கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இஸ்ரோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்ரோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

‘ஆதித்யா L1' விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படங்களை வெளியிட்டது இஸ்ரோ (ISRO released photos of Sun taken by 'Aditya L1' spacecraft)...

 ‘ஆதித்யா L1' விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படங்களை வெளியிட்டது இஸ்ரோ (ISRO released photos of Sun taken by 'Aditya L1' spacecraft)...


சூரியனை படம்பிடித்த 'ஆதித்யா L1'


‘ஆதித்யா L1' விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ.


விண்கலத்தில் உள்ள புறஊதா கதிர் மூலம் இயங்கும் தொலைநோக்கியில் எடுத்த புகைப்படங்கள் வெளியீடு.






வெற்றிகரமாக பயணத்தை தொடங்கிய ஆதித்யா எல்-1: சூரிய இயக்க ஆய்வும் நன்மைகளும் - ஒரு பார்வை (Aditya L-1 Launches Successfully: Solar Probe and Benefits - A Glimpse)...



வெற்றிகரமாக பயணத்தை தொடங்கிய ஆதித்யா எல்-1: சூரிய இயக்க ஆய்வும் நன்மைகளும் - ஒரு பார்வை (Aditya L-1 Launches Successfully: Solar Probe and Benefits - A Glimpse)...


ஸ்ரீஹரிகோட்டா: சூரியனை நோக்கிய தனது நீண்ட பயணத்தை ஆதித்யா எல்-1 விண்கலன் வெற்றிகரமாகத் தொடங்கியதாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்தார்.


முன்னதாக, 02-09-2023 அன்று காலை 11.50 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலன் விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் ஏவப்பட்டத்தில் இருந்து முதல் 63 நிமிடங்கள் மிக முக்கியமானதாக, சவால் நிறைந்ததாக இருந்தது. ராக்கெட் தனது பல்வேறு படிநிலைகளையும் வெற்றிகரமாகக் கடந்த நிலையில் 63 நிமிடங்களுக்குப் பின்னர் மிஷன் வெற்றியை இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.


இஸ்ரோ மையத்தில் பேசிய அவர், "ஆதித்யா எல்-1 விண்கலன் வெற்றிகரமாக புவியின் நீள்வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. ஆதித்யா எல்-1 தனது நீண்ட பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது. அடுத்த 125 நாட்கள் அது சூரியனை நோக்கிப் பயணித்து லாக்ராஞ்சின் எல்-1 இலக்கை எட்டும். இந்தத் திட்டத்துக்கு ஆதரவாக இருந்த ஆதித்யா-1 திட்ட இயக்குநர் நிகர் சாஜி, இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் பாராட்டுகள். ஆதித்யா எல்-1 பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ள இந்நாளில் இன்னொரு தகவலையும் பகிர விரும்புகிறேன். சந்திரயான்-3 லேண்டர், ரோவரை உறக்க நிலைக்கு கொண்டு செல்லும் பணிகளை இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கவுள்ளோம். நிலவின் இரவை அவை தாங்கி மீண்டுவரும் என நம்புகிறோம்” என்றார்.


தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், “ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக விண்ணில் அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட இத்தருணம் இந்தியாவுக்கு ஒரு சூரிய ஒளிப் பாய்ச்சல் (சன் ஷைன்) தருணம்” என்று கூறினார். பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்ததோடு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குப் பாராட்டுகளை உரித்தாக்கினார். தொடர்ந்து பேசிய அவர், ஆதித்யா-1 திட்ட இயக்குநர் நிகர் சாஜி, மற்றும் திட்டத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தார்.



யார் இந்த நிகர் சாஜி? 

