இடுகைகள்

அறிஞர் அண்ணா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செப்டம்பர் 15 - திரு.கா.ந.அண்ணாதுரை (அறிஞர் அண்ணா) அவர்களின் பிறந்தநாள் (September 15 - Birthday of Mr. K.N.Annathurai - Arignar Anna)...

படம்
  செப்டம்பர் 15 திரு.கா.ந.அண்ணாதுரை (அறிஞர் அண்ணா) அவர்களின் பிறந்தநாள் அண்ணாதுரை, சின்னகாஞ்சீபுரத்தில் வரகுவாசல் தெருவில் கதவெண் 54 உள்ள வீட்டில்  கைத்தறி நெசவாளர் நடராசன் - பங்காரு அம்மாள் என்பவருக்கு மகனாக செளமிய ஆண்டு ஆவணித்திங்கள் 31ஆம் நாள் (1909 - செப்டம்பர் 15) நடுத்தர குடும்பமொன்றில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்விக் கற்றார். 1934 இல், இளங்கலைமானி மேதகைமை (ஆனர்ஸ்) , மற்றும் அதனைத் தொடர்ந்து முதுகலைமானி பொருளியல் மற்றும் அரசியல் பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார். பின்பு பச்சையப்பன் உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார். ஆசிரியப்பணியை இடைநிறுத்தி பத்திரிகைத்துறையிலும், அரசியலிலும் ஈடுபாடு கொண்டார். தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறப்பாகச் சொற்பொழிவாற்றவும் எழுதவும் வல்லவர். இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதியிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை இயக்கி இருக்கிறார்; சிலவற்றுள் நடித்திருக்கிறார். தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும் தன்னுடைய திராவிட சீர்தி

>>>தென்னாட்டு பெர்னாட்ஷா அறிஞர் அண்ணா பிறந்த நாள் இன்று 15.09.2020

படம்
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று சொன்ன தென்னாட்டு பெர்னாட்ஷா  அறிஞர் அண்ணா!  பிறந்த நாள் 15.09.2020 அறிஞர் அண்ணா மறைந்து 50ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், அரசியலில் அவர் காட்டிய நெறிமுறைகள் முன்பு எப்போதையும்விட இன்றுதான் மிகவும் அவசியமாக இருக்கின்றன. முன்பைவிட இன்றுதான் அண்ணா மிகவும் தேவைப்படுகிறார். இளைஞர் அண்ணா, பெரியாருடன் இணைந்தார். திராவிடர் கழகத்திலிருந்து 1949ல் பிரிந்த பிறகும் பெரியார் அளித்த நல்லுணர்வுகளை அண்ணா தொடர்ந்து போற்றிவந்தார். 1967ல் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு பெரியாரைச் சந்தித்து அண்ணா வாழ்த்து பெற்ற நிகழ்வு யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாதது. அண்ணாவின் மொழி ஆளுமை அண்ணா சிறந்த இதழாளர். குடியரசு, நம் நாடு, திராவிட நாடு, காஞ்சி உள்ளிட்ட பல தமிழ் ஏடுகளிலும், ஹோம் லேண்ட், ஹோம் ரூல் ஆகிய ஆங்கில வார ஏடுகளிலும் பன்னாட்டு அரசியல் தொடங்கி இந்நாட்டு அரசியல் வரை பல்துறைகளில் அவர் ஆங்கிலத்தில் அவர் எழுதிய கட்டுரைகள், தலையங்கங்கள் இன்றும் ஆய்வுக்குரிய கலைக்களஞ்சியமாகவே விளங்குகின்றன. அண்ணாவின் எழுத்திலும் பேச்சிலும் பகுத்தறிவு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, ச

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...