம் ஒவ்வொரு அறிக்கையிடல் பணிக்கும் இணைப்பிற்கான செலவினங்களை நாங்கள் ஏற்க வேண்டியுள்ளது. இந்த புதிய முயற்சிக்கு எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை, ஆனால் இணைய இணைப்புக்கான செலவை துறை ஏற்க வேண்டும் என்றார்.



In Jharkhand, new tech to allow teachers to mark attendance from school campus only


RANCHI: All government teachers in the state will have to mark their attendance within the 100-meter range inside their respective school campus from January 2023 under an initiative titled “geofencing”, the state school education and literacy department has said.

The new technology will mark teachers’ presence with green light and their absence as a red glow on their respective smartphones and will ensure their timely arrival and exit. Currently, the teachers mark their attendance through the e-Vidya Vahini app installed on their phones.


The app can capture both offline and online attendance data but the teachers can only update the data through the internet. The app also cannot detect the location of mobile phones.


Now, the e-Vidya Vahini app will be updated with “geofencing” to ensure that the teachers were on the campus when they were signing in or out. Sources said some teachers have been marked present without coming to school on time or even when they are absent.

It could be either due to a technical glitch or a practice done purposely. To rectify this snag or check the practice, the department has introduced geofencing technology which uses the Global Positioning System (GPS) or Radio Frequency Identification (RFID) to create a virtual geographical boundary within which the exit and entry of a teacher will be done through their phones.


Explaining the use of geofencing for teachers’ attendance, the department’s joint secretary, Abhijeet Sinha, said, “Once the e-Vidya Vahini app on a mobile device is updated with ‘geofencing’, all attendance markings will be registered if done only within the 100-m range on the school campus.


If a teacher marks his or her attendance outside of the range, the data would not be registered and he or she would be marked absent.” He also said the technology monitors the location of phones on the campus at the particular time of marking attendance and relays the information to the technical department.

Sinha further said, “The new, updated initiative is undergoing pilot testing and the teachers have been instructed to use the geofencing system to record their attendance. From January, it will be compulsory to mark their attendance through the updated app within the specified area.”


Stating that the internet connection speed will not affect the attendance records, he added, “The teachers can mark their attendance without an internet connection, but they must be connected at some point to update the record.

So far, we have not received any complaints regarding the internet connection or technical glitches during the pilot project. If we receive any complaints, we will try to rectify them at the earliest.”

Meanwhile, the teachers welcomed the new technology but want the education department to cover the internet costs to support the app.

The general secretary of the Akhil Jharkhand Prathmik Sikshak Sangh, Ram Murti Thakur, said, “For reporting purposes, including attendance updates, an internet connection is required. We have to bear the expenses of the connection for every reporting work through the system. We have no objections to this new initiative, but the department should cover the cost of the internet connection.”


 ஜார்கண்ட் மாநிலத்தில் ஆசிரியரின் வருகையை பதிவு செய்ய புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சம் என்னவெனில் ஆசிரியர்கள் பள்ளியில் இருப்பது தானாகவே பதிவிடப்படுகிறது. தங்கள் ஸ்மாட் போன்கள் மூலம் ஆசிரியர்கள் இதனை அறியலாம்.


 மாணவர் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவேடு தினசரி ஏடுகளில் பராமரிக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு வளர்ச்சியடைந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆசிரியர்களின் வருகை ஆன்லைன் வாயிலாக அப்டேட் செய்யப்பட்டு வந்தது. பிறகு மாநிலம் வாரியாக செயலிகளை உருவாக்கி அதன் வாயிலாக தங்களது வருகையை பதிவு செய்து  ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் முறை கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் ஆசிரியர் உரிய நேரத்தில் தனது கைரேகையை அந்த இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும். அதே போல பள்ளியை விட்டு வெளியேறும் போதும் கைரேகை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம். 


இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஆசிரியர்களுக்கென்று புதிய வருகை பதிவேடு முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவரை அவர்கள் இ- வித்யா வாஹினி செயலி மூலம் தங்களது வருகை பதிவு செய்து வந்தனர்.


அதற்கு பதிலாக தற்போது ஜியோ பென்சிங் என்ற முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தின் 100 மீட்டர் வரம்புக்குள் இருந்தால் தானாகவே அவர்களின் வருகை பதிவு செய்யப்படும். அப்போது பச்சை நிறத்தில் ஸ்மார்ட் போனில் ஒளி தென்படும். அதே போல் அவர்கள் பள்ளியில் இல்லாத போது ஸ்மார்ட் போன்களில் சிவப்பு நிற ஒளி தோன்றும். இந்த புதிய வருகை பதிவு முறை 2023 ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆசிரியர்களுக்கான அடிப்படை கணினி பயிற்சி ( EMIS , HI - Tech Lab , ICT ) 12.08.2021 முதல் தொடக்கம்...