ஆதித்யா-1 திட்ட இயக்குநர் நிகர் சாஜி தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த ஷேக் மீரான்- சைதுன் பீவீ தம்பதியின் 3-வது மகள் நிகர் சாஜி. நிகர் சாஜி செங்கோட்டை அரசு ஆரியநல்லூர் பள்ளியில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கி, ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை செங்கோட்டை எஸ்ஆர்எம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். 12-ம் வகுப்பில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்று, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் இளம் பொறியியல், பிட்ஸ் நிறுவனத்தில் முதுபொறியியல் படித்தார். 1987-ல் இஸ்ரோவில் பணி கிடைத்தது. கடந்த 36 ஆண்டுகளாக அங்கு பணிபுரிகிறார்.


‘ஆதித்யா எல்-1’ என்ன செய்யும்? 

 ‘ஆதித்யா எல்-1’ குறித்து முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் எழுதிய கட்டுரையில் இருந்து: ‘ஆதித்யா எல்-1’ விண்கலம் விண்வெளியில், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள ‘லக்ராஞ்சியன் புள்ளி எல்-1’ என்னும் இடத்தில்தான் நிலைநிறுத்தப்படுகிறது. இஸ்ரோவிடம் வலிமை குன்றிய ராக்கெட்டுகள்தான் உள்ளன. எனவே, வளர்ச்சியடைந்த நாடுகளைப் போல் பூமியிலிருந்து புறப்பட்டு, செல்ல வேண்டிய இடத்தை வேகமாகச் சென்றடைய முடியாது. சந்திரயான் திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ‘கவண்கல் எறிதல்’ நுட்பத்தைப் பயன்படுத்தித்தான் இலக்கை அடையும். இந்த விண்கலம், சுமார் 127 நாள்கள் பயணித்த பின்னரே, தான் நிலைகொள்ள வேண்டிய எல்-1 புள்ளியை அடையும்.


லக்ராஞ்சியன் புள்ளி எல்-1 என்றால் என்ன? 

பூமிக்கும் ஈர்ப்பு விசை இருக்கிறது, சூரியனுக்கும் ஈர்ப்பு விசை இருக்கிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள நேர்க்கோட்டில் ஏதாவது ஒரு புள்ளியில் இரண்டின் ஈர்ப்பும் சமமாக இருக்கும், இல்லையா? அந்த ஈர்ப்பு விசை சமப்புள்ளிதான் லக்ராஞ்சியன் புள்ளி எல்-1. பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ. தொலைவில் சூரியனை நோக்கி இந்தப் புள்ளி அமைந்துள்ளது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு 1,510.7 லட்சம் கி.மீ. அதாவது, பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவில் நூறில் ஒருபங்கு தொலைவில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்படுகிறது.


என்ன பயன்? 

சூரியன், பூமி இரண்டின் ஈர்ப்பு விசையில் சமமாக இழுபட்டு நிற்பதால் பூமியோடு சேர்ந்து இந்தப் புள்ளியில் உள்ள விண்கலம் சூரியனைச் சுற்றிவரும். எனவே, ஒவ்வொரு கணமும் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே இந்த விண்கலம் நிலைநிற்கும். சூரியப் புயல் அல்லது சூரியச் சூறாவளி ஏற்படும்போது முதலில் இந்த விண்கலத்தைத் தாக்கும். இந்த விண்கலம் அதனை உணர்ந்து காந்தப் புயல் குறித்த முன்னெச்சரிக்கையை நமக்குத் தரும். நாம் முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்ளலாம்.


சூரியக் காற்றும் புயலும்: 

சூரியனின் இயல்பான இயக்கம் அவ்வப்போது மாறி, சீற்றம் கொள்ளும். சூரியச் சூறாவளி (solar storm), சூரிய ஒளிப்புயல் (solar flash), சூரிய வெடிப்பு (coronal mass ejections) என்கிற மூன்று முக்கியச் சீற்றங்கள் காந்தப்புயலை ஏற்படுத்தி பூமியின் மீது தாக்கம் செலுத்தும். சூரியனின் இயல்பு இயக்கத்தில் வெளிப்புற மண்டலமான கரோனாவிலிருந்து சூரியக் காற்று எனப்படும் காந்தப்புலத்துடன் கலந்த மின்னூட்டம் கொண்ட அயனித் துகள்களின் வீச்சு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்தக் காற்று, கோள்களுக்கு இடையே உள்ள விண்வெளியில் நொடிக்குச் சுமார் 200 முதல் 400 கி.மீ. வேகத்தில் வீசுகிறது.


