கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

GPF லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
GPF லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அலைபேசி எண் OTP இல்லாமல் TPF Account Slip Download செய்யும் வசதி


அலைபேசி எண் கடவுச்சொல் இல்லாமல் வருங்கால வைப்பு நிதி கணக்குத்தாள் Teachers Provident Fund Account Slip பதிவிறக்கம் செய்யும் வசதி


Facility to Download TPF Account Slip without Mobile Number OTP



வருங்கால வைப்பு நிதி கணக்கு செல்போன் நம்பர் மாற்றம் செய்ய விரும்புவர்கள் தற்போது எளிதாக மாற்றம் செய்யலாம். ஓடிபி கேட்பதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதால் தொலைந்த செல்போன் நம்பரை பதிவு செய்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வருங்கால வைப்பு நிதி புதிய செல்போன் நம்பரை மாற்றம் செய்து கொள்ள அனைத்து ஆசிரியர்களும் பணியாளர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. மாற்றம் செய்ய விரும்புவோர் மட்டும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.


OPPAS - அரசு ஊழியர்களின் ஓய்வூதிய கருத்துரு இணையதளம் வழியாக அனுப்பும் நடைமுறை குறித்த காணொளி



 OPPAS - அரசு ஊழியர்களின் ஓய்வூதிய கருத்துரு இணையதளம் வழியாக அனுப்பும் நடைமுறை குறித்த காணொளி



OPPAS - Online Pension and Provident fund Authorisation System



காணொளியை காண கீழே சொடுக்கவும்...👇🏻





>>> YouTubeல் காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


பொது வருங்கால வைப்பு நிதி - 2024- 2025 நிதியாண்டிற்கான வட்டி விகிதம் 01.07.2024 முதல் 30.09.2024 வரை 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு...

 

G.O. Ms.No. 260 Dt: August 06, 2024 - Provident Fund - General Provident Fund (Tamil Nadu) – Rate of interest for the financial year 2024- 2025 with effect from 01.07.2024 to 30.09.2024- Orders – Issued...


* அரசாணை (நிலை) எண் .  260, நாள்: ஆகஸ்ட் 06, 2024 - வருங்கால வைப்பு நிதி - பொது வருங்கால வைப்பு நிதி (தமிழ்நாடு) - 2024- 2025 நிதியாண்டிற்கான வட்டி விகிதம் 01.07.2024 முதல் 30.09.2024 வரை- ஆணைகள் - வெளியிடப்பட்டது - G.O. Ms.No. 260 Dated:  06-08-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



01.07.2024 முதல் 30.09.2024 வரையிலான காலத்திற்கு GPF மீதான வட்டி விகிதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு...


ரூ.5,00,000க்கு மேல் பிடித்தம் செய்யப்படும் பணியாளரின் GPF Subscription தொகை Suspense Accountல் வரவு வைக்கப்படும் - மாவட்டக் கருவூல அலுவலர் கடிதம்...


 GPF சந்தா தொகையில் அதிகபட்சமாக எவ்வளவு பிடிக்கலாம்...


IFHRMS - மாதம் ரூ.41500க்கு மேலும், ஆண்டுக்கு ரூ.5,00,000க்கு மேல் பிடித்தம் செய்யப்படும் பொது வருங்கால வைப்பு நிதி சந்தா GPF Subscription தொகை பணியாளரின் GPF Account Slipல் வரவு வைக்கப்படுவதற்குப் பதிலாக Suspense Accountல் வரவு வைக்கப்படும் - காஞ்சிபுரம் மாவட்டக் கருவூல அலுவலர் கடிதம், நாள்: 15-03-2024...



>>> காஞ்சிபுரம் மாவட்டக் கருவூல அலுவலர் கடிதம் ந.க.எண்: 81/ 2024/ ஆ , நாள்: 15-03-2024...


பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி நடைபெற்ற முதலமைச்சர் இல்ல முற்றுகை போராட்டம் - CPS ஒழிப்பு இயக்கத்தினரின் முழக்கங்கள்...

 பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி நடைபெற்ற முதலமைச்சர் இல்ல முற்றுகை போராட்டம் - CPS ஒழிப்பு இயக்கத்தினரின் முழக்கங்கள்...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி நடைபெற்ற முதலமைச்சர் இல்ல முற்றுகை போராட்டம் - CPS ஒழிப்பு இயக்க பெண் நிர்வாகியின் எழுச்சியுரை...

 பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி நடைபெற்ற முதலமைச்சர் இல்ல முற்றுகை போராட்டம் - CPS ஒழிப்பு இயக்க பெண் நிர்வாகியின் எழுச்சியுரை...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு தயங்குவது ஏன்? - பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி...


 பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு தயங்குவது ஏன்? - பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி...



பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றும் - சபாநாயகர் அப்பாவு பேச்சு...

 


பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றும் - சபாநாயகர் அப்பாவு பேச்சு...


பழைய ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் நிச்சயம் நிறைவேற்றுவார் - சபாநாயகர் அப்பாவு பேச்சு...


நாகர்கோவில் கோட்டாறு நாராயண குரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது: 


முதலமைச்சர் காலை சிற்றுண்டி திட்டத்தை தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளார். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மிகப்பெரிய நிதி நெருக்கடி அரசுக்கு உள்ளது.


இந்த சுமையை தாண்டி மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1000 ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது. ஒன்றிய அரசு நிதியாக நாம் செலுத்துகின்ற வரிக்கு அவர்கள் திருப்பித் தருவது ஒரு ரூபாய்க்கு 29 காசு தான். நமக்கு சரியான நிதி பகிர்வு இருந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் அறிவித்து விடுவார். 


முதல்வர் நிச்சயமாக சொன்னதை செய்து விடுவார். ஜாக்டோ ஜியோ அமைப்பினரிடம் முதல்வர் சந்தித்து அவர்களை அழைத்துப் பேசி ஒரு ஒரு உறுதியை கொடுத்துள்ளார். எனவே அளித்த வாக்குறுதியை இந்த அரசு நிச்சயம் நிறைவேற்றும். இவ்வாறு அவர் பேசினார்.




GPF மீதான வட்டி விகிதம் (Rate of Interest) 01.10.2023 முதல் 31.12.2023 வரையிலான காலத்திற்கு 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை (G.O.Ms.No. 299, Dated: 12-10-2023) வெளியீடு (Issue of Government Order (G.O.Ms.No. 299, Dated: 12-10-2023) fixing the rate of interest on General Provident Fund at 7.1% for the period 01.10.2023 to 31.12.2023)...

 

GPF மீதான வட்டி விகிதம் (Rate of Interest) 01.10.2023 முதல் 31.12.2023 வரையிலான காலத்திற்கு 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை (G.O.Ms.No. 299, Dated: 12-10-2023) வெளியீடு (Issue of Government Order (G.O.Ms.No. 299, Dated: 12-10-2023) fixing the rate of interest on General Provident Fund at 7.1% for the period 01.10.2023 to 31.12.2023)...


>>> Click Here to Download G.O.Ms.No. 299, Dated: 12-10-2023...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பொது வருங்கால வைப்பு நிதி (GPF) மீதான வட்டி விகிதம் 01.07.2023 முதல் 30.09.2023 வரையிலான காலத்திற்கு 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை (G.O.Ms.No.: 225, Dated: 17-07-2023) வெளியீடு (Issue of Government Order (G.O.Ms.No.: 225, Dated: 17-07-2023) fixing the rate of interest on GPF at 7.1% for the period 01.07.2023 to 30.09.2023)...