ஆசிரியர்களுக்கான அடிப்படை கணினி பயிற்சி - முதற்கட்டமாக 09.08.2021 க்கு பதில் 12.08.2021 முதல் தொடங்கும் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்


ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து கற்றல் , கற்றுக் கொண்டே இருத்தல் , அறிவை புதுப்பித்தல் ஆகியன மிக அவசியம் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் பணியிடைப் பயிற்சி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழியாக அடிப்படை கணினி பயன்படுத்துதல் , EMIS , HI - Tech Lab மற்றும் ICT ஆகியவற்றில் திறன் வளர் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு அதற்கான கருத்தாளர்கள் மற்றும் உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தின் பொறுப்பு ஆசிரியர்களுக்கும் 2.8.2021 முதல் 6.8.2021 வரை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது . இப்பயிற்சியானது பல கட்டங்களாக ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். 


5.8.2021 அன்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு நடைபெற்ற இணையவழி கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துக்கள் அடிப்படையில் , முதற்கட்டமாக 12500 முதுநிலை ஆசிரியர்களுக்கு 9.8.2021 அன்று முதல் திட்டமிடப்பட்டிருந்த பயிற்சி 12.08.2021 . 13.08.2021 . 16.08.2021 முதல் 18.08.2021 வரை பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


எனவே , பயிற்சி நன்முறையில் நடைபெறுவதற்கு தேவையான ஆயத்த பணிகள் அனைத்தையும் மாவட்டங்களில் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. 


இதற்காக 26.7.2021 முதல் 30.7.2021 வரையில் நடைபெற்ற கருத்தாளர் பயிற்சியிலிருந்து 264 கருத்தாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் . இரு கருத்தாளர்கள் இணைந்து ஒரு குழுவாகும். ஒவ்வொரு கருத்தாளர் குழுக்களும் 100 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டும். தெரிவு செய்யப்பட்ட 264 கருத்தாளர்களின் பெயர் பட்டியல் 132 கருத்தாளர் குழுக்களாக பிரிக்கப்பட்டு இணைப்பு 1 - ல் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிற்சி அளிக்கப்பட வேண்டிய ஆசிரியர்களின் எண்ணிக்கை விபரமும் இணைப்பு 2 - ல் கொடுக்கப்பட்டுள்ளது.


முதற்கட்டமாக 12500 முதுநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் பயிற்சி அளிக்கப்படவுள்ளதால் , 125 கருத்தாளர் குழுக்கள் மட்டும் போதுமானதாகும் , கொடுக்கப்பட்டுள்ள கருத்தாயார் பட்டியலில் கோயமுத்தூர் , தருமபுரி , ஈரோடு , மதுரை , புதுக்கோட்டை சேலம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் மட்டும் கூடுதலாக இரு கருத்தாளர்கள் ( ஒரு குழு ) உள்ளனர் . எனவே , மேற்குறிப்பிடப்பட்டுள்ள 7 மாவட்டங்களில் மட்டும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே கொடுக்கப்பட்டுள்ள கருத்தாளர் பட்டியலிலிருந்து மாவட்டங்களுக்கான கருத்தாளர்களை தெரிவு செய்து கொள்ளவேண்டும்.


>>> ஆசிரியர்களுக்கான அடிப்படை கணினிப் பயிற்சி - முதற்கட்டமாக 09.08.2021க்கு பதில் 12.08.2021 முதல் தொடங்கும் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்...


தமிழ்நாட்டில் இருந்து 6 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தொழில்நுட்பத்துக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு - NCERT ICT Awards Announcement PDF...

List of selected School Teachers for National ICT Award for the year 2018 and 2019


 தமிழ்நாட்டில் இருந்து 6 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தொழில்நுட்பத்துக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பை மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 


மத்தியக் கல்வி அமைச்சகம் சார்பில் 2010-ம் ஆண்டு முதல் தகவல் தொழில்நுட்பத்தில் படைப்பாற்றலைக் கொண்டு சிறப்பாகக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இந்த ICT விருது வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் NCERT சார்பில் இந்த விருது விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் கல்வித்துறை சார்ந்து சிறந்த முறையில் தகவல் மற்றும் தொழில்நுட்பக் கலை மூலம் கற்பிப்பவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. தமிழகப் பிரதிநிதித் துவத்தின்படி 6 ஆசிரியர்கள் மாநிலம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அனுப்பப்படுவர். அதில் அதிகபட்சமாக 3 ஆசிரியர்களை மத்திய அரசு தேர்ந்தெடுத்து கவுரவிக்கும். 


அந்த வகையில் 2018 மற்றும் 2019-ம் ஆண்டுக்கான விருது பெற்ற ஆசிரியர்களின் பட்டியலை என்சிஇஆர்டி வெளியிட்டுள்ளது.


