கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 17.04.2021 (சனி)...

 


🌹நாம் சிரிக்க வேண்டும் என நினைப்பவர்கள் முன்னாடி சிரிப்பே வரவில்லையென்றாலும் சிரிக்க வேண்டும்.

ஆனால் நாம் அழ வேண்டும் என நினைப்பவர்கள் முன்னாடி அழுகையே வந்தாலும் அழக்கூடாது.!

🌹🌹பாதுகாக்கப்பட வேண்டியது பணத்தை மட்டும் அல்ல.

பாசமான உறவுகளையும் தான்.

இரண்டும் கிடைப்பதும் கஷ்டம்.

நிலைப்பதும் கஷ்டம்.!!

🌹🌹🌹மனிதன் இறுதியாக இறப்பதற்கு

இடையில் மனதால் பலமுறை இறந்து விடுகிறான். 

சில நேரம் சில மனிதர்களால்.

சில நேரம் சில மாற்றங்களால்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

⚫⚫நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

சமூக சீர்திருத்த கருத்துகளை கூறி நடித்ததால் சின்னக் கலைவாணர் என்ற பட்டமும் நடிகர் விவேக்கு உண்டு.

5 முறை தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகர் விருதை பெற்றுள்ளார் நடிகர் விவேக்

ரன், சாமி, பேரழகன் படங்களுக்கு பிலிம்பேர் விருது பெற்றுள்ளார் விவேக்.

மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தில் 1987 ஆம் ஆண்டு விவேக் அறிமுகம் ஆனார்.

சிறந்த நடிகருக்கான பத்மஸ்ரீ உள்பட பல்வேறு விருதுகளை பெற்றவர் விவேக்.

சுற்றுச்சூழல் ஆர்வலராக விளங்கிய நடிகர் விவேக், மரக்கன்றுகள் நடுவதை(Greenkalam) வலியுறுத்தி வந்தார்.

🌈🌈ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை விட  கோரிக்கை 

🌈🌈'கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிகரிக்க துவங்கி உள்ளதால், அடுத்த இரண்டு வாரம் மிக முக்கியமான காலம். பொதுமக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம்; தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும்,'' என, தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார். 

🌈🌈தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு தரமற்ற கல்வி உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகாா் தொடா்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

🌈🌈வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை அனைத்து கல்வி நிறுவனங்களும் இந்த ஆண்டு முதல் பின்பற்ற உயர்கல்வித்துறைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்

🌈🌈கல்வியில் தமிழகத்தைப் பின்பற்றும் புதுச்சேரியில் முக்கிய விஷயங்களை மட்டும் கண்டுகொள்வதில்லை. கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் இந்த கல்வியாண்டாவது நடைமுறைக்கு வருமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது - நாளிதழ் செய்தி

🌈🌈தொடக்கக் கல்வி - ஆசிரியர்களுக்கான குடியிருப்பு (Teachers Quarters) கட்டமைப்பிற்கு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கக் கோரி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் கடிதம் வெளியீடு.

🌈🌈12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் தேர்வு விடுமுறை.

செய்முறை தேர்வு இருப்பின், அந்த பிரிவு மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வர வேண்டும்.

-தமிழக பள்ளிக்கல்வி துறை.

🌈🌈திருச்சியில் பிளஸ் 2 முதல் நாள் செய்முறைத் தேர்வில் 317 பேர் பங்கேற்கவில்லை.

🌈🌈கேரளாவில் திட்டமிட்டபடி 10, 12ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படும் - தலைமை செயலாளர் அறிவிப்பு.

🌈🌈+2 பொதுத் தேர்வு - மே - 2021 - விடுபட்ட / பார்கோடு இல்லாத / சேதமடைந்த முகப்புத் தாட்களை (Top Sheets) இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்தல் சார்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

🌈🌈பள்ளி வேலைநாள் இனி வரும் காலங்களில் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே.

🌈🌈அண்ணா பல்கலை அரியர் தேர்வுகள் ஏப்ரல் 2021 – அட்டவணை வெளியீடு

🌈🌈புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் தேர்வுகள் ஒத்திவைப்பு

🌈🌈பள்ளிக்கல்வி: முதன்மைக்கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்கள்-ஆய்வு - தன்பதிவேடுகள் மற்றும்  தொடர்புடைய பிற பதிவேடுகளை பராமரித்தல்- ஆவணங்களையும் பதிவேடுகளையும் பராமரித்தல்- விரிவான அறிவுரைகள்- வழங்குதல் சார்ந்து - பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு.