>>> பொது வருங்கால வைப்பு நிதி (GPF) மீதான வட்டி விகிதம் 01.07.2023 முதல் 30.09.2023 வரையிலான காலத்திற்கு 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை (G.O.Ms.No.: 225, Dated: 17-07-2023) வெளியீடு (Issue of Government Order (G.O.Ms.No.: 225, Dated: 17-07-2023) fixing the rate of interest on GPF at 7.1% for the period 01.07.2023 to 30.09.2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பொது வருங்கால வைப்பு நிதி (GPF) மீதான வட்டி விகிதம் 01.04.2023 முதல் 30.06.2023 வரையிலான காலத்திற்கு 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை (G.O.Ms.No.115, Dated: 25-04-2023) வெளியீடு - Provident Fund - General Provident Fund (Tamil Nadu) – Rate of interest for the financial year 2023- 2024 with effect from 01.04.2023 to 30.06.2023 - G.O.Ms.No.115, Dated: April 25, 2023 – Issued...


>>> பொது சேமநலநிதி (GPF) மீதான வட்டி வீதம் 01.04.2023 முதல் 30.06.2023 வரையிலான காலத்திற்கு 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை (G.O.Ms.No.115, Dated: 25-04-2023) வெளியீடு - Provident Fund - General Provident Fund (Tamil Nadu) – Rate of interest for the financial year 2023- 2024 with effect from 01.04.2023 to 30.06.2023 - G.O.Ms.No.115, Dated: April 25, 2023 – Issued...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

01.01.2023 முதல் 31.03.2023 வரையிலான காலத்திற்கு பொது சேமநலநிதி (GPF) தொகை மீதான வட்டி வீதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு (G.O.Ms.No.21, Dated: 23-01-2023 - General Provident Fund (Tamil Nadu) – Rate of interest for the financial year 2022-2023 with effect from 01.01.2023 to 31.03.2023 - Orders – Issued)...

 

>>> 01.01.2023 முதல் 31.03.2023 வரையிலான காலத்திற்கு பொது சேமநலநிதி (GPF) தொகை மீதான வட்டி வீதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு (G.O.Ms.No.21, Dated: 23-01-2023 - General Provident Fund (Tamil Nadu) – Rate of interest  for the financial year 2022-2023 with effect from 01.01.2023 to 31.03.2023 - Orders – Issued)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




2022-2023ஆம் நிதியாண்டில் பொது வருங்கால வைப்பு நிதி சந்தா தொகை உச்ச வரம்பான ரூ.5இலட்சத்தை தாண்டினால் அதன்பின் மாத சந்தா தொகை பிடித்தம் செய்யக்கூடாது - அரசாணை (G.O.Ms.No.15, Dated: 18-01-2023) வெளியீடு (If the amount of General Provident Fund subscription exceeds the maximum threshold limit of Rs.5 lakh, then the monthly subscription amount should not be deducted, In the financial year 2022-2023)...


>>> 2022-2023ஆம் நிதியாண்டில் பொது வருங்கால வைப்பு நிதி சந்தா தொகை உச்ச வரம்பான ரூ.5இலட்சத்தை தாண்டினால் அதன்பின் மாத சந்தா தொகை பிடித்தம் செய்யக்கூடாது - அரசாணை (G.O.Ms.No.15, Dated: 18-01-2023) வெளியீடு (If the amount of General Provident Fund subscription exceeds the maximum threshold limit of Rs.5 lakh, then the monthly subscription amount should not be deducted, In the financial year 2022-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



அரசாணை (நிலை) எண்.321, நாள்: 15-10-2019 - ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி - ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைப்பு [IFHRMS] செயல்படுத்தல் - ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதியின் இறுதி கணக்கு முடித்தலுக்கான (TPF / GPF Final Closure) தனித்தனி விண்ணப்பப் படிவங்கள் (Application Formats) (G.O.Ms.No.321, Dated: 15-10-2019 - PENSION / FAMILY PENSION AND GENERAL PROVIDENT FUND – Implementation of Integrated Financial and Human Resources Management System [IFHRMS] - Separate Forms of Application for Pension, Family Pension and Final Closure of General Provident Fund)...