கரோனா காலம் என்பதால் இதற்காக நாடு முழுவதும் இருந்து ஆசிரியர்கள் இணைய வழியில் நடைபெற்ற தேர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களின் கற்பித்தல் மாதிரிகளை விளக்கினர். இதில் 2018-ம் ஆண்டுக்கான விருதுப் பட்டியலில் நாடு முழுவதிலும் இருந்து 25 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 


தமிழகத்தில் இருந்து அதிகபட்சமாக 3 ஆசிரியர்கள் விருது பெற்றுள்ளனர். 


1.கணேஷ், (கணினி சார் வளங்களான வீடியோக்கள், விளையாட்டுகள், interactive apps வாயிலாகக் கணிதம் கற்பிப்பவர், மதிப்பீட்டில் புதிய அணுகுமுறையாக க்யுஆர் கோட் ஸ்கேனர் கொண்டு சில நிமிடங்களில் மதிப்பீடு செய்து கற்பிப்பவர்) கிளரியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, திருவாரூர் மாவட்டம். 



 2.மனோகர் சுப்பிரமணியம் (க்யூஆர் குறியீட்டுடன் கூடிய அடையாள அட்டை தயாரித்து மாணவர்களை கற்றல்- கற்பித்தல் செயல்பாடுகளில் ஆர்வமுடன் பங்கேற்கச் செய்தது உள்ளிட்ட பல்வேறு தகவல்தொடர்பு தொழில்நுட்பப் பணிகளை மேற்கொண்டவர்) வெள்ளியணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, கரூர் மாவட்டம். 


 3.தயானந்த் (கற்றல் கற்பித்தலைத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாணவர்களுக்குப் புரியும் விதத்திலும் அதேநேரத்தில் எளிமையாகவும், அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 170-க்கும் மேற்பட்ட காணொலிகள் மற்றும் அனிமேஷன்களை உருவாக்கியவர், புதிய பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவில் பங்காற்றியவர்) உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி

ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 


 அதேபோல 2019-ம் ஆண்டுக்கான விருதுப் பட்டியலில் நாடு முழுவதிலும் இருந்து 24 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 


இதில் தமிழகத்தில் இருந்து அதிகபட்சமாக 3 ஆசிரியர்கள் விருது பெற்றுள்ளனர். அதாவது, 


 1.ஜெ.செந்தில் செல்வன், (குறைந்த செலவில் ஸ்மார்ட் போர்டை உருவாக்கியவர். கணிதப் பாடத்துக்கு ஜியாமென்ட்ரி, கிராஃப் உள்ளிட்டவற்றுக்கான வழிமுறை விளக்கங்களை எளிய முறையில் ‘பவர்பாயிண்ட் பிரசண்டேஷன்’ அமைத்தவர்) மாங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை மாவட்டம். 



 2.தங்கராஜா மகாதேவன், (அனிமேஷன் பாடங்களை உருவாக்கி, சூழலியல் சார்ந்த வீடியோக்களைத் தயாரித்துக் கற்பிப்பவர்) பாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சேலம் மாவட்டம். 


 3.இளவரசன் (தொழில்நுட்பத்தின் உதவியுடன் 22 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுடன் தன் மாணவர்களை உரையாட வைத்தவர், அரசு அறிமுகப்படுத்தும் முன்னரே QR Code திட்டத்தைச் செயல்படுத்தியவர்) வேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சேலம் மாவட்டம். 

ஆகிய ஆசிரியர்கள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த ஐசிடி விருது மத்தியக் கல்வி அமைச்சகம் ஆண்டுதோறும் வழங்கும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஈடானது என்பது குறிப்பிடத்தக்கது.


>>> Click here to Download List of selected School Teachers for National ICT Award for the year 2018 and 2019...






அடுத்த தேர்தலில் 'ரிமோட் ஓட்டிங்' முறை அறிமுகம்...

 அடுத்த நாடாளுமன்ற தேர்தலில், 'ரிமோட் ஓட்டிங்'முறை அறிமுகப்படுத்தப்படும்,'' என, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நம்பிக்கை தெரிவித்தார். 



டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பேசியதாவது: தேர்தலில் ஓட்டளிக்கும் முறையில், புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளோம். இந்த தொழில்நுட்பத்தை, சென்னை, ஐ.ஐ.டி., யுடன் இணைந்து, ஆய்வு செய்து வருகிறோம். 


Remote Voting எனப்படும், இந்த புதிய தொழில்நுட்பம் வாயிலாக, தேர்தலின்போது, தங்கள் தொகுதியில் உள்ள ஓட்டுச் சாவடிக்கு நேரில் செல்லாமல், வாக்காளர்களால் ஓட்டளிக்க இயலும். நாட்டின் எந்த பகுதியில் இருந்தாலும், அங்கு, அதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்துக்குச் சென்று, வாக்காளர்கள் ஓட்டளிக்கலாம். 