🌈🌈தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் சந்தேகத்தை எழுப்புகிறது 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள வளாகங்களில் சம்பந்தமில்லாதவர்கள் நுழைகிறார்கள் 

பொன்முடி திமுக

🌈🌈வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ளும் அரசியல் கட்சி முகவர்களுக்கு 29 தேதி கொரோனா பரிசோரனை.

சென்னை மாநகராட்சி திட்டம்.

45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயம்.

இந்திய தேர்தல் ஆணைய ஆலோசனை படி முடிவு.

🌈🌈வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும்.

வாக்கு எண்ணும் மையங்களில் 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு நடத்தப்படுகிறது. 

வாக்கு எண்ணும் மையங்களில் விதிமீறல் என திமுக நிர்வாகிகள் குற்றச்சாட்டு.                                                                          

🌈🌈கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்தி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

தமிழக தலைமைச் செயலாளருக்கு மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம்.

🌈🌈மதுரை சித்திரை திருவிழாவில் பத்தர்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திட்டவட்டமாக கூறியுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் நலன் கருதி பக்தர்கள் அனுமதியில்லை என்ற கோயில் நிர்வாகத்தின் உத்தரவை ரத்து செய்யமுடியாது என உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது

🌈🌈மீண்டும் 'ஈ.வே.ரா பெரியார் சாலை' என பெயர் மாற்றம்.

👉சென்னையில் சர்ச்சைக்குள்ளான 'கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங் சாலை' மீண்டும் 'பெரியார் சாலை' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

🌈🌈இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை இயல்பான அளவை ஒட்டி இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழையானது ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

🌈🌈உச்சநீதிமன்றம் வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற ஊழியர்கள் பலருக்கு தொற்று உறுதியானதை அடுத்து கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

🌈🌈ராஜஸ்தான் மாநிலத்தில் ஏப்ரல் 16 மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19 காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்

-ராஜஸ்தான் அரசு அறிவிப்பு

🌈🌈தமிழகத்தில் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளோடு இந்திய தேர்தல் ஆணையம் நேற்றுபிற்பகலில் ஆலோசனை.

🌈🌈கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் கையெப்பம் இல்லாத அடையாள அட்டைகளுடன் இருக்கும் ஓப்பந்த பணியாளர்களால் சந்தேகம். கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் கார்த்திக்  புகார் மனு.

🌈🌈ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ஒரு சவரன் ரூ.35,520-க்கு விற்பனை

🌈🌈வெப்பச்சலனம் காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

🌈🌈ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள தலைவி திரைபடம் வெளியாவதற்கு தடை இல்லை.

தீபா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.

🌈🌈கொரோனா பரவல் காரணமாக உலகப் புகழ்பெற்ற சுற்றலா தளமான தாஜ்மஹாலை மே 15ம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவு.

🌈🌈ஆக்ஸிஜன் எடுத்துச் செல்லும் வாகனங்கள் மாநிலம் விட்டு மாநிலம் சென்று வர ஏதுவாக உரிமம் பெறுவதிலிருந்து விலக்களித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

🌈🌈ஐந்து மாநில தேர்தல்களில் பணம், பரிசு பொருட்கள்,  மது உள்ளிட்டவைகள் பறிமுதல் 

446 கோடியுடன் முதல் இடத்தை பிடித்தது தமிழ்நாடு. 

கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிகம். 

கடந்த தேர்தலில் 130 கோடி மட்டுமே பறிமுதல்.

🌈🌈கோவை பெரியகுளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டிய தடுப்புச் சுவர் இடிந்து விழுந்த விவகாரம் குறித்து அண்ணா பல்கலை கட்டிடவியல் துறை ஆய்வு செய்யும் எனவும்,

கூடுதல் செலவினங்கள் அனைத்தும் ஒப்பந்ததாரரிடம் வசூலிக்கப்படும் என கோவை மாநகராட்சி அறிக்கை.

🌈🌈கோவை வால்பாறை நகராட்சி ஆணையர் பவுன்ராஜ் மீது கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு.

மோசடி, நம்பிக்கை மோசடி, ஊழல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு.

15.62 கோடி ரூபாய் வரை நகராட்சி பணத்தை விடுவித்து கையாடல் என புகார்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Live Webinar Link for Head Masters and English Teachers

தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான Live Webinar Link  (THOOTHUKKUDI, VILLUPURAM, SALEM, DHARMAPURI, ERODE, TANJAVUR Dt only) ...