>>> அரசாணை (நிலை) எண்.321, நாள்: 15-10-2019 - ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி - ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைப்பு [IFHRMS] செயல்படுத்தல் - ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதியின் இறுதி கணக்கு முடித்தலுக்கான (TPF / GPF Final Closure) தனித்தனி விண்ணப்பப் படிவங்கள் (Application Formats) (G.O.Ms.No.321, Dated: 15-10-2019 - PENSION / FAMILY PENSION AND GENERAL PROVIDENT FUND – Implementation of Integrated Financial and Human Resources Management  System [IFHRMS] - Separate Forms of Application for Pension, Family  Pension and Final Closure of General Provident Fund)...


Government of Tamil Nadu 2019 

MANUSCRIPT SERIES

FINANCE [Pension] DEPARTMENT 

G.O.Ms.No.321, Dated 15th October 2019. 

(Vihari, Puratasi-28, Thiruvalluvar Aandu-2050) 


ABSTRACT 

PENSION / FAMILY PENSION AND GENERAL PROVIDENT FUND – Implementation of Integrated Financial and Human Resources Management  System [IFHRMS] - Separate Forms of Application for Pension, Family  Pension and Final Closure of General Provident Fund –  Orders – Issued.

Read the following:- 

1. G.O.Ms.No.211, Finance (Pension) Department, dated 27-05-2009. 

2. From the Principal Secretary/ Commissioner of the Treasuries and  Accounts, Chennai-35, Letter No.Rc.048220/IFMS/2016-25, dated 20-12-2018. 

-oOo-

ORDER: 

The Combined Application Form for General Provident Fund Final  Withdrawal and Pension/Family Pension proposal have been prescribed in  the reference first read above in order to quicken the process of settling the  terminal benefits to retired Government employees. 

2. The Principal Secretary / Commissioner of Treasuries and  Accounts, Chennai in his letter second read above, inter-alia, has stated that  in order to cater the need of Integrated Financial and Human Resources  Management System [IFHRMS] software and to expedite the process of  settling terminal benefits of retired Government employees, the combined  Forms of Application has to be separated for pension/family pension  proposal and General Provident Fund Final Withdrawal. 

3. The Government, after careful consideration, accept the proposal of  the Principal Secretary /Commissioner of Treasuries and Accounts, Chennai  and accord approval for separate Revised Forms of Application for Pension,  Family Pension and General Provident Fund Final Withdrawal as annexed to  this order. 

4. All Administrative Department of Secretariat, Heads of Department  and Heads of Office are directed to adopt these forms for processing  pension/ family pension proposals and final closure of General Provident  Fund of their retiring employees in the department. 

5. Necessary amendment to the Tamil Nadu Pension Rules, 1978 and  the General Provident Fund (Tamil Nadu) Rules will be issued separately. 

(BY ORDER OF THE GOVERNOR) 

S. KRISHNAN 

PRINCIPAL SECRETARY TO GOVERNMENT

To 

All Secretaries to Government. 

All Departments of Secretariat.

The Legislative Assembly Secretariat, Chennai - 600 009. 

The Governor's Secretariat, Raj Bhavan, Chennai - 600 022. 

All Heads of Departments. 

The Tamil Nadu Information Commission, Teynampet, Chennai-600 018. 

The Accountant General (A&E), Chennai-600 018. 

The Principal Accountant General (Audit-I), Chennai - 600 018. 

The Accountant General (Audit-II), Chennai-600 018. 

The Accountant General (CAB), Chennai-600 009. 

The Registrar, High Court, Chennai-600 104. 

The Secretary, Tamil Nadu Public Service Commission, Chennai-600 003. 

The Commissioner, Greater Chennai Corporation, Chennai-600 003. 

All Commissioners of Municipal Corporations. 

All Panchayat Union Commissioners. 

All Executive Officers of Town Panchayats. 

