கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
ஆன்லைன் வகுப்புகள் நேரடி கற்றலுக்கு ஈடாகாது என நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை(Parliamentary Standing Committee Report that Online Classes do not equate to direct learning)...
கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் ஆன்லைன் முறையிலேயே நடத்தப்படும் - உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு...
தமிழகத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் தற்பொழுது துவங்கியிருக்கும் புதிய கல்வியாண்டில் பயிலும் 2 மற்றும் 3வது ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
ஆன்லைன் வகுப்புகள்
கொரோனா 2ஆம் பேரலை காரணமாக மூடப்பட்டுள்ள கல்வி நிறுவனங்கள் பல மாநிலங்களில் மீண்டுமாக திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் வழியாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே கல்லூரி மாணவர்களுக்கான 2021-22 புதிய கல்வியாண்டு துவங்கியுள்ள நிலையில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவுகளும் துவங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் துவங்குமா என்று எதிர்பார்ப்புகள் எழுந்து வந்தது.
இந்நிலையில் கல்லூரிகளில் 2ஆவது மற்றும் 3ஆம் ஆண்டு மாணவர்களுக்கான அடுத்த கல்வியாண்டு வகுப்புகள் ஆன்லைன் முறையிலேயே நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனா 2ஆம் பரவல் குறைவதை பொறுத்து தான் உயர் கல்வி நிறுவனங்களில் நேரடி வகுப்புகளை துவங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆபத்தான 'ஆன்லைன்' வகுப்பு - மரம் ஏறி படிக்கும் மாணவர்கள்...
மொபைல் போன் சிக்னல் கிடைக்காததால், மரத்தில் ஏறி மாணவர்கள், 'ஆன்லைன்' வகுப்பை கவனிக்கின்றனர்.
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றியம் முள்ளுக்குறிச்சி அருகே பெரப்பஞ்சோலை, பெரியகோம்பை ஊராட்சிகள் உள்ளன. இங்கு, 20க்கும் மேற்பட்ட மாணவர்கள், கல்லுாரி, பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், ஆன்லைன் வாயிலாக பாடம் நடத்தப்படுகிறது. பெரப்பஞ்சோலை, பெரியகோம்பையில் மொபைல்போன் டவர்கள் இல்லை. பேசுவதற்கே சரியாக சிக்னல் கிடைக்காது. பாடம் சம்பந்தப்பட்ட வீடியோ, ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க வேண்டும் என்றால், 5 கி.மீ., துாரம் உள்ள பகுதிக்கு செல்ல வேண்டும்.
இதனால், மாணவர்கள், அந்த கிராமத்தில் உயரமாக உள்ள ஆலமரத்தின் கிளைகள் மீது அமர்ந்து, ஆன்லைன் வகுப்புகளை கவனித்து வருகின்றனர். தினமும் காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை உயிரை பணயம் வைத்து, ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பது, மாணவர்களின் பெற்றோரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஓராண்டாகவே இப்பகுதி மாணவர்கள், ஆலமரத்தில் அமர்ந்து தான் வகுப்புகளை கவனித்து வருகின்றனர். மாணவர்களின் நலன்கருதி, அப்பகுதியில் மொபைல்போன் டவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிகளில் செயற்கைக்கோள் தொலைக்காட்சி வகுப்பறை அமைக்க உதவி: நாடாளுமன்றக் குழுவிடம் ISRO சம்மதம்...
கரோனா வைரஸ் பரவலால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் கற்றலில் ஏற்பட்ட இடைவெளியைச் சமன் செய்யும் நோக்கில், நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களில் செயற்கைக்கோள் தொலைக்காட்சி வகுப்பறையை அமைக்கத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க, கல்விக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் இஸ்ரோ சம்மதம் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கக் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் மாணவர்கள் பள்ளிக்கூடத்துக்கு நேரடியாகச் செல்வதில் தடை ஏற்பட்டது. ஆன்லைன் மூலமும், யூடியூப் மூலமும்தான் கல்வி கற்பிக்கப்படுகிறது.