 இந்த புதிய தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதற்கான சோதனை முயற்சி, இன்னும், இரண்டு அல்லது மூன்று மாதங்களில் துவங்க உள்ளது. நாடாளுமன்றத்துக்கு, 2024ல் நடக்கும் தேர்தலில், ரிமோட் ஓட்டிங் முறையை அறிமுகப் படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடி, வாக்காளர்களால் ஓட்டளிக்க முடியாது. 


 தேர்தலின்போது, இதற்காக அமைக்கப்படும் சிறப்பு மையத்திற்கு நேரில் சென்று, ஓட்டளிக்க வேண்டும். அந்த மையத்தில், 'பயோமெட்ரிக்' சாதனங்களும், 'வெப் கேமரா'வும் இருக்கும். அதன் வாயிலாக, வாக்காளர்களின் அடையாளம் உறுதி செய்யப்படும். அதன்பின், அவர்கள் ஓட்டளிக்க அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.

இனி சார்ஜ் போட கூட போனை கீழே வைக்க வேண்டாம் - வருகிறது புதிய தொழில்நுட்பம்...

 வயர்லெஸ் முறையில் பல சாதனங்களை சார்ஜ் செய்யக்கூடிய ஒரு புதிய சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதாக mi xiaomi நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.


இந்த புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் நீங்கள் விளையாடும்போது அல்லது வீடியோக்களைப் பார்க்கும்போது சார்ஜ் தீர்ந்துவிட்டால், நீங்கள் வயர்டு அல்லது வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்ய போனை ஒரே இடத்தில் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதற்காக, சியோமி அறிமுகம் செய்துள்ள தொழில்நுட்பத்தின் பெயர் என்ன? இது எப்படி செயல்படுகிறது? என்பதையெல்லாம் இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம் வாங்க.


எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் ஸ்மார்ட் சாதனங்களை சார்ஜ் செய்ய ரிமோட் வயர்லெஸ் சார்ஜிங் நுட்பமான ‘Mi ஏர் சார்ஜ்’ எனும் தொழில்நுட்பத்தை சியோமி அறிமுகம் செய்துள்ளது.


இந்த தொழில்நுட்பம் செயல்பட, நீங்கள் உங்கள் தொலைபேசியை ஒரே இடத்தில் வைக்க வேண்டும் என்ற அவசியமில்லை, ஆனால் சார்ஜருக்கு அருகில் இருக்க வேண்டுமென்பது அவசியம், இதனால் உங்கள் தொலைபேசியை வயர் ஏதும் இல்லாமல் சார்ஜ் செய்யலாம். ரிமோட் சார்ஜிங் நுட்பத்தைப் பற்றி நிறைய நிறுவனங்கள் பேசியுள்ளன, ஆனால் அதை முதலில் நிஜமாகியுள்ளது சியோமி நிறுவனம் தான்.


80W ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங், 120W வயர்டு சார்ஜிங் போன்ற பல முதன்மையான தொழில்துறை நுட்பங்களை முதன் முதலில் அறிமுகம் செய்யும் OEM ஆக சியோமி தொடர்ந்து இருந்து வருகிறது. அந்த வகையில் சீன உற்பத்தியாளரான சியோமி இப்போது இந்த புரட்சிகர புதிய வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தையும் முதலில் அறிமுகம் செய்துள்ளது.


தொழில்நுட்பம் எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்து விரிவான விவரங்கள் பகிரப்படவில்லை என்றாலும், சிலவற்றை வெய்போவில் சியோமி நிறுவனத்தின் நிறுவனர் பகிர்ந்து கொண்டார், இது சார்ஜிங் நிலையத்திலிருந்து ஓரிரு மீட்டர் தூரத்திற்கு 5W மின்சக்தியை வழங்கும் அம்சம் கொண்டது என்று தெரிவித்துள்ளார்.


5-phase இன்டர்ஃபெரன்ஸ் ஆண்டெனா மூலம் உங்கள் சாதனத்தின் நிலையை தீர்மானித்த பிறகு, ஒரு phase control வரிசையை உருவாக்கும் 144 ஆண்டெனாக்கள் மில்லிமீட்டர்-அலை அதிர்வெண்களில் பீம்ஃபார்மிங் மூலம் ஆற்றலை அனுப்புகின்றன.


சியோமி எப்போது இந்த தொழில்நுட்பத்தை வணிகமயமாக்கும் என்பது குறித்து எந்த தகவலும் இப்போதைக்கு இல்லை, ஆனால் எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பத்தை பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் உலகின் முதல் நிறுவனமாக Xiaomi இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DSE Proceedings & User manual to download Manarkeni app by 24.01.2025

 மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & பயனர் கையேடு DSE - Manarkeni App Downloading...