கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வெளிநபர்களால் தாக்கப்பட்ட ஆசிரியை - ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்



வெளிநபர்களால் ஆசிரியை தாக்கப்பட்ட நிகழ்வுக்கு ஆசிரியர் சங்கம் கண்டனம்


நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்

      DRPGTA


இராமநாதபுரம் தொண்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணியில் இருக்கும் போது வெளிநபர்களால் முதுகலை ஆசிரியை தாக்கப்பட்ட நிகழ்வுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்

🌑🌑🌑🌑🌑🌑🌑🌑

கண்டன அறிக்கை

🌑🌑🌑🌑🌑🌑🌑🌑

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை  ஆங்கில ஆசிரியையை கடந்த 10.12.2025 அன்று வகுப்பில் அரையாண்டு தேர்வுக்கான பாடங்களை மாணவிகளுக்கு கற்பித்துக் கொண்டு இருந்திருக்கிறார். 


அப்போது  படிக்காமல் பிற மாணவிகளிடம் சிரித்துக்கொண்டும் பேசிக் கொண்டும் இருந்த மாணவியை அழைத்து நாளை அரையாண்டு தேர்வு படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி ஆலோசனை கூறியுள்ளார். 


இந்த நிலையில் ஆசிரியை தன்னை இவ்வாறு அறிவுறுத்தியதை ஆலோசனை கூறியதை ஏற்காத அந்த மாணவி வீட்டில் தன் அம்மாவிடமும் பாட்டியிடமும் கூறி அவர்களைப் பள்ளிக்குள் அழைத்து வந்து ஆசிரியை இருந்த வகுப்பில் உள்ளே புகுந்து அவர்கள் ஆசிரியையை மிகவும் தரக்குறைவான, கேவலமான, வார்த்தைகளால் திட்டி தொடர்ந்து,

 மாணவியின் தாயும் பாட்டியும் ஆசிரியையை தலையைப் பிடித்து கழுத்தைப் பிடித்து அருகில் இருந்த இரும்பு கதவில் மோதி ,

இருவரும் மாறி மாறி அடித்து முதுகலை ஆசிரியையை  நிலை குலையச் செய்து கீழே தள்ளி தாக்கி உள்ளனர்.


தொடர்ந்து மேற்கண்ட வெளி நபர்கள் ஆசிரியையைத் தாக்கும் போது அருகில் வகுப்பிருந்த பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியையும் இந்த நிகழ்வுகளை கேட்டு ஓடி வந்து ஏன் ஆசிரியையை அடிக்கிறீர்கள் என்று தடுத்து அவர்களை கேட்ட போது.. அந்த வெளி நபர்களோ

 அந்த ஆசிரியையும் கீழே தள்ளி அவரையும் தாக்க முற்பட்டதாக தகவல் கிடைக்கிறது. 


தொடர்ந்து அவர்கள்  ஆசிரியர்களை தாக்கி விட்டு பள்ளியை விட்டு வேகமாக வெளியே செல்ல முற்பட்டபோது அங்கிருந்த பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர் மற்றும் ஆசிரியர்களால் தடுக்கப்பட்டு தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தொடர்ந்து தன்னைத் தாக்கியவர்கள் மீது நமது முதுகலை ஆசிரியையும் புகார் கொடுத்து இருக்கிறார். 


தொடர்ந்து அந்த மாணவியின் தாயும் பாட்டியும் தங்கள் மகளுக்கு படிப்பு தேவையில்லை.

படித்தால் படிக்கட்டும் படிக்காவிட்டால் போகட்டும் என்று கூறி பள்ளியில் இருந்து எங்களுக்கு டிசியை கொடுங்கள் என்று அவர்களே  கேட்டு வாங்கி சென்று உள்ளார்கள்.

 இது அனைத்துமே அங்கு காட்சியாக பதிவாகியும் இருக்கிறது. 


தொடர்ந்து பள்ளியிலிருந்து மாற்றுச் சான்றிதழைப் பெற்றுச் சென்ற பிறகு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த வேறொரு அமைப்பு மாணவி தற்கொலை முயற்சி என்ற நிகழ்வை கையில் எடுத்துக்கொண்டு தொடர்ந்து ஆசிரியருக்கு மறைமுகமான நெருக்கடிகளை கொடுத்து வருவதும் தெரிகிறது. 


