இடுகைகள்

ஆசிரியர் குடியிருப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆசிரியர்களுக்கு குடியிருப்பு கட்ட இடம் தேர்வு - முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு...

படம்
 ஆசிரியர்களுக்கு குடியிருப்பு கட்ட இடம் தேர்வு - எந்த பகுதிகளுக்கு முன்னுரிமை? - முதன்மை கல்வி அலுவலர்(CEO)களுக்கு உத்தரவு...   ஆசிரியர்களுக்கு குடியிருப்பு கட்ட இடம் தேர்வு செய்ய முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி கல்வி இயக்குநர்‌ அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில்‌ கூறியிருப்பதாவது:  ஒருங்‌கிணைந்த பள்ளிக்கல்வி 2021-2022ஆம்‌ ஆண்டுக்கான திட்டமிடலில்‌ ஆசிரியர்களுக்கான குடியிருப்பு கட்டமைப்புக்கு தேவையான முன்மொழிவுகள்‌ மத்திய அரசால் கோரப்‌பட்டுள்ளது. எனவே ஆசிரியர்களுக்கு குடியிருப்பு கட்‌டமைப்பிற்கு மாவட்‌டங்களில்‌ இருந்து கருத்துருக்கள்‌ பெறப்‌பட்டு தங்கள்‌ நிலையில்‌ ஆய்வு செய்து உரிய குறிப்புரைகள்‌ மற்றும்‌ இணைப்புகளுடன்‌ மத்திய அரசுக்கு முன்மொழிவுகள்‌ அனுப்பிவைக்க வேண்டும்‌.  இடம் தேர்வு செய்யும்‌ போது மலைப் பகுதிகள்‌ மற்றும்‌ போக்குவரத்து வசதியற்ற தொலைதூரப் பகுதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையிலும்‌, விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும்‌.  இவ்‌வாறு சுற்றறிக்கையில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கான குடியிருப்பு (Teachers Quarters) கட்டமைப்பிற்கு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கக் கோரி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி & தொடக்கக்கல்வி இயக்குநர்கள் கடிதம்...

படம்
  >>> பள்ளிக் கல்வி - ஆசிரியர்களுக்கான குடியிருப்பு (Teachers Quarters) கட்டமைப்பிற்கு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கக் கோரி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க. எண்: 023447/ என்2/ இ2/ 2021, நாள்: 12-04-2021... >>>  தொடக்கக் கல்வி - ஆசிரியர்களுக்கான குடியிருப்பு (Teachers Quarters) கட்டமைப்பிற்கு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கக் கோரி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க. எண்: 05511/ கே4/ 2021, நாள்: 09-04-2021...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...