சூரியன் தன்னைத் தானே சுற்றிக்கொள்வதால் அதன் காந்தப்புலக்கோடுகளில் அவ்வப்போது முறுக்கம் ஏற்படும். குறிப்பிட்ட வரையறையைக் கடக்கும்போது இந்த முறுக்கம் வெட்டிக்கொள்ளும். அப்போது சில வேளை மிக உக்கிரமாக - நொடிக்கு 800 கி.மீ. வேகத்தில் துகள்கள் பாயும். இதுவே சூரியச் சூறாவளி. சில வேளை முறுக்கிய காந்தப்புலக் கோடுகள் வெடித்துப் புதிய இணைப்பைப் பெறும்.


அப்போது பெருமளவில் ஒளி, எக்ஸ் கதிர், காமா கதிர் முதலிய பெரும் ஆற்றலுடன் வெளிப்படும். இதுவே சூரிய ஒளிப்புயல். முறுக்கிய காந்தப் புலம், பால் பொங்குவதுபோலப் பொங்கி சூரியனின் மேற்புறத்தில் எழுந்தால் அதுவே சூரிய எரிமலை வெடிப்பு அல்லது சூரிய நிறை வெளியேற்ற வெடிப்பு (coronal mass ejection). இந்த மூன்று நிகழ்வுகளின்போதும் சூரியக் காற்றின் வேகம் வெகுவாகக் கூடும்; பூமியின் மீது காந்தப் புயல் ஏற்படும்.


காந்தப் புலப் புயலால் என்ன ஆபத்து? -

காந்தப் புயலின் விளைவாக மனிதர்களுக்கும் உயிரினங்களுக்கும் எந்த ஆபத்தும் இல்லை. தீவிர காந்தப் புயல் பூமியைச் சுற்றியுள்ள அயனி மண்டலத்தை ஆட்டம்கொள்ள வைக்கும். இதன் தொடர்ச்சியாக சிற்றலை ரேடியோ தகவல்தொடர்பில் பாதிப்பு ஏற்படும். நாடு விட்டு நாடு செல்லும் விமானங்கள், சரக்குக் கப்பல்கள் முதலியவை சிற்றலை ஒலிபரப்பைப் பயன்படுத்துகின்றன.


விண்வெளியில் செயற்கைக்கோள் மீது எலெக்ட்ரான் பரவி நிலை மின்னூட்டத்தை ஏற்படுத்தி, மின்னணுக் கருவிகளைப் பாதிக்கும். செயற்கைக்கோளில் உள்ள சூரியத் தகடுகள் பாதிப்புக்கு உள்ளாகும். குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (ஜிபிஎஸ்) தரும் தகவலில் பல மீட்டர் அளவுக்குத் துல்லியம் சார்ந்த பிழை ஏற்படும். பூமியில் உள்ள மின் விநியோக மின்மாற்றிகளில் மீஅதிக மின்னோட்டத்தை உருவாக்கிச் செயலிழக்கச் செய்து தற்காலிக இருட்டடிப்புகூட ஏற்படலாம்.


விண்வெளி வானிலை: 

பூமிக்கு அருகே காந்தப் புலத்தில் ஏற்படும் மாற்றங்கள், சூரியனிலிருந்து வரும் சூரியக் காற்றின் வேகம் முதலியவற்றை அறிந்துகொள்வதைத்தான் விண்வெளி வானிலை என்கிறார்கள். பல ஆயிரம் செயற்கைக்கோள்கள் பூமியைச் சுற்றிவருகின்றன. எனவே, இன்று விண்வெளி வானிலை மாற்றத்தை முன்கூட்டியே அறிந்துகொள்வது செயற்கைக்கோள்கள் பூமியில் தகவல்தொடர்பு, ஜிபிஎஸ் போன்றவற்றைப் பாதுகாத்துக்கொள்ள உதவும்.