கடந்த ஓராண்டாக கற்றலில் ஏற்பட்ட இடைவெளியைச் சமன் செய்யும் நோக்கில் செயற்கைக்கோள் தொலைக்காட்சி உதவியுடன் வகுப்பறை அமைக்க உதவி செய்யக் கோரி இஸ்ரோவிடம், கல்விக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கேட்டிருந்தது.
கல்விக்கான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம், நிலைக்குழுத் தலைவர் எம்.பி. வினய் சகாஸ்ரபுத்தே தலைமையில் நேற்று நடந்தபோது இந்த விவகாரம் குறித்துப் பேசப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் கல்வித்துறைச் செயலாளர்கள் பங்கேற்றனர். இஸ்ரோ சார்பிலும் விஞ்ஞானிகள் பங்கேற்று, நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களில் சாட்டிலைட் டிவி வகுப்பறை அமைப்பது தொடர்பான செயல்திட்டத்தையும், விரிவான விளக்கத்தையும் அளித்தனர்.
இந்தக் கூட்டம் குறித்து நிலைக்குழு வட்டாரங்கள் கூறுகையில், 'இஸ்ரோ அமைப்பிலிருந்து விஞ்ஞானிகள் நிலைக்குழுக் கூட்டத்தில் பங்கேற்று, செயற்கைக்கோள் தொலைக்காட்சி வகுப்பறையால் மாணவர்களுக்கு விளையும் பயன், செயல்பாடு ஆகியவை குறித்து விரிவாக விளக்கினர். மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சக அதிகாரிகள், தூர்தர்ஷன் தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்றனர்.
மாநில அரசுகள் எங்கள் உதவிகளைப் பயன்படுத்த விருப்பமாக இருந்தால் செயற்கைக்கோள் உரிமையை வழங்கி, பள்ளிக்கூடங்களில் செயற்கைக்கோள் வகுப்பறையை அமைத்து தொழில்நுட்ப உதவிகள் வழங்க இஸ்ரோ தயாராக இருக்கிறது எனத் தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேசம், பிஹார் மாநில அரசுகள் 10 முதல் 12-ம் வகுப்புகளை விரைவில் தொடங்க இருப்பதாக இந்தக் கூட்டத்தில் தெரிவித்தனர். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துவருவதாகவும் தெரிவித்தனர்.
செயற்கைக்கோள் தொலைக்காட்சி வகுப்பறை உருவாகும்பட்சத்தில் மாணவர்கள் நேரடியாகப் பள்ளிக்கு வரமுடியாவிட்டாலும், கல்வி கற்க முடியும். கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் ஸ்மார்ட்போன், இணையதள வசதியின்றி பாடங்களைத் தொலைக்காட்சி மூலமே கற்க முடியும்.
இதற்கிடையே லடாக், ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், விளையாட்டு அரங்குகள் ஆகியவற்றைப் பார்வையிட அடுத்த வாரம் 5 நாட்கள் பயணமாக 30 பேர் கொண்ட நாடாளுமன்றக் குழு செல்கிறது. இந்தக் குழுவில் கல்வி, மகளிர், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுப் பிரிவுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் செல்கிறார்கள்.
ஸ்மார்ட் போன் இல்லாததால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க இயலாத மாணவர்களின் விவரங்களை சமர்பிக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...
ஸ்மார்ட் போன் இல்லாததால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க இயலாத மாணவர்களின் விவரங்களை சமர்பிக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...
தமிழ்நாட்டில் பள்ளி குழந்தைகளின் இணையவழி வகுப்புகளுக்கான நெறிமுறைகள் - மாணவர் மனசு பெட்டி - அரசாணை எண்: 83, நாள்: 17-06-2022 வெளியீடு (G.O. (1D) No.83, Dated: 17-06-2021)...
தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு:
ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் பாதுகாப்பு குழு உருவாக்கப்படும்.
குறைகளை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்படும்.
குறைகளை தீர்க்க ஹெல்ப் லைன் எண், மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்படும்.
ஆன்லைன் வகுப்பில் கண்ணியமான உடை அணிய வேண்டும்.
ஆன்லைன் வகுப்புகளை முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய வேண்டும்.
ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டம் பற்றிய புரிதலை ஏற்படுத்தும் வகையில் பயிற்சி வகுப்புகள்.
>>> Click here to Download G.O. (1D) No.83, Dated: 17-06-2021...
>>> தமிழ்நாட்டில் பள்ளி குழந்தைகளின் இணையவழி வகுப்புகளுக்கான நெறிமுறைகள் (தமிழில்)...
பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளி அளவில் குழு அமைக்கப்பட்ட வேண்டும். குழுவில் பள்ளி முதல்வர், 2 ஆசிரியர்கள், 2 பெற்றோர், 2 நிர்வாகிகள் இடம்பெற வேண்டும்.
பள்ளிகள் அமைக்கும் குழுவில் பள்ளிசாராத நபர் ஒருவர் இடம்பெற வேண்டும். அனைத்து ஆன்லைன் வகுப்புகளும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வப்போது ஆன்லைன் வகுப்பு வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும். மாணவர்கள் புகார் அளிக்க வசதியாக பள்ளிகளில் பெட்டிகள் வைக்கப்பட்ட வேண்டும்.
பள்ளிக் குழந்தைகளைப்பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாப்பது குறித்த வழிகாட்டுதல் மற்றும் இணையவழிவகுப்புகளுக்கான நெறிமுறைகள் :
தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக்கல்வி வாரியங்களைச் சார்ந்த ( Education Boards ) அனைத்துப் பள்ளிகளுக்கும் இந்நெறிமுறைகள் பொருந்தும்.
மாணவர் பாதுகாப்பைத் தொடர்ச்சியாக மேற்பார்வை செய்யவும் , அது சார்ந்த நடவடிக்கைகள் குறித்து மதிப்பீடு செய்யவும் , ஒவ்வொரு பள்ளியிலும் , " மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு " அமைக்கப்படும்.
இக்குழுவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் , ஆசிரியர் இருவர் , பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் இருவர் , பள்ளி நிருவாக உறுப்பினர் ஒருவர் , ஆசிரியரல்லாத பணியாளர் ஒருவர் மற்றும் தேவைக்கேற்பப் பள்ளி சாரா வெளிநபர் ஒருவர் உறுப்பினர்களாக இருப்பர் .
ஒரு மாத காலத்தில் மாநில அளவில் ஒரு கட்டுப்பாட்டு அறையைப் பள்ளிக்கல்வித்துறை உருவாக்கும்.
அனைத்துத் தரப்பினரும் தங்களது குறைகளை எளிதாகத் தெரிவிக்கும் வகையில் இம்மையத்தில் கட்டணமில்லா நேரடி தொலைபேசி ( Hot Line ) மற்றும் தனிப்பட்ட மின்னஞ்சல் வசதி உருவாக்கப்படும்.
மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு தங்களுக்கு வரப்பெற்ற எந்த வகையான புகாரையும் உடனடியாக மாநிலக் கட்டுப்பாட்டு அறைக்குத் ( Central Complaint Centre - CCC ) தெரியப்படுத்தவேண்டும் . . இந்த மையம் புகார்களைப் பதிவுசெய்வது மட்டுமின்றி , அதுசார்ந்து பின்பற்ற வேண்டிய அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு வழங்கும்.
இம்மையத்தில் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பல்துறை வல்லுநர் இருப்பர் . இம்மையத்தின் தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் மந்தணத்தன்மையுடன் பாதுகாக்கப்படும்.
. பள்ளிகளைச் சார்ந்த அனைத்து அங்கத்தினருக்கும் போக்சோ ( POCSO ) சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்த முழு புரிதல் உண்டாகும் வகையில் வருடந்தோறும் பயிற்சிகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பான விழிப்புணர்வு கட்டகம் ( orientation module ) பள்ளிக்கல்வித்துறையால் உருவாக்கி வழங்கப்படும்.