All District Collectors / District Judges / Chief Judicial Magistrates. 

All Regional Joint Directors of Treasuries and Accounts Departments. 

The Pension Pay Officer, Chennai-600 035. 

All Treasury Officers / Sub-Treasury Officers. 

All State Government owned Boards / Corporations. 

Copy to: 

The Finance (OP/Bills) Department, Chennai - 600 009. 

The Secretary to Chief Minister, Chennai-600 009. 

The Director of Pension, Chennai-600 035. 

The Principal Secretary and Commissioner of Treasuries & Accounts, Chennai-600 035. 

The Director of Local Fund Audit, Chennai - 600 035. 

Stock File / Spare Copies. 

-/ Forwarded : By Order /- 

SECTION OFFICER.



>>> அரசாணை (நிலை) எண்.321, நாள்: 15-10-2019 - ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி - ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைப்பு [IFHRMS] செயல்படுத்தல் - ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதியின் இறுதி கணக்கு முடித்தலுக்கான (TPF / GPF Final Closure) தனித்தனி விண்ணப்பப் படிவங்கள் (Application Formats) (G.O.Ms.No.321, Dated: 15-10-2019 - PENSION / FAMILY PENSION AND GENERAL PROVIDENT FUND – Implementation of Integrated Financial and Human Resources Management  System [IFHRMS] - Separate Forms of Application for Pension, Family  Pension and Final Closure of General Provident Fund)...





சத்தீஸ்கர் மாநிலத்தில் CPS ஐ ரத்து செய்து GPF ஆக மாற்றம் செய்ததை அரசிதழில் வெளியீடு ( Abolition of CPS and conversion to GPF - Chhattisgarh Published in Gazette)...



>>> சத்தீஸ்கர் மாநிலத்தில் CPS ஐ ரத்து செய்து GPF ஆக மாற்றம் செய்ததை அரசிதழில் வெளியீடு ( Abolition of CPS and conversion to GPF - Chhattisgarh Published in Gazette)...


(தமிழாக்கம்)

அடல் நகர், 11 மே 2022

அறிவிப்பு

எண் F-2016-04-03289- இந்திய அரசியலமைப்பின் 309 வது பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, சத்தீஸ்கர் ஆளுநர், இதன் மூலம், புதிதாக வரையறுக்கப்பட்ட பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதிலாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துகிறார். 1-11-2004 அன்று அல்லது அதற்குப் பிறகு மாநில அரசின் ஓய்வூதியம் பெறக்கூடிய நிறுவனத்தில் நியமிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் செயல்படுத்தப்பட்டது, மாநில அரசின் அறிவிப்பு எண். 977/C 761/F/R/04, தேதியிட்ட அக்டோபர் 27, 2004, மற்றும்


திட்டம் பின்வருமாறு செயல்படுத்தப்படும்:


1. புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதிலாக, பழைய ஓய்வூதியத் திட்டம் 01-11-2004 முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டது.


2. புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து மாதாந்திர பங்களிப்புக்கான 10% பிடித்தம் 01-04-2022 முதல் ரத்து செய்யப்படும் மற்றும் பொதுச் சட்டத்தின்படி அடிப்படைச் சம்பளத்தில் (ஊதியங்கள்) குறைந்தபட்சம் 12 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். வருங்கால வைப்பு நிதி விதி..


3. புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட அனைத்து அரசு ஊழியர்களின் சட்டீஸ்கர் பொது வருங்கால வைப்பு நிதி கணக்குகள் இயக்குனரகத்தில் இருக்கும். கருவூலம், கணக்குகள் மற்றும் ஓய்வூதியங்கள் கணக்காளர் ஜெனரல் அலுவலகத்திற்குப் பதிலாக நிதித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் (ஓய்வூதியம் மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கான புதிய இயக்குநரகம் நிறுவப்படும் நேரம் வரை).