நீடிக்கும் மர்மம்: 

சூரியனின் மேற்புற வெப்பம் சுமார் 5,600 டிகிரி செல்சியஸ். ஆனால், அதைத் தாண்டி சூரியனைச் சுற்றிப் படர்ந்துள்ள கரோனா எனும் வளிமண்டலப் பகுதியில் வெப்பநிலை பல லட்சம் டிகிரி செல்சியஸ். விளக்கின் அருகே வெப்பம் கூடுதலாக இருக்கும்; தொலைவு செல்லச் செல்ல வெப்பம் குறையும். சூரியனின் கரோனா மிகமிக உயர் வெப்பநிலையில் அமைந்துள்ளது பெரும் புதிர். இது குறித்தும் ஆதித்யா எல்-1 ஆய்வு நடத்தும்.


என்னென்ன கருவிகள்? 

 புற ஊதா நிறத்தில் சூரியன் உமிழும் ஆற்றலை, சூரிய புற ஊதாக் காட்சித் தொலை நோக்கி (Solar Ultra-violet Imaging Telescope - SUIT) வழியே அளவிடுவதன் மூலம் சூரியனில் ஏற்படும் சீற்றங்கள் குறித்து ஆய்வு செய்யலாம். சூரிய எரிமலைகள் வெடித்து எழும்புவதைப் படம்பிடிக்கும் Visible Emission Line Coronagraph – VELC எனும் கருவி, சூரிய ஒளிப்புயல் ஏற்படுத்தும் எக்ஸ் கதிர்களைப் பதிவுசெய்யும் தாழ் ஆற்றல் எக்ஸ் கதிர் நிறமாலைமானி (Solar Low Energy X-ray Spectrometer), உயர் ஆற்றல் எக்ஸ் கதிர் நிறமாலைமானி (High Energy L1 Orbiting X-ray Spectrometer) முதலிய கருவிகள் உள்ளன. இந்த மூன்று கருவிகளும் சூரிய இயக்கத்தை ஆய்வு செய்யும்.


இதைத் தவிர, விண்கலம் உள்ள பகுதியில் விண்வெளி வானிலையைக் கண்காணிக்கச் சூரியக் காற்று ஆய்வுக் கருவி (Aditya Solar wind Particle Experiment), பிளாஸ்மா துகள் பகுப்பாய்வுக் கருவி (Plasma Analyser Package for Aditya) முதலியவை உள்ளன. இவை அந்தப் புள்ளியில் சூரியக் காற்றின் வேகம், திசை, மின்னேற்றம் முதலியவற்றை ஆராயும். சூரியப் புயல் அல்லது சூரியச் சூறாவளி கடந்துசெல்கிறதா என அறிய முடியும். மேலும், காந்தப்புல அளவைமானி (Magnetometer) வழியே காந்தப் புயல் ஏற்படுகிறதா எனவும் முன்கூட்டியே அறிய முடியும். இதுவரை அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளிக் கழகம், ஜப்பான், சீனா மட்டுமே சூரியனை ஆய்வுசெய்ய விண்வெளித் தொலைநோக்கிகளை அனுப்பியுள்ளன. இந்த முயற்சி வெற்றியடையும்போது இந்தியா ஐந்தாவது நாடாகும்.


நன்றி : இந்து நாளிதழ்






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

சூரியனை ஆய்வு செய்ய அடுத்த விண்கலத்தை அனுப்ப தயாராகும் இஸ்ரோ - ஆதித்யா L1 விண்கலம் செப்டம்பர் இரண்டாம் தேதி காலை 11:50 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது (ISRO prepares to launch next spacecraft to explore Sun The Aditya L1 spacecraft is scheduled to launch on September 2 at 11:50 am)...