பள்ளிகளில் பாதுகாப்பை மேம்படுத்தவும் , சுயத் தணிக்கை ( Self - audit ) செய்வதை உறுதி செய்யவும் பள்ளிக்கல்வித்துறையால் கட்டகம் ( Module ) உருவாக்கப்பட்டு வழங்கப்படும் . . மற்றும் இணையவழிக் கற்றல் - கற்பித்தல் நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் வகுப்பறைச் சூழலுக்கேற்றவாறு கண்ணியமாக உடை அணியவேண்டும்.
இணையவழிக் கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளை முழுமையாகப் பதிவு செய்வதோடு , அப்பதிவுகளைக் குறிப்பிட்ட இடைவெளியில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழுவைச் சேர்ந்தவர்கள் தொடர் ஆய்வு செய்யவேண்டும்.
• புகார் மற்றும் மாணவர்களின் கருத்துக்களை எளிதே தெரிவிப்பதற்காகப் பள்ளிவளாகத்தில் பாதுகாப்புப் பெட்டிகள் ( Safety Boxes ) வைக்கப்படும் . மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களை ஆய்வுசெய்து தக்க நடவடிக்கை எடுக்கும்.
• மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு , பள்ளியில் பெறப்பட்ட அனைத்துப் புகார்களையும் பதிவு செய்யத் தனியாக ஒரு பதிவேட்டைப் பராமரிக்கும்.
புகாரானது எந்த முறையில் பெறப்பட்டிருந்தாலும் ( வாய்மொழி உட்பட ) இந்தப் பதிவேட்டில் பதியப்பட வேண்டும் . . அனைத்துப் பள்ளிகளிலும் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 15 முதல் நவம்பர் 22 வரை ' குழந்தைகள் துன்புறுத்தலைத் தடுக்கும் வாரம் ' என விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தொந்தரவு அளிப்போர் மீது புகார் தெரிவிக்க மாவட்ட வாரியாக காவல்துறை ஆய்வாளர்கள் அலைபேசி எண்கள் வெளியீடு...
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று கல்வி கற்க முடியாத நிலை உள்ளது. எனவே, மாணவ, மாணவிகளின் நலன் கருதி இணைய வழியில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற சமயத்தில் சில பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களிலுள்ள பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், ஆசிரியர்களால் பாலியல் ரீதியான தொந்தரவுகளைத் தவிர்ப்பதற்காகவும், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தக்கூடிய பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், முதல்வர்களுடன் மத்திய மண்டல ஐ.ஜி., வே.பாலகிருஷ்ணன் இன்று (ஜூன் 08) காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில், 255 பள்ளிகளின் முதல்வர்கள், தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்.
முழுவதும் பதிவு செய்ய வேண்டும்
அப்போது அவர், “முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி இணையவழி வகுப்புகள் உரிய முறைப்படுத்துதலுடன் நடைபெற வேண்டும். அனைத்து இணையவழி வகுப்புகளும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தினரால் முழுவதுமாகப் பதிவு செய்யப்பட்டு, அவற்றினைப் பாதுகாப்பாகப் பராமரிக்க வேண்டும்.
பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்த 2 நபர்கள் மூலம் குறிப்பிட்ட இடைவெளியில் அந்தப் பதிவுகள் முறையாக ஆய்வு செய்யப்பட வேண்டும். பாலியல் தொந்தரவு தொடர்பான புகார்களை எளிதில் அளித்திடும் வகையில் காவல்துறையின் உதவி எண்களைப் பள்ளி நிர்வாகத்தினர் மாணவ, மாணவிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.
மாணவ, மாணவிகளிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தி, தவறிழைக்கும் ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்
தங்கள் பள்ளி மூலம் நடத்தப்படும் இணையவழி வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்கள் கண்ணியமான முறையில் செயல்படுவதையும், மாணவ, மாணவிகள் எவ்வித அச்சமும், தயக்கமுமின்றி அவ்வகுப்புகளில் பயில்வதையும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும்.
மத்திய மண்டலத்திலுள்ள மாவட்டங்களில் செயல்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கையாளும் பிரிவின் காவல் அதிகாரிகள், தங்களது பகுதிக்குட்பட்ட பள்ளி நிர்வாகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு இணையம் வழியாகப் பயிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார்.
