கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஓரிகாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஓரிகாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஏதுவான சூழலை உருவாக்குதல் மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவுதல் நோக்கில் தேதி வாரியாக மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் (உறுதிமொழி, Slogans, ஓரிகாமி (காகித பறவை செய்தல்), சிறார் திரைப்படம், சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து, விளையாட்டுப் போட்டிகள்) குறித்த தகவல்கள் (Information on date-wise activities (Pledge, Slogans, Origami (Paper Bird Making), Juvenile Film, Tamil Thai Vaazhthu in Sign Language, Sports Competitions) to create an enabling environment for differently abled children and help them progress)...


>>> மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஏதுவான சூழலை உருவாக்குதல் மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவுதல் நோக்கில் தேதி வாரியாக மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் (உறுதிமொழி, Slogans, ஓரிகாமி (காகித பறவை செய்தல்), சிறார் திரைப்படம், சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து, விளையாட்டுப் போட்டிகள்) குறித்த தகவல்கள் (Information on date-wise activities (Pledge, Slogans, Origami (Paper Bird Making), Juvenile Film, Tamil Thai Vaazhthu in Sign Language, Sports Competitions) to create an enabling environment for differently abled children and help them progress)...



💥💥💥 முக்கியச் செய்தி

தலைமை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்......


👉 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஏதுவான சூழலை உருவாக்குதல் மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவுதல் நோக்கில் கீழ்கண்ட செயல்பாடுகளை அந்தந்த தேதிகளில், கீழ்க்கண்ட செயல்பாடுகளை செய்தல் வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது....


👉 *14/11/22-*   உறுதிமொழி எடுத்தல்

🔥🔥🔥

*IE முக்கிய செய்தி*


*நாளைய நிகழ்வு*


👉 *14/11/22 - உறுதிமொழி எடுத்தல்.*


💂‍♀️ *உறுதிமொழி*💂‍♂️


தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களாகிய நாங்கள் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் இந்த நாளில் ஓர் உறுதி ஏற்கிறோம்.



சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் நலனுக்காகவும் எப்போதும் உடன் நிற்போம் என்றும், அவர்களுக்கு இருக்கக்கூடிய சமூக, பொருளாதார, பண்பாட்டுச் சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்க எங்களாலான அனைத்து முயற்சிகளையும் செய்வோம் என்றும் உறுதி கூறுகிறோம்.


முழுமையாகவும், சமத்துவத்துடனும் வெற்றிகரமாகவும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் இங்கு எந்தப் பாகுபாடும் இன்றி, அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ்வதற்குரிய பாதுகாப்பை அவர்களுக்கு அளிப்பது இன்றியமையாதது என நாங்கள் உணர்ந்திருக்கிறோம். 


அவர்களை எங்கள் குடும்பத்தில் ஒருவர் போலவே முக்கியத்துவம் அளித்து நட்புணர்வை வளர்ப்போம் என்றும் உறுதிமொழி ஏற்கிறோம்....



👉 மேற்கண்ட உறுதிமொழியினை அனைத்து மாணவர்களும் எடுக்கும் வகையில்  பள்ளியில் ஏற்பாடு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது...


👉 *17/11/22-* அன்று.. இணைவோம் மகிழ்வோம் நிகழ்வு


👉 *22/11/22-* அன்று   காகித பறவை செய்தல்-  நிகழ்வு


👉 *02/12/22-* அன்று  சிறார் திரைப்படம் திரையிடுதல்- நிகழ்வு


👉 *03/12/22-* சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து- நிகழ்வு.


👉 ஒவ்வொரு நாள் நிகழ்வும் எவ்வாறு செய்தல் என்பதினை முதல் நாள் தகவல் தெரிவிக்கப்படும்.


குறிப்பு: மாற்றுத்திறனாளி மாணவர் தங்கள் பள்ளியில் இல்லையெனினும் மேற்காண் செயல்பாடுகள் பள்ளியில் நடத்தப்பட வேண்டும்.




>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...