4. சத்தீஸ்கர் பொது வருங்கால வைப்பு நிதி கணக்குகள் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான அனைத்து பணிகளையும் பராமரிப்பதற்காக ஒரு தனி இயக்குநரகம், ஓய்வூதியம் மற்றும் வருங்கால வைப்பு நிதி நிறுவப்படும். 5. NSDL இலிருந்து பெறப்பட்ட அரசாங்க பங்களிப்பு தொகை மற்றும் பெறப்பட்ட வட்டி


இது எதிர்காலத்தில் பொதுக் கணக்கின் கீழ் ஒரு தனி நிதியில் வைக்கப்படும்


ஓய்வூதிய பொறுப்புகளை செலுத்துதல் மற்றும் 4 சதவீதத்திற்கு சமமான தொகை


ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதிய நிதியில் முந்தைய ஆண்டின் ஓய்வூதிய பொறுப்புகள் முதலீடு செய்யப்படும்.


6. சத்தீஸ்கர் பொது வருங்கால வைப்பு நிதிக்கு அரசு ஊழியரின் முதன்மைத் தொகை மாற்றப்படும் மற்றும் சத்தீஸ்கர் பொது வருங்கால வைப்பு நிதியின் கீழ் வட்டி விகிதம் குறித்து அவ்வப்போது மாநில அரசு வழங்கும் அறிவுறுத்தல்களின்படி 01-11-2004 முதல் வட்டி செலுத்தப்படும். நிதி விதிகள்.


7. பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட தேதிக்கும் 01-11-2004க்கும் இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெற்ற/இறந்த ஊழியர்களுக்கு, பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி தகுதியான அரசு ஊழியர்கள்/குடும்பங்களுக்கு விதிகளின்படி சலுகைகள் வழங்கப்படும். புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திலோ அல்லது அரசு ஊழியர் மரணம் அடைந்தாலோ, ஓய்வு பெற்ற பின் ஓய்வூதியப் பலன்களைப் பெற்ற அரசு ஊழியர்களுக்கு, பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி பலன் நிர்ணயம் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் தனித்தனியாக வெளியிடப்படும்.



8. திட்டத்தின் கீழ் கணக்கியல், ஒழுங்குமுறை மற்றும் செயல்முறை தொடர்பான விரிவான வழிகாட்டுதல்கள் தனித்தனியாக வெளியிடப்படும்.


9. புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதிலாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மறுசீரமைத்தல் மற்றும் பிற துணை நடவடிக்கைகள் தொடர்பான அனைத்துப் பணிகளையும் நிதித் துறை மேற்கொள்ளும்.


உத்தரவின்படி மற்றும் சத்தீஸ்கர் ஆளுநர் பெயரில், ATISH பாண்டே, இணைச் செயலாளர்.








ஓய்வு பெற்ற / இறந்த அரசுப் பணியாளர்களின் பொது வருங்கால வைப்பு நிதி (GPF) இறுதித் தொகையை உடனுக்குடன் பெற்று வழங்க தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 3856/ சி2/ 2022, 25-04-2022 மற்றும் அரசுக் கடிதங்கள் (Director of Elementary Education Proceedings and Government Letters for Immediate Receipt of Final Closure of General Provident Fund (GPF) of Retired / Deceased Government Employees & School Education Department Joint Secretary to Government Letter No.2742/EE1(1)/2022-1, Dated: 17.02.2022 & Accounts Officer, Office of the Accountant General (A&E) Tamil Nadu, Chennai-18, Letter No. FM II/II/9-2/2021-22/45213, Dated: 06.01.2022)...



>>> ஓய்வு பெற்ற / இறந்த அரசுப் பணியாளர்களின்   பொது வருங்கால வைப்பு நிதி (GPF) இறுதித் தொகையை உடனுக்குடன் பெற்று வழங்க தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 3856/ சி2/ 2022, 25-04-2022 மற்றும் அரசுக் கடிதங்கள் (Director of Elementary Education Proceedings and Government Letters for Immediate Receipt of Final Closure of General Provident Fund (GPF) of Retired /  Deceased Government Employees & School Education Department Joint Secretary to Government  Letter No.2742/EE1(1)/2022-1, Dated: 17.02.2022 & Accounts Officer, Office of the Accountant General (A&E) Tamil Nadu, Chennai-18, Letter No. FM II/II/9-2/2021-22/45213, Dated: 06.01.2022)...