மாவட்ட வாரியாக இன்ஸ்பெக்டர் நியமனம்
பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளிப்போர் மீது புகார் தெரிவிப்பதைக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக மாவட்ட வாரியாக இன்ஸ்பெக்டர்களை நியமித்து ஐ.ஜி., வே.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி திருச்சி மாவட்டத்தினர் 94981 77954 (யசோதா), புதுக்கோட்டை மாவட்டத்தினர் 94981 58812 (ரசியா சுரேஷ்), கரூர் மாவட்டத்தினர் 83000 54716 (சிவசங்கரி), பெரம்பலூர் மாவட்டத்தினர் 94981 06582 (அஜீம்), அரியலூர் மாவட்டத்தினர் 94981 57522 (சிந்துநதி), தஞ்சாவூர் மாவட்டத்தினர் 94981 07760 (கலைவாணி), திருவாரூர் மாவட்டத்தினர் 94981 62853 (ஸ்ரீபிரியா), நாகப்பட்டினம் மாவட்டத்தினர் 94981 10509 (ரேவதி), மயிலாடுதுறை மாவட்டத்தினர் 94981 57810 (சித்ரா) ஆகியோரைத் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.
ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்க 7 பேர் கொண்ட குழு அமைப்பு...
கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்க 7 பேர் கொண்ட குழு அமைப்பு.
கல்லூரி கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைப்பு.
கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் பணி தீவிரம்.
நேரடி வகுப்புகளைப் போன்று, ஆன்லைன் வகுப்புகளிலும் உடை அணிதல் வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகள் இடம்பெற வாய்ப்பு.
7 பேர் கொண்ட குழு வரும் 11ஆம் தேதிக்குள் வரைவு அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும்.
ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டுதல்கள்...
ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டுதல்கள்...
பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் முறையாக நடைபெறுவதை கண்காணிப்பது குறித்து மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆலோசனைக் கூட்டம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 160, நாள்: 26-05-2021...
பள்ளிகள் நடத்தும் ஆன்லைன் வகுப்புகளை கண்காணிக்க தமிழக அரசு நடவடிக்கை.
ஆன்லைன் வகுப்புகளை பள்ளிகளின் நிர்வாகம் பதிவு செய்ய வேண்டும். அந்தப் பதிவுகளை பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் இருவர் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.
ஆன்லைன் வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்து கொள்வோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் -- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை...
>>> தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 160, நாள்: 26-05-2021...
மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடங்கள் நடத்த உத்தரவு...
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பேராசிரியர்கள் கல்லூரிக்கு வந்து மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு பொதுத் தெர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. முன்னதாக 1 முதல் 11ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு தேர்வில்லாமல் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக மட்டுமே பாடங்கள் நடத்தப்படும் என பல்கலைக்கழகங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன.
மதுரை உயர் கல்வி அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்கவில்லை. எனவே, கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி ஊழியர்கள் மட்டுமே கல்வி நிறுவனங்களுக்கு வந்து ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும்.
அரசு அனுமதி வழங்கினால் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியாகும். தற்போது உள்ள சூழ்நிலையில் ஆன்லைன் வழியே தேர்வுகளும் நடத்தப்படும். அரசு நெறிமுறைகளை மீறி மாணவர்களை கல்லூரிகளுக்கு வரவழைத்தால் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
கல்லூரி பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இணையவழி வகுப்பு - வாரத்தில் 6 நாட்கள் நடைபெறும் என அரசு அறிவிப்பு...
கரோனா தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு பல்கலைக்கழகங்கள், கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இன்று முதல் நேரடி வகுப்புகள் கிடையாது. வாரத்தில் 6 நாட்கள் இணையவழி வகுப்புகள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. செய்முறைத் தேர்வுகளை மார்ச்31-ம் தேதிக்குள் முடிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டது. பிளஸ் 2 மாணவர்களுக்கு வழக்கம்போல வகுப்பு நடைபெற்று வருகிறது.