பள்ளியில் பணியில் இருக்கும் போது ஆசிரியையை தாக்கிய மேற்கண்ட வெளி நபர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். 


இந்த நிலையில் உயர்கல்வி நிறுவனங்களில் சிறந்த உயர்கல்வி பயின்று முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று ஒரு மிகச்சிறந்த ஆசிரியராக மாணவ மாணவிகளின் எதிர்காலம் சிறக்க சேவை மனப்பான்மையோடு அவர்களுக்கு நல்லதை செய்யலாம் நல்ல வழிகளை காட்டலாம் என்று பணிக்கு வந்த ஒரு முதுகலை ஆசிரியையை பள்ளியில் அனைத்து மாணவிகள் முன்பு வெளிநபர்கள் தாக்கிய நிகழ்வால் மேற்கண்ட ஆசிரியை மிகவும் மனம் வாடியுள்ளார் மனம் நொந்து போய் உள்ளார் அவருடைய வேதனை கலந்த அழுகுரல் மனதை மிகவும் கண்ணீர் மல்க வைக்கிறது. 


பலர் முன் ஒரு மதிப்பு மரியாதை கொடுக்க வேண்டிய,

 நடத்த வேண்டிய ...


ஒரு ஆசிரியை பல மாணவிகள் முன்பு கடுமையாக தாக்கப்பட்ட அந்த நிகழ்ச்சியிலிருந்து அவர் இன்னும் முழுமையாக வெளிவர முடியாமல் கண்ணீர் மல்க சோகமே குரலாக மனம் நொந்து பேசும் அவருடைய குரலுக்கு தமிழ்நாடு அரசும் பள்ளிக் கல்வித் துறையும் உரிய மதிப்பை அளிக்க வேண்டும். 


அரசு பள்ளிகளுக்கும், அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களையும்,

 பள்ளி வேலை நேரத்தில் பள்ளிக்குள் புகுந்து தாக்குபவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத குண்டர் தடுப்பு சட்டத்துடன் கூடிய பணிப் பாதுகாப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக இயற்ற வேண்டும்


இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அரசு மகளிர் மேல்நிலைப்

 பள்ளிக்குள் புகுந்து முதுகலை ஆசிரியையைத் தாக்கியவர்களை ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் தமிழ்நாடு அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்.


*அரசு பள்ளியில்*

 *பணியில் இருக்கும்* *போது* 

 *வெளிநபர்கள்* *பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையைத் தாக்கும் மோசமான நிகழ்வு தமிழ்நாட்டில் தொடர்கதையாகி வருகிறது*


*தமிழ்நாடு அரசே!*

*இராமநாதபுரம் தொண்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்* 

*வெளி நபர்களால் பள்ளிக்குள் தாக்கப்பட்ட  பெண் ஆசிரியையின் வேதனை மிகுந்த அழுகுரல் உங்களுக்கு இப்போதும் கேட்கவில்லையா?*


*எப்போது தான் கேட்கும்?*


*தமிழ்நாடு அரசே!*

*பள்ளிக்கல்வித்துறையே!*


 *பள்ளிகளுக்கான ஆசிரியர்களுக்கான* 

*பணிப் பாதுகாப்புச்* *சட்டத்தை உடனடியாக இயற்று!!*

✍️✍️✍️✍️✍️✍️✍️✍️

*கடும் கண்டனத்துடன்*

     *ஆ.இராமு*

*மாநிலத் தலைவர்* 

*நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்* 

       *DRPGTA*



Einstein Box Ultimate Science Experiment Kit for Boys & Girls Ages 7-14 | Birthday Gifts Ideas for Kids | STEM Learning Educational Toys & STEM Toys for Boys 7-14 Years | Experiment Kit


https://amzn.to/3N4LgB1




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalanjiyam Appன் பயன்பாடுகள் - மனித வள மேம்பாட்டுத் துறைச் செயலாளரின் கடிதம்

களஞ்சியம் செயலியின் பயன்பாடுகள் குறித்து மனித வள மேம்பாட்டுத் துறைச் செயலாளரின் கடிதம் Usage of Kalanjiyam App Lr. No.9245 of 2025-1 Letter ...