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டுதல் - தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்திடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை கடிதத்திற்கு - அரசு சார்புச் செயலாளர் ( நிதித் துறை) பதில் (Request letter from Tamil Nadu Government Employees Association for cancellation of Contributory Pension Scheme and implementation of Old Pension Scheme - Secretary to Government (Finance Department) Letter ) கடித எண்: 12973/ நிதி (ஓ.கு.தீ) துறை/ 2022, நாள்: 08-04-2022...



>>> பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டுதல் - தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்திடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை கடிதத்திற்கு - அரசு சார்புச் செயலாளர் ( நிதித் துறை) பதில் (Request letter from Tamil Nadu Government Employees Association  for cancellation of Contributory Pension Scheme and implementation of Old Pension Scheme - Secretary to Government (Finance Department) Letter ) கடித எண்: 12973/ நிதி (ஓ.கு.தீ) துறை/ 2022, நாள்: 08-04-2022...


பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படுவது சாத்தியமா (Is it possible to implement the Old Pension Scheme)...



 உத்தரவாதமான பழைய பென்சனுக்கான தீ பற்றிக்கொண்டது...


ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாத் தனது நிதிநிலை அறிக்கையில் பிப்ரவரி 22, 2022 ல்


“அடுத்த நிதி ஆண்டிலிருந்து 2004 முதல் பணியில் சேர்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் பழைய பென்சன் அமுல்படுத்தப்படும்” என்று அறிவித்துள்ளார்.


அறிவித்தது காங்கிரசு முதல்வர். புதிய பென்ஷன் திட்டத்தை சட்டமாக்கியதே காங்கிரஸ் அரசு தான். ஒரு நிர்வாக உத்தரவின் மூலம் அதை அமுல்படுத்தியது வாஜ்பாயி தலைமையிலான பாஜக அரசு. இடதுசாரிகளைத்தவிர அனைத்து கட்சிகளும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்தன. புதிய பென்சன் திட்டத்தை அமுல்படுத்தின.


எனவே ராஜஸ்தான் அரசின் அறிவிப்பு உண்மைதானா? சாத்தியமா? என்று ஒரு சிலர் கேள்வி எழுப்புகின்றனர். 


ராஜஸ் தானில் 5.6 லட்சம் பழைய பென்சன் பெறும் ஓய்வூதியர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஆகும் செலவு ரூ23000 கோடி. 5.5 லட்சம் புதிய பென்சன் ஊழியர்கள் இருக்கிறார்கள்.இவர்களுக்காக அரசு ஆண்டு தோறும் அளிக்கும் பங்களிப்பு தொகை ரூ 29000 கோடி. இது ஆண்டுதோறும் 7.5 சதம் அதிகரிக்கும் என்று எதிர்பர்க்கப்படுகிறது. எனவே ”மாநில அரசு நிதிச்சுமையை கணக்கில் கொண்டு குறுகிய கால லாப கண்ணோட்டத்தில் பழைய பென்சனை அமல்படுத்துகிறது” என்று எக்ஸ்ப்ரெசும் பிசினஸ்லைனும் குறை கூறுகின்றன. புதிய பென்சனில் நிதிச்சுமை கூடுதலாகும் என்று மேற்கு வங்க இடதுசாரி அரசில் நிதி அமைச்சராக இருந்த அசிம்தாஸ் குப்தா அப்போதே கூறினார்.