மாணவர்கள் குழப்பம்
கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பாலிடெக்னிக் மாணவர்களுக்கு தொடர்ந்து வகுப்புகள் நடைபெறுமா அல்லது விடுமுறை விடப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பாலிடெக்னிக் மாணவர்களுக்கு (மார்ச் 23) முதல் இணையவழி வகுப்புகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் தற்போது கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் சூழலைக் கருத்தில் கொண்டு, தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் அபூர்வாவுடன் ஆலோசனை செய்தார்.
தீவிர ஆலோசனை
அப்போது அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், கல்லூரி கல்வி இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநரின் பரிந்துரைகளை ஏற்று, மக்கள் நல்வாழ்வுத் துறை, உயர்கல்வித் துறை மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையினருடன் ஆலோசிக்கப்பட்டது.
மாணவர் நலன் கருதி..
கரோனா தொற்று அதிகரித்து வருவதாலும், இதனால் மாணவர்களும், பொதுமக்களும் பாதிக்கப்படக் கூடாது என்பதாலும், அவர்களின் நலன் கருதி உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் (கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள்), அனைத்துநிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் மார்ச் 23-ம் தேதி முதல் இணையவழி வகுப்புகள் வாரத்தில் 6 நாட்கள் தொடர்ந்து நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கலை அறிவியல், பொறியியல் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு குறிப்பாக இறுதிப் பருவ மாணவர்களுக்கு செய்முறை வகுப்புகள், செய்முறைத் தேர்வுகளை மார்ச் 31-ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பருவத்துக்கான தேர்வுகளை இணையவழியில் மட்டுமே நடத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அரசாணையும் வருவாய் மற்றும் மேலாண்மைத் துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுவரை சென்னையில் 2 லட்சத்து 34,702 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 47,139 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 261 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 659 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சென்னையில் 3,211 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 8,619 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அரசு, தனியார் மருத்துவமனைகளில் முதியவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,609ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 4,202 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 42,115,கோவையில் 57,267, செங்கல்பட்டில் 54,469, திருவள்ளூரில் 45,176 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது. தமிழகத்தில் 259 அரசு, தனியார் ஆய்வகங்களில் இதுவரை 1 கோடியே 88 லட்சத்து 54,356 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 73,247 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து வகைக் கல்லூரிகளிலும் 23.03.2021 முதல் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் வழிக் கல்வி தொடரும் - அரசாணை வெளியீடு...
Disaster Management Act 2005 - COVID 19 - Online Classes to be Conducted in all Higher Educational Institutions - Direct classes will be canceled in all types of colleges in Tamil Nadu from 23.03.2021 and online education will continue - Government Order released...G.O.Ms.No.327, Dated: 22-03-2021...
>>> Click here to Download G.O.Ms.No.327, Dated: 22-03-2021...
பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து 1 வருடம் நிறைவு! தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டின் நிலை? எப்பொது அடுத்த கல்வி ஆண்டு தொடங்கும்?
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விட்டு ஓராண்டு நிறைவு; ஆன்லைன் கல்வி மாணவர்களுக்கு கைகொடுத்ததா?
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவுபெற்று விட்டது. இந்த காலகட்டத்தில் வழங்கப்பட்ட ஆன்லைன் வழிக்கல்வி மாணவர்களுக்கு கைகொடுத்ததா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
பள்ளிகளுக்கு விடுமுறை
கொரோனா கோரத்தாண்டவம் தொடங்கிய நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 12-ந் தேதிக்கு பிறகு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அந்த நேரத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது.
கடைசித்தேர்வு கொரோனா தொற்றுக்கு மத்தியில் நடத்தப்பட்டதால், சில மாணவர்கள் தேர்வை எழுத முடியாமல் போனதாக தகவல் வெளியானது. அதையடுத்து அந்த மாணவர்களுக்கு தனியாக தேர்வும் நடத்தப்பட்டது. மேலும் பிளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, அவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. இவ்வாறாக பொதுத்தேர்வு அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில், 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பிற மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.
ஆன்லைன் கல்வி கைகொடுத்ததா?
