கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

குறிப்பாணைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குறிப்பாணைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அரசு அலுவலகங்களில் பயன்பாட்டில் உள்ள சில சுருக்கக் குறியீடுகளும், அதற்கான விரிதரவுகளும் (Some abbreviated codes in use in government offices and their details)...



அரசு அலுவலகங்களில் பயன்பாட்டில் உள்ள சில சுருக்கக் குறியீடுகளும், அதற்கான விரிதரவுகளும் (Some abbreviated codes in use in government offices and their details):


✓ *அரசு அலுவலகங்களில் இருந்து வருகின்ற கடிதங்களில் ந.க. எண்; மூ.மு.எண்

என்று எழுதி சில எண்களைக் குறிப்பிட்டு, நாளையும் அதில் குறிப்பிட்டு இருப்பார்கள்.

அதனை நீங்களும் பார்த்திருக்கலாம். 

*இந்த எண்கள் மிகவும் முக்கியமானவை என்பது நமக்குத் தெரியும்.


*ஆனால், அதன் அருகில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்கள் எதைக் குறிக்கின்றன? என்பது பல பேருக்குத் தெரியாது. அதற்காகத்தான் இந்தப் பதிவு :*


1. *ந.க எண் என்றால், நடப்புக் கடித எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்*


2. *ஓ.மு. எண் என்றால், ஓராண்டு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்*


3. *மூ.மு எண் என்றால்  மூன்றாண்டு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்*


4. *நி.மு. எண் என்றால் நிரந்தர முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்*


5. *ப.மு. எண் என்றால், பத்தாண்டு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்.*


6. *தொ.மு எண் என்றால், தொகுப்பு முடிவு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்*


7. *ப.வெ எண் என்றால்  பருவ வெளியீடு எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்*


8. *நே.மு.க எண் என்றால்,  நேர்முகக் கடித எண் என்ற வார்த்தைகளின் சுருக்கம்*


*மேற்கண்ட வார்த்தைகளில் ந.க.எண்  (நடப்புக் கணக்கு எண்) மட்டுமே அதிகப் பயன்பாட்டில் இருக்கும்.* 


நேர்முகக் கடிதம் என்பது, கீழ்மட்ட அலுவலருக்கு, மேல்மட்ட அதிகாரி எழுதும் கடிதம் ஆகும். இது நேரடியாகப் பேசியதற்குச் சமம் என்பதால், அதற்கான பதிலை கீழ்மட்ட அலுவலர் விரைந்து  அளிக்க  வேண்டும். 


மேற்கண்ட எண்கள் இல்லாமல் இருந்தால்...?

மேற்கண்ட குறிப்பு எண்கள் ஏதும் இல்லாமல் அரசு அலுவலகங்களில் இருந்து கடிதம் உங்களுக்கு வந்தால்,  அந்தக் கடிதம் சட்டத்துக்குப் புறம்பாகத் தங்களின் அலுவலகப்பதிவேட்டில் பதியாமல் அரசு அலுவலர்கள் அனுப்பிய கடிதம் என்று நீங்கள் முடிவுசெய்து கொள்ளலாம். *கடிதம் அனுப்புகின்ற ஊழியர்  தனது  கடமை தவறியுள்ளார் என்பதை இதுபோன்ற கடிதத்தை வைத்து நிரூபிக்கலாம்.*✓

அனைத்து தலைமை ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பயனுள்ள PDF புத்தகம், அலுவலக நடைமுறை வரைவுகள், செயல்முறைகள், குறிப்பாணைகள், அனைத்து விண்ணப்ப படிவங்கள் - மாதிரிகள் தொகுப்பு...

 


அனைத்து தலைமை ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பயனுள்ள PDF புத்தகம்,  அலுவலக நடைமுறை வரைவுகள், செயல்முறைகள், குறிப்பாணைகள், அனைத்து விண்ணப்ப  படிவங்கள் - மாதிரிகள் தொகுப்பு...

அரசுப் பணியாளர்களுக்கான வரைவுகள் கையேடு - அண்ணா மேலாண்மை நிலையம் வெளியீடு - ஆண்டு : 2019...

>>> அரசுப் பணியாளர்களுக்கான வரைவுகள் கையேடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...