 சூரியனை ஆய்வு செய்ய அடுத்த விண்கலத்தை அனுப்ப தயாராகும் இஸ்ரோ - ஆதித்யா L1 விண்கலம் செப்டம்பர் இரண்டாம் தேதி காலை 11:50 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது (ISRO prepares to launch next spacecraft to explore Sun The Aditya L1 spacecraft is scheduled to launch on September 2 at 11:50 am)...








>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

உலக விண்வெளி வாரம் 2022 - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி (World Space Week 2022 - Essay Writing competition for school students organized by Indian Space Research Organization (ISRO))...



>>> உலக விண்வெளி வாரம் 2022 - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி (World Space Week 2022 - Essay Writing competition for school students organized by Indian Space Research Organization (ISRO))...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



உலக விண்வெளி வாரம் 

உலக விண்வெளி வாரம் (WSW) என்பது ஐக்கிய நாடுகள் சபையின் (UN) தீர்மானத்தின்படி 1999 முதல் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான சர்வதேச நிகழ்வாகும். 


ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4 முதல் 10 வரை நடைபெறும் ஒரு வாரக் கொண்டாட்டங்கள், விண்வெளி ஆய்வில் இரண்டு மைல்கற்களை நினைவுபடுத்துகின்றன.


 1957 ஆம் ஆண்டு ஸ்புட்னிக்-1 என்ற முதல் செயற்கைக்கோள் ஏவப்பட்ட அக்டோபர் 4 ஆம் தேதி மற்றும் 1967 ஆம் ஆண்டு அண்டவெளியை அமைதியான முறையில் பயன்படுத்துவதற்கான ஐநா பிரகடனம் நடைமுறைக்கு வந்த நாளாக அக்டோபர் 10 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 


விண்வெளி வார சர்வதேச சங்கம் மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள உள்ளூர் ஒருங்கிணைப்பாளர்கள், ஒவ்வொரு ஆண்டும் UNஆல் அறிவிக்கப்படும் கருப்பொருளின் அடிப்படையில், WSW நிகழ்வு அமைப்பாளர்கள் வாரம் முழுவதும் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இந்தத் தலைப்பை ஆராயவும், மேம்படுத்தவும் மற்றும் பயன்படுத்தவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். 


இது மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கான பங்களிப்புகளில் கவனம் செலுத்தி விண்வெளி மற்றும் கல்வியில் சர்வதேச ஒத்துழைப்பை வளர்க்கிறது. மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ ப்ராபல்ஷன் வளாகத்தில் ஒவ்வொரு ஆண்டும் உலக விண்வெளி வாரம் கொண்டாடப்படுகிறது. 


WSW இன் போது, ​​விண்வெளியில் சிறப்பு கவனம் செலுத்தும் நிகழ்வுகள் மற்றும் கல்வி நிகழ்ச்சிகள் IPRC க்கு உள்ளேயும் வெளியேயும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 


IPRC அருங்காட்சியகத்தைப் பார்வையிட, தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்: 04637- 281210 / 281211


-------------

World Space Week


          World Space Week (WSW) is an important international event celebrated since 1999, according to a United Nations (UN) resolution. The week long celebrations held from October 4 to 10 of every year, commemorate two milestones in Space exploration; 4th October marking the launch of the first man-made satellite, Sputnik-1 in 1957 and 10th October marking the day on which the UN declaration for peaceful uses of outer Space came into force in 1967. The celebrations are coordinated by UN with the support of Space Week International Association and local coordinators in various countries, based on a theme declared by UN, every year. The WSW event organisers are encouraged to explore, develop and apply this theme in all the programmes conducted throughout the week. It fosters international cooperation in Space outreach and education, focusing on the contributions to the betterment of mankind.


            World Space Week is celebrated every year in ISRO Propulsion Complex, Mahendragiri. During WSW, events and educational programmes with special focus on Space are organised within and outside IPRC.


For IPRC Museum Visit, Please Contact:

 04637- 281210 / 281211




பள்ளிகளில் செயற்கைக்கோள் தொலைக்காட்சி வகுப்பறை அமைக்க உதவி: நாடாளுமன்றக் குழுவிடம் ISRO சம்மதம்...

 


கரோனா வைரஸ் பரவலால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் கற்றலில் ஏற்பட்ட இடைவெளியைச் சமன் செய்யும் நோக்கில், நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களில் செயற்கைக்கோள் தொலைக்காட்சி வகுப்பறையை அமைக்கத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க, கல்விக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் இஸ்ரோ சம்மதம் தெரிவித்துள்ளது.


கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கக் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் மாணவர்கள் பள்ளிக்கூடத்துக்கு நேரடியாகச் செல்வதில் தடை ஏற்பட்டது. ஆன்லைன் மூலமும், யூடியூப் மூலமும்தான் கல்வி கற்பிக்கப்படுகிறது.


கடந்த ஓராண்டாக கற்றலில் ஏற்பட்ட இடைவெளியைச் சமன் செய்யும் நோக்கில் செயற்கைக்கோள் தொலைக்காட்சி உதவியுடன் வகுப்பறை அமைக்க உதவி செய்யக் கோரி இஸ்ரோவிடம், கல்விக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கேட்டிருந்தது.


கல்விக்கான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம், நிலைக்குழுத் தலைவர் எம்.பி. வினய் சகாஸ்ரபுத்தே தலைமையில் நேற்று நடந்தபோது இந்த விவகாரம் குறித்துப் பேசப்பட்டது.


இந்தக் கூட்டத்தில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் கல்வித்துறைச் செயலாளர்கள் பங்கேற்றனர். இஸ்ரோ சார்பிலும் விஞ்ஞானிகள் பங்கேற்று, நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களில் சாட்டிலைட் டிவி வகுப்பறை அமைப்பது தொடர்பான செயல்திட்டத்தையும், விரிவான விளக்கத்தையும் அளித்தனர்.


இந்தக் கூட்டம் குறித்து நிலைக்குழு வட்டாரங்கள் கூறுகையில், 'இஸ்ரோ அமைப்பிலிருந்து விஞ்ஞானிகள் நிலைக்குழுக் கூட்டத்தில் பங்கேற்று, செயற்கைக்கோள் தொலைக்காட்சி வகுப்பறையால் மாணவர்களுக்கு விளையும் பயன், செயல்பாடு ஆகியவை குறித்து விரிவாக விளக்கினர். மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சக அதிகாரிகள், தூர்தர்ஷன் தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்றனர்.


மாநில அரசுகள் எங்கள் உதவிகளைப் பயன்படுத்த விருப்பமாக இருந்தால் செயற்கைக்கோள் உரிமையை வழங்கி, பள்ளிக்கூடங்களில் செயற்கைக்கோள் வகுப்பறையை அமைத்து தொழில்நுட்ப உதவிகள் வழங்க இஸ்ரோ தயாராக இருக்கிறது எனத் தெரிவித்தனர்.


உத்தரப் பிரதேசம், பிஹார் மாநில அரசுகள் 10 முதல் 12-ம் வகுப்புகளை விரைவில் தொடங்க இருப்பதாக இந்தக் கூட்டத்தில் தெரிவித்தனர். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துவருவதாகவும் தெரிவித்தனர்.


செயற்கைக்கோள் தொலைக்காட்சி வகுப்பறை உருவாகும்பட்சத்தில் மாணவர்கள் நேரடியாகப் பள்ளிக்கு வரமுடியாவிட்டாலும், கல்வி கற்க முடியும். கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் ஸ்மார்ட்போன், இணையதள வசதியின்றி பாடங்களைத் தொலைக்காட்சி மூலமே கற்க முடியும்.


இதற்கிடையே லடாக், ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், விளையாட்டு அரங்குகள் ஆகியவற்றைப் பார்வையிட அடுத்த வாரம் 5 நாட்கள் பயணமாக 30 பேர் கொண்ட நாடாளுமன்றக் குழு செல்கிறது. இந்தக் குழுவில் கல்வி, மகளிர், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுப் பிரிவுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் செல்கிறார்கள்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...