இப்படியாக கடந்த கல்வியாண்டு கொரோனாவால் கரைந்து போனது. அடுத்த கல்வியாண்டாவது எந்த அவதியும் இல்லாமல் தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில், மீண்டும் தொற்றின் தாக்கம் தீவிரமானதால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. பள்ளிகள் மூடப்பட்டாலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில், ஆன்லைன் வழிக் கல்விமுறையை மத்திய-மாநில அரசுகள் கொண்டு வந்து, கடந்த ஓராண்டாக அம்முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தனியார் பள்ளிகளில் பெரும்பாலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டாலும், அரசு பள்ளிகளில் அத்தி பூத்தாற்போலவே ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகின்றன. ஆக இந்த ஆன்லைன் வழிக்கல்வி பெருமளவில் மாணவர்களுக்கு கைகொடுத்ததா என்றால், பலருடைய பதில், ‘இல்லை’ என்பதாகவே இருக்கிறது. மாணவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் தரப்பில் மட்டுமல்ல, ஆசிரியர்கள் தரப்பிலும் அதே பதில்தான் வருகிறது.
ஓராண்டு நிறைவு
ஆன்லைன் வழிக் கல்வி, கல்வி தொலைக்காட்சி, நேரடி வகுப்புகளில் பங்குபெற்றவர்களில், 12-ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் தற்போது பொதுத்தேர்வை எதிர்கொள்ள இருக்கின்றனர்.இந்நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை விட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றிருக்கிறது. எப்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும், நண்பர்களோடு சகஜமான வகுப்பறை வாழ்க்கை எப்போது மீண்டும் கிடைக்கும் என்ற ஆவலில் மாணவர்களும், வீட்டில் அடங்காமலும், படிக்காமலும் விளையாட்டுத்தனமாக இருக்கும் பிள்ளைகளுக்கு எப்போதுதான் பள்ளிகள் திறக்கும் என்ற எதிர்பார்ப்பில் பெற்றோர்களும் இருந்தாலும், தற்போது கொரோனா மீண்டும் மிரட்டுவது, பள்ளிகள் திறப்பை மேலும் கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
மழலையர் வகுப்புகளுக்கு அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் நடத்துவது சந்தேகம் என்று ஏற்கனவே சில பள்ளிகள் மறைமுகமாக தெரிவித்துவிட்டன. இதே நிலை நீடித்தால் மற்ற மாணவர்களுக்கான வகுப்புகளும் கடந்த கல்வியாண்டை போலவே ஆன்லைன் வாயிலாகவே தொடரக்கூடும்.
முதுகலை வணிகவியல் ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் இணைய வழி பயிற்சி 28.12.2020 முதல் நடைபெறுதல் - ஆசிரியர்கள் பதிவு செய்வதற்கான இணைப்பு (Link)...
முதுகலை வணிகவியல் ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் இணைய வழி பயிற்சி 28.12.2020 முதல் நடைபெறுதல் - ஆசிரியர்கள் பதிவு செய்வதற்கான இணைப்பு (Link)...
AXN-INFOTECH
PG COMMERCE ONLINE TRAINING REGISTRATION FORM
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSemT9DMZkXyliD838QIiEshDOzbFYI-VbKfruDdTUb1x9QIXQ/viewform
பள்ளிக் கல்வி - முதுகலை வணிகவியல் ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் இணைய வழி பயிற்சி 28.12.2020 முதல் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...
பள்ளிக் கல்வி - முதுகலை வணிகவியல் ஆசிரியர்களுக்கு AXN Infotech நிறுவனம் மூலம் Computerised Accounting System - Tally என்ற தலைப்பில் 5 நாட்கள் இணைய வழி பயிற்சி 28.12.2020 முதல் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...
>>> பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பள்ளிக் கல்வி - IIT/JEE போன்ற தொழில்நுட்பக் கல்விக்கான போட்டித் தேர்வில் பங்கேற்க 11&12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச இணையவழி பயிற்சி அளித்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள்...
பள்ளிக் கல்வி - IIT/JEE போன்ற தொழில்நுட்பக் கல்விக்கான போட்டித் தேர்வில் பங்கேற்க 11&12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச இணையவழி பயிற்சி அளித்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள்...
>>> பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024
குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...