கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி (15-07-2023 Kalvi Valarchi Naal) நாளாகக் கொண்டாடுதல் - அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Celebrating former Tamil Nadu Chief Minister Perunthalaivar Kamarajar's birthday on 15th July as Educational Development Day - Giving instructions - Proceedings of Director of School Education)...
அனைத்து அரசு அலுவலகங்களிலும் தந்தை பெரியாரின் பிறந்த தினமான செப்டம்பர் 17ஆம் நாளை (17.09.2022) சமூகநீதி நாள் ஆக அனுசரிக்கவும், உறுதிமொழி மேற்கொள்ளவும் அரசாணை (நிலை) எண்: 590, நாள்: 13-09-2022 வெளியீடு (Issue of Government Order (G.O.Ms.No.590, Dated: 13-09-2022) to observe Thanthai Periyar's birthday on 17th September (17.09.2022) as "Social Justice Day" in all Government Offices)...
செப்டம்பர் 15 - திரு.கா.ந.அண்ணாதுரை (அறிஞர் அண்ணா) அவர்களின் பிறந்தநாள் (September 15 - Birthday of Mr. K.N.Annathurai - Arignar Anna)...
செப்டம்பர் 15
திரு.கா.ந.அண்ணாதுரை (அறிஞர் அண்ணா) அவர்களின் பிறந்தநாள்
அண்ணாதுரை, சின்னகாஞ்சீபுரத்தில் வரகுவாசல் தெருவில் கதவெண் 54 உள்ள வீட்டில் கைத்தறி நெசவாளர் நடராசன் - பங்காரு அம்மாள் என்பவருக்கு மகனாக செளமிய ஆண்டு ஆவணித்திங்கள் 31ஆம் நாள் (1909 - செப்டம்பர் 15) நடுத்தர குடும்பமொன்றில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்விக் கற்றார்.
1934 இல், இளங்கலைமானி மேதகைமை (ஆனர்ஸ்) , மற்றும் அதனைத் தொடர்ந்து முதுகலைமானி பொருளியல் மற்றும் அரசியல் பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார். பின்பு பச்சையப்பன் உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார். ஆசிரியப்பணியை இடைநிறுத்தி பத்திரிகைத்துறையிலும், அரசியலிலும் ஈடுபாடு கொண்டார்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறப்பாகச் சொற்பொழிவாற்றவும் எழுதவும் வல்லவர். இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதியிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை இயக்கி இருக்கிறார்; சிலவற்றுள் நடித்திருக்கிறார். தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும் தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை அதன் மூலம் முதன்முதலாக பரப்பியவரும் இவரே. நடுத்தரவர்க்க நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவரான அண்ணாதுரை, தன் ஆரம்பகால வாழ்க்கையை பள்ளி ஆசிரியராகத் துவங்கியவர், சென்னை இராசதானியில் (மெட்ராஸ் பிரசிடென்சி) தன் அரசியல் ஈடுபாட்டினை முதன்முதலில் பத்திரிகையாளராக, பத்திரிகையாசிரியராக வெளிப்படுத்தினார்.
மொழிப்புலமை
ஒரு தடவை சில இங்கிலாந்து மாணவர்கள் அண்ணாவை பரிகசிப்பதற்காக அவரிடம் ஏனென்றால் என்ற வார்த்தை மூன்று தடவை தொடர்ந்து வருகிற மாதிரி வாக்கியம் கூற முடியுமா என்று கேட்டனர். அதற்கு அவர்,
“ "No sentence can end with because because, because is a conjunction.
எந்தத்தொடரிலும் இறுதியில் வராச்சொல் 'ஏனென்றால்'. ஏனென்றால், 'ஏனென்றால்' என்பது இணைப்புச்சொல்”
என்று உடனே பதிலளித்தார்.
