கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

விபத்தில் தாயை இழந்த, பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு முதலமைச்சர் உத்தரவுப்படி பணி நியமன ஆணை



விபத்தில் தாயை இழந்த, பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு முதலமைச்சர் உத்தரவுப்படி பணி நியமன ஆணை 


 பேருந்து விபத்தில் தாயை இழந்த மாற்றுத்திறனாளிக்கு வேலைக்கான ஆணையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவுப்படி நேரில் வழங்கினார் மாவட்ட ஆட்சியர்


தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.


காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.


இதனிடையே, இந்த பேருந்து விபத்தில் தாயை பறிகொடுத்த பார்வை இழந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு வேலை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்தார்.


இதனையடுத்து பார்வையற்ற மாற்றுத்திறனாளி பட்டதாரி பெண்ணுக்கு வேலைக்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.


உயிரிழந்தவர்களில் ஒருவரான புளியங்குடியைச் சேர்ந்த மல்லிகா, கணவரை இழந்த நிலையிலும் பீடி சுற்றி, பார்வையற்ற தனது மகள் கீர்த்திகாவை பி.எட் வரை படிக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தென்காசி பேருந்து விபத்தில் தாயை இழந்த பார்வையற்ற பெண்ணுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவுப்படி நகராட்சி அலுவலகத்தில் டேட்டா என்ட்ரி பணிக்கான ஆணையை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்


பார்வையற்ற பெண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆறுதல் கூறினார்.


TNPL A4 Copier Paper 80 GSM 500 Sheets - 1 Ream


https://amzn.to/4omoJgd




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

1.17 கோடி விலை கொடுத்து வாங்கப்பட்ட கார் பதிவு எண் HR88 B8888

 இந்தியாவில்  அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட கார் பதிவு எண் HR88 B8888  ஹரியானா மாநிலத்தில் ஒரு வாகனப் பதிவு எண் ரூ.1.17 கோடி கொடுத்து வாங்க...