கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

1.17 கோடி விலை கொடுத்து வாங்கப்பட்ட கார் பதிவு எண் HR88 B8888



 இந்தியாவில்  அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட கார் பதிவு எண் HR88 B8888 




ஹரியானா மாநிலத்தில் ஒரு வாகனப் பதிவு எண் ரூ.1.17 கோடி கொடுத்து வாங்கப்பட்டுள்ளது. 'HR88 B8888' என்ற இந்த எண்தான் இந்தியாவிலேயே இதுவரை அதிக விலைக்கு ஏலம் போன VIP எண்ணாக மாறியுள்ளது. 


முழுக்க முழுக்க இணையத்தில் நடந்த ஏலத்தில் 45 பேர் போட்டியிட்டனர். இன்று (நவம்பர் 26) மாலை 5 மணிக்கு ஏலம் முடிவடைந்த நிலையில் இந்தப் புதிய சாதனை படைக்கப்பட்டு உள்ளது.


 சாதாரண மக்களுக்கு 2 அல்லது 3 இலட்சங்கள் கொடுத்து கார் வாங்குவதே மாபெரும் கனவாக உள்ள நாட்டில்தான், 1.17 கோடி ரூபாய் விலையில் நம்பர் பிளேட் வாங்குவதும் நடைபெற்றுள்ளது. செல்வந்தர்களுக்கு தங்கள் காரை தனித்துவமாகக் காட்ட இது ஒரு வழியாக மாறிவிட்டது.  8 என்பது அதிர்ஷ்டமும் செல்வமும் தரும் எண் 'HR88B8888' என்ற எண்ணின் சிறப்பு அதன் தோற்றத்திலேயே உள்ளது. 'B' என்ற எழுத்து எட்டு போலத் தெரிவதால், மொத்த எண்ணும் எட்டு எட்டு எட்டு எட்டு என பார்க்கும் போது தெரிகிறது. இதேபோல் எட்டு என்ற எண் அதிர்ஷ்டமும் செல்வமும் தரும் எண்ணாகக் கருதுபவர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர்.


தமிழ்நாட்டில் இது போன்ற வாகன எண் எப்படிப் பெறுவது? 

தமிழ்நாட்டில் இரண்டு வகையான சிறப்பு எண்கள் கிடைக்கின்றன.

1. அரசு ஒதுக்கீடு செய்த ஃபேன்ஸி எண்கள் → 0001, 1111, 5005, 1234 போன்றவை 

2. Open Series எண்கள் → 1122, 1212, 1222 போன்ற எண்கள் இரண்டுக்கும் கூடுதல் ஃபேன்ஸி/ முன்பதிவுக் கட்டணம் செலுத்தினால் யாரும் விண்ணப்பிக்கலாம்.


Fancy Number பெறுவதற்கான வழிமுறைகள்: 

முதலில் https://parivahan.gov.in என்ற போக்குவரத்து அமைச்சக இணையதளத்துக்குச் செல்லவும்.

 "User Other Services" → "All Available Numbers" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 

அதன் பின் தமிழ்நாடு, 

அடுத்தாக உங்களது ஆர்டிஓ அலுவலகம், "Open Series" எனத் தேர்வு செய்யவும். 

இதில் 0001 முதல் 9999 வரையிலான கிடைக்கும் எண்களைப் பார்க்கலாம். அன்றைய தொடர் எண் (running number) எது என்பதைத் தெரிந்துகொள்ள உங்கள் ஆர்டிஓ அலுவலகத்தைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளவும். 

பிடித்த எண்களை முதலில் பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். 

பின்னர் உங்கள் ஆர்டிஓ அலுவலகத்திற்கு நேரில் சென்று பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும்

விலக்கு அறிக்கைப் படிவம் (Disclaimer Form) 

அடையாளச் சான்று (ID Proof) 

நிறுவனம் சார்பில் வாங்கினால் ஜிஎஸ்டி சான்றிதழ் 

கையொப்பமிட்ட கோரிக்கைக் கடிதம் 

எண் ஒதுக்கீட்டுப் படிவம் 

ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு உங்களுக்கு ஒரு Login ID மற்றும் Password கொடுப்பார்கள். 

அதை வைத்து பரிவாஹன் இணையதளத்தில் உள்நுழையவும். 

உள்நுழைந்ததும் "Pay Reserve Fee" → "Unique ACK Number" எனத் தேர்ந்தெடுத்து, நீங்கள் விரும்பிய எண்ணைத் தேர்வு செய்யவும். 

படிவம் தானாக நிரம்பிவிடும். 

கட்டணத்தை யூ.பி.ஐ., நெட் பேங்கிங், ரூபே டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலம் செலுத்தவும் (கிரெடிட் கார்டுக்கு சிறிது கூடுதல் கட்டணம் இருக்கலாம்). 

கட்டணம் செலுத்தியவுடன் அந்த எண் உங்கள் வாகனத்துடன் இணைக்கப்பட்டுவிடும். வாகனப் பதிவு மற்றும் ஆய்வின் போது RTO அலுவலகம் அதே எண்ணையே உங்கள் காருக்கு ஒதுக்கித் தரும். 

இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால், உங்களுக்குப் பிடித்த Fancy எண்ணை உங்கள் வாகனத்திற்கு சட்டப்படி பெற்று விடலாம்.



Pentonic 0.7mm Ball Point Pen Tumbler Pack | Black Body | Blue, Black & Red Ink | Pack of 50 Pens






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

1.17 கோடி விலை கொடுத்து வாங்கப்பட்ட கார் பதிவு எண் HR88 B8888

 இந்தியாவில்  அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட கார் பதிவு எண் HR88 B8888  ஹரியானா மாநிலத்தில் ஒரு வாகனப் பதிவு எண் ரூ.1.17 கோடி கொடுத்து வாங்க...