தமிழ்நாடு பெயர் மாற்றம்
1967 இல் நடைபெற்ற தேர்தலில் பங்கு பெற்ற திமு கழகம் வெற்றி பெற்று முதன் முறையாக திராவிட ஆட்சியை தமிழகத்தில் அமைத்தது. அவரது தலைமையில் 1967 மார்ச் 6இல் அமைந்த அமைச்சரவை இளைஞர்களை கொண்ட அமைச்சரவையாக விளங்கியது. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிப்படுத்தினார். இரு மொழி சட்டங்களை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) உருவாக்கி முந்தைய அரசின் மும்மொழித்திட்டத்தினை (தமிழ், இந்தி, ஆங்கிலம்) முடக்கினார், மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை 1969 ஜனவரி 14ல் தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார். அமெரிக்கரல்லாத அண்ணாதுரை அவர்களுக்கு யேல் பல்கலைக்கழகம், சப் பெல்லோசிப் என்ற கவுரவ பேராசிரியர் விருது 1967–1968 இல் வழங்கப்பட்டது. அமெரிக்கரில்லாத ஒருவருக்கு வழங்கப்பட்டதும் இதுவே முதல் முறை.
இறுதிக்காலம்
மக்களின் பேராதரவைப் பெற்றிருந்தும், இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியிலிருக்க அவரால் முடிந்தது. புற்று நோய்க்கு ஆளான அவர்,03 பிப்ரவரி 1969 இல் காலமானார். அவரின் இறுதி ஊர்வலம் கின்னஸ் உலக சாதனையில் இடம்பெறுகின்ற அளவில் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். பல கல்வி நிறுவனங்கள், கட்சிகள் அவரின் பெயரில் துவக்கப்பட்டன.
ஒரு முதலமைச்சராக மட்டுமன்றி, ஒரு அறிஞராகவும், சமூக சீர்திருத்த வாதியாகவும், ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும், மிகச் சிறந்த பேச்சாளராகவும், மக்கள் தலைவனாகவும், இன்றும் தமிழக மக்களால் அவர் நினைவு கூறப்படுகிறார்.
பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாள் - ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடுதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Proceedings of Commissioner of School Education Regarding Celebrating 15th July as Education Development Day of Perundhalaivar Kamarajar Birthday) ந.க.எண்: 36801/ எம்/ இ2/ 2022, நாள்: 12-07-2022...
அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளான ஏப்ரல் திங்கள் 14 - ஆம் நாளை ஆண்டுதோறும் "சமத்துவ நாள்" ஆக அனுசரிப்பது - உறுதிமொழி மேற்கொள்வது - உறுதிமொழி மற்றும் அரசாணை (நிலை) எண்: 292, நாள்: 13-04-2022 வெளியீடு (Annal Ambedkar's birthday, April 14th, is observed annually as "Equality Day" - Pledge - Pledge and G.O. (Ms) No: 292, Dated: 13-04-2022 Issued)...
செப்டம்பர் 17ஆம் தேதி தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை சமூக நீதிக்கான நாளாக கொண்டாட தமிழ்நாடு அரசு அரசாணை (நிலை) எண்:777, நாள்: 13.09.2021 வெளியீடு(Tamilnadu Government Ordered to Celebrate Thanthai Periyar Birthday on September 17 as "Social Justice Day". G.O.(Ms).No:777, Dated: 13-09-2021)...
அரசாணை (நிலை) எண்:777, நாள்: 13.09.2021 - தந்தை பெரியார் பிறந்த தினமான செப்டம்பர்-17 ஆம் நாளை ஆண்டுதோறும் 'சமூகநீதி நாள்' ஆக அனுசரிப்பது - உறுதிமொழி மேற்கொள்வது - ஆணை வெளியிடப்படுகிறது(Tamilnadu Government Ordered to Celebrate Thanthai Periyar Birthday on September 17 as "Social Justice Day". G.O.(Ms).No:777, Dated: 13-09-2021)...
>>> அரசாணை (நிலை) எண்:777, நாள்: 13.09.2021...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Prolonged sitting puts heart at risk - new study warns
நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns