கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நிர்மலா சீதாராமன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிர்மலா சீதாராமன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

``பி.எஃப் மீதான வட்டி வருமானவரி விலக்கு வரம்பு ₹5 லட்சமாக அதிகரிப்பு" - நிர்மலா சீதாராமன்...

 தொழிலாளர்களுடைய வருங்கால வைப்பு நிதியின் மீதான வட்டிக்கு வரிவிலக்கு அளிப்பதற்கான வரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது!


கடந்த பிப்ரவரி 1-ம் தேதி 2021-2022-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார்.



அப்போது அவர் பிராவிடண்ட் ஃபண்டில் (பி.எஃப்) ஊழியர் செலுத்தும் தொகை ஒரு நிதியாண்டில் 2.5 லட்சம் ரூபாயைத் தாண்டினால் அதன் மீதான வட்டிக்கு வருமான வரி உண்டு என அறிவித்திருந்தார்.


அதாவது, தற்போதைய நிலையில் அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் EPF  உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் மாதம்தோறும் செலுத்தும் 12 சதவிகித கட்டாய பி.எஃப் தொகை மற்றும் விருப்ப பி.எஃப் (Voluntary PF) ஆகிய இரண்டின் கூட்டுத் தொகை ஒரு நிதியாண்டில் 2.5 லட்சம் ரூபாயைத் தாண்டும் பட்சத்தில் அதற்கான வட்டி வரிக்கு உட்படும் என்று சொல்லப்பட்டிருந்தது.


இந்நிலையில் மத்திய பட்ஜெட் மீது மக்களவையில் நேற்று விவாதம் நடந்தது. அதன் மீது 127 திருத்தங்கள் கூறப்பட்டன. அவை ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதன்பின்னர் குரல் வாக்கெடுப்பின்மூலம் நிதி மசோதா நிறைவேறியது.



இந்தக் கூட்டத்தொடரில் பேசிய நிர்மலா சீதாராமன், "தொழிலாளர்களுடைய வருங்கால வைப்பு நிதியின் மீதான வட்டிக்கு வரிவிலக்கு அளிப்பதற்கான வரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது" எனத் தெரிவித்தார். இதனால் வருங்கால வைப்பு நிதி பயனாளர்கள், பெரிதும் பலனடைவார்கள் எனச் சொல்லப்படுகிறது.


மேலும் அவர், "பெட்ரோல், டீசலை சரக்கு சேவை வரி வரம்புக்குள் கொண்டு வருவது தொடர்பாக அடுத்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்க விரும்புகிறேன். ஆனால், அவற்றின் மீது மத்திய அரசு மட்டுமல்ல, மாநில அரசுகளும் வரி விதிக்கின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உள்நாட்டு தொழில்களுக்கு உதவுவதற்காகக் குறிப்பாக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையில் சுங்க வரியில் மாற்றங்கள் கொண்டு வரப்படும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் வைப்பு நிதி, தேசிய ஓய்வூதியத் திட்டத்துடன் இணைக்கப்படுகிறதா? - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...

 


தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்குகளை தேசிய ஓய்வூதியத் திட்டத்துடன் இணைக்கும் எண்ணம் இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், நடுத்தர மக்களில் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருங்கால வைப்பு நிதியை திருப்பி அளிப்பதில் உள்ள ஆறுதலைத் தம்மால் புரிந்து கொள்ள முடிவதாக அவர் குறிப்பிட்டார்.


மேலும் எந்த வங்கிகளை தனியார்மயமாக்குவது என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தான் படித்த விழுப்புரம் பள்ளிக்கு செல்லவுள்ள நிர்மலா சீதாராமன்...

 


 அடுத்த சில வாரத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், விழுப்புரத்தில் உள்ள, தான் பயின்ற பள்ளிக்கு நேரில் செல்ல உள்ளார்.

மத்திய பட்ஜெட் குறித்து விளக்கிக் கூறுவதற்காக, 15 மாநிலங்களில் நடக்கவுள்ள கருத்தரங்குகள் மற்றும் கூட்டங்களில், நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளார். இதற்கிடையே, வரும், 13ல், விழுப்புரம் மாவட்டத்தில், பா.ஜ., மகளிர் அணி நடத்தும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்க, நிர்மலா சீதாராமன், தமிழகம் செல்கிறார். இவர் பயின்ற, 'சேக்ரட் ஹார்ட் கான்வென்ட்' என்ற பள்ளி, விழுப்புரத்தில் தான் உள்ளது. ஐந்தாம் வகுப்பு வரை, அந்த பள்ளியில் தான் இவர் படித்தார்.

விழுப்புரத்திற்குச் செல்லும்போது, அந்த பள்ளிக்கும் , நிர்மலா சீதாராமன்  செல்ல உள்ளார். பல ஆண்டுகளுக்குப் பின், தான் பயின்ற பள்ளிக்கு, நிர்மலா செல்ல உள்ளார்.

இதுகுறித்து  பேசிய நிர்மலா சீதாராமன், தன் சிறு வயது நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

என் தந்தை, ரயில்வேயில் பணிபுரிந்தவர். சிறு வயதில், நான் ஒரு வைரசால் பாதிக்கப்பட்டேன். டாக்டர்கள், என்னை காப்பாற்ற முடியாது என கைவிரித்துவிட்டனர்.

இதனால், என் தாத்தா, பாட்டியும், நான் மீண்டு வருவேன் என்ற நம்பிக்கையை இழந்து விட்டனர். எனினும், பூரண குணமடைந்தேன். அப்போது, ரயில்வே மருத்துவமனையின், 'வராண்டா'வில், என்னை வைத்திருந்தனர். பருவ மழை பெய்தபோது, ஒட்டுமொத்த மாவட்டமும், பெரும் சேதத்தை சந்தித்தது. ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்தன. அந்த நிகழ்வுகள் எல்லாம், இன்றும் நினைவில் உள்ளன.

இவ்வாறு, அவர் கூறினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...