கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தாக்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாக்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வரி செலுத்துவோருக்கு வருமானவரித்துறையின் அறிவிப்பு (Income Tax Department Notice to Tax Payers)...

 வரி செலுத்துவோருக்கு வருமானவரித்துறையின் அறிவிப்பு (Income Tax Department Notice to Tax Payers)...


அன்புள்ள வரி செலுத்துவோரே, 

உங்கள் வருமான வரி மின்னணு தாக்கல் செயல்முறையை இன்றே முடிக்கவும்! 

தாக்கல் செய்த 30 நாட்களுக்குள் உங்கள் ஐடிஆரை சரிபார்க்க மறக்காதீர்கள். தாமதமான சரிபார்ப்பு வருமான வரிச் சட்டம், 1961 இன் விதிகளின்படி தாமதக் கட்டணம் விதிக்கப்படலாம். தாமதிக்க வேண்டாம், இன்றே உங்கள் ஐடிஆரைச் சரிபார்க்கவும்!


Dear Taxpayers, 

Complete your e-filing process today!

Do not forget to verify your ITR within 30 days of filing. 

Delayed verification may lead to levy of late fee in accordance with provisions of the Income-tax Act, 1961. 

Don’t delay, verify your ITR today!







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


வருமான வரி கணக்கு தாக்கல் (Income Tax Return) அபராதம் குறித்த தற்போதைய செய்தி...

 


வருமான வரி கணக்கு தாக்கல் (Income Tax Return) அபராதம் குறித்த தற்போதைய செய்தி...


தற்போது (02.08.2021 முதல்) வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது அபராதம் விதிக்கப்படவில்லை. 01.08.2021  நிலை சரி செய்யப்பட்டு விட்டது. 2021-2022 Assessment Year க்கு ITR தாக்கல் செய்ய கடைசி தேதி 30.09.2021 என்று தெரிய வருகிறது.

 

>>> வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையிலும், 01-08-2021 அன்று ITR இணையதளம் அபராதம் விதிக்கிறது...



வருமான வரி கணக்கு தாக்கல் (Income Tax E-filing) செய்ய 2021, ஜனவரி 10 வரை கால அவகாசம் நீட்டிப்பு...

 


வருமான வரி கணக்கு தாக்கல் (Income Tax E-filing) செய்ய 2021, ஜனவரி 10 வரை கால அவகாசம் நீட்டிப்பு...

The Due dates of Filing has been extended as follows:

  • Income Tax Returns Last Date for Non Tax Audit Assessees – 10th January, 2021
  • Income Tax Returns Last Date for Tax Audit Assessees – 15th February, 2021
  • Tax Audit Report Last Date – 15th January, 2021
  • Vivad Se Viswas Last Date – 31st January, 2021

வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் நீட்டிப்பு.. மத்திய அரசு உத்தரவு

தனிநபர்கள் 2019 - 20ம் ஆண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் ஜனவரி 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய பிப்ரவரி 15ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று ( டிசம்பர் 31) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மத்திய அரசு அவகாசத்தை நீட்டித்துள்ளது.


முன்னதாக கொரோனா பாதிப்பு காரணத்தை காட்டி மத்திய அரசு, வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலஅவகாசத்தை பலமுறை நீட்டித்திருந்தது. இதனால் டிசம்பர் 31ம் தேதிக்கு பின்னர் நீட்டிக்குமா என்ற கேள்வி எழுந்தது.

 government extended the date for filing income tax returns to January 10 

அதேநேரம் நிதியச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முன்னாள் வர்த்தக அமைச்சரான சுரேஷ் பிரபு உள்பட பல்வேறு தரப்பினர், 2019-20ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலஅவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இதையடுத்தே 2019 - 20ம் ஆண்டிற்கான தனிநபர்கள் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் ஜனவரி 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது நிறுவனங்கள் தாக்கல் செய்ய பிப்வரி 15ம் தேதி வரை அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

2019 - 20ம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கலை கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி, 4.37 கோடி பேர் தாக்கல் செய்துள்ளதாக நிதியமைச்சகம் கூறியிருந்தது. தற்போது அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் மேலும் பலர் தாக்கல் செய்வார்கள் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது. நாட்டில் 135 கோடி மக்கள் வசிக்கும் நிலையில் 5 கோடி மக்கள் மட்டுமே வருமான வரி செலுத்துகிறார்கள். அதாவது ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளதாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்கிறார்கள்.

முன்னதாக, வருமான வரித்துறை எஸ்எம்எஸ் மற்றும் இமெயில் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று அலர்ட் செய்து வந்தது. அதாவது நீங்கள் வருமான வரி தாக்கல் செய்திருப்பீர்கள் என நம்புகிறோம். அப்படி செய்யாவிட்டால் கால தாமதம் செய்ய வேண்டாம். அதோடு வருமான வரி தாக்கலை இன்றே செய்திடுங்கள் என்று கூறியிருந்தது.

🍁🍁🍁 வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு...

 வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஆகியவை நீட்டிக்கப்பட்டுள்ளன. கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக, வருமான வரி தாக்கல் செய்வதற்கு வரி செலுத்துவோருக்கு மேலும் கால அவகாசம் வழங்கும் வகையில், கீழ்கண்ட வருமான வரி தாக்கல் செய்வோருக்கான காலக்கெடு மேலும் நீட்டிக்கப்படுகிறது.

(அ)  தங்களின் கணக்குகள் தணிக்கை செய்ய வேண்டிய தேவை இருக்கும் வரிசெலுத்துவோருக்கான (அவர்களின் பங்குதாரர்கள் உட்பட) வருமான வரித்தாக்கல் காலக்கெடு (அவர்களுக்கான காலக்கெடு, கூறப்பட்ட அறிவிப்பில் நீட்டிப்பதற்கு முன்பு)  2020 அக்டோபர் 31- சட்டத்தின்படி) 2021 ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

(ஆ) தங்களின் சர்வதேச / குறிப்பிட்ட உள்ளூர் பரிமாற்றங்கள் குறித்து அறிக்கைகள் தாக்கல் செய்ய வேண்டிய தேவை இருக்கும் வரிசெலுத்துவோருக்கான வருமான வரித்தாக்கல் காலக்கெடு(அவர்களுக்கான காலக்கெடு, கூறப்பட்ட அறிவிப்பில் நீட்டிப்பதற்கு முன்பு)  2020 நவம்பர் 30- சட்டத்தின்படி) 2021 ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

(இ) இதர வரி செலுத்துவோருக்கான வருமானவரி செலுத்துவதற்கான காலக்கெடு (அவர்களுக்கான காலக்கெடு, கூறப்பட்ட அறிவிப்பில் நீடிப்பதற்கு முன்பு) 2020 ஜூலை 31- சட்டத்தின்படி) 2020 டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, வரி தணிக்கை அறிக்கை மற்றும் சர்வதேச/குறிப்பிட்ட உள்ளூர் பரிமாற்றங்கள் உள்ளிட்ட சட்டத்தின் கீழ் வரும் பல்வேறு தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு 2020 டிசம்பர் 31-வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

>>> Click here to Download Income Tax Department Circular 24-10-2020

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...