வீரதீர செயல் புரிந்த பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது...
கடலுார் மாவட்டத்தில் 18 வயதிற்குட்பட்ட வீரதீர செயல் புரிந்த பெண்கள், விருது பெற விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தை திருமணம் தடுத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள் மற்றும் வீரதீர செயல் புரிந்த 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு அரசு ஆண்டுதோறும் மாநில அளவில் விருது வழங்கி வருகிறது.
தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜனவரி 2025ஆம் தேதி விருது வழங்கப்பட உள்ளது. விருதிற்கு தேர்வு செய்யப்படுவோருக்கு பாராட்டு பத்திரம் மற்றும் ரூ.1 லட்சம் காசோலை வழங்கப்படுகிறது. விருது பெற விருப்பம் உள்ள 18 வயதிற்குட்பட்ட பெண்கள், https://awards.tn.gov.in என்ற இணைய தளத்தில் வரும் 30ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்பங்கள் பள்ளி தலைமை ஆசிரியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர், காவல்துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அலுவலர்களின் முன் மொழிவுகளை, கடலுார் சேவை இல்லம் வளாகத்தில் உள்ள சமூக நல அலுவலகத்தில் நவம்பர் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
எனவே, கடலுார் மாவட்டத்தில் வீரதீர செயல்புரிந்த பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.