சத்திஸ்கர் மாநிலம் அறிவிப்பு


ராஜஸ்தானை தொடர்ந்து மார்ச் 9 அன்று சத்திஸ்கர் முதல்வர் புதிய பென்சனில் உள்ள அனைத்து மாநில அரசு ஊழியர்களும் பழைய பென்சனுக்கு கொண்டு வரப்படுவார்கள் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவித்துவிட்டார். அத்துடன் அவர் ராகுல்காந்திக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கும் புதிய பென்சனை ரத்து செய்ய கோரிக்கை வைக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். பாஜக ஆளும் மத்திய பிரதேசத்திலும்  அசாமிலும் அந்த முதல்வர்களுக்கு நிர்பந்தம் எழுந்துள்ளது.


இமாச்சலப்பிரதேசத்தில்


பாஜக ஆளும் இமாச்சலப்பிரதேசத்தில் ராஜஸ்தான் அறிவித்த மறு நாளில் இருந்து அதாவது பிப்ரவரி 23 முதல் 9 நாள்  மாநிலம் முழுதும் பாத யாத்திரை நடத்தி மார்ச் 3 ஆம் தேதி தலை நகர் சிம்லா வில் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்ட மாபெரும் பேரணி நடைபெற்றது. இதை நடத்தியது யார் தெரியுமா? புதிய பென்சன் திட்ட ஊழியர் சங்கம். இதன் விளைவாக மார்ச் 9 அன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன் மொழிந்து சட்ட மன்றத்தில் உரையாற்றிய பாஜக முதல்வர் ஜெய்ராம் தாக்குர் பழைய பென்சனை அமுலாக்குவது பற்றி பரிசீலிக்க தலைமை செயலாளர் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.


இடதுசாரிகள் புதிய பென்சன் திட்டத்தை அமுல்படுத்தவில்லை


29 மாநிலங்களில் மேற்கு வங்கம் தவிர மற்ற 28 மாநிலங்களில் புதிய பென்சன் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மார்க்ஸிஸ்ட் கட்சி தலைமை வகித்த இடதுசாரிகள் ஆண்ட வரை மேற்கு வங்கம், கேரளா, திரிபுராவில் புதிய பென்சன் திட்டம் அமல்படுத்தாமல் பழைய பென்சனே வைத்திருந்தனர். கேரளாவில் காங்கிரசு வந்த பின் 2013 முதலும் திரிபுராவில் பாஜக வந்தபின் 2018 முதலும் புதிய பென்சன் திட்டம் அமல் படுத்தப்பட்டது. மேற்கு வங்கத்தில் மட்டும் மமதா பழைய பென்சனை தொடர்கிறார். அனைத்து மாநிலங்களிலும் சேர்த்து 2022 ஜனவரி 31ல் 55,14,516 பேர் புதிய பென்சன் திட்டத்தில் உள்ளனர். தமிழக புதிய பென்சன் திட்ட ஊழியர்கள் இந்த கணக்கில் வராது. ஏனெனில் அவர்களது கணக்கு இன்னும் Pension Fund Regulatory and Development Authority (PFRDA) வுக்கு அனுப்பப்படவில்லை.


வாக்குறுதிகள்


தெலிங்கானாவில் தேர்தல் வாக்குறுதியில் ”புதிய பென்சனை ரத்து செய்வோம்” என்று வாக்குறுதி அளித்த சந்திரசேகர் அரசு, ஊழியர்களின் போராட்டத்திற்குப்பிறகும் ”இது மத்திய சட்டம். மத்திய அரசு தான் இதனை ரத்து செய்யவேண்டும்” என்று கைகழுவி விட்டுவிட்டார். ஆந்திர முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்த போதிலும், பின்னர் ஒரு கமிட்டி போட்டு அமைதி காக்கிறார். கேரளாவில் 2016 தேர்தலில் வெற்றி பெற்ற இடது முன்னணி, தேர்தல் வாக்குறுதியில் பழைய பென்சனை மீண்டும் அமல் படுத்த வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது. 2021ல் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. ஏனோ இன்னும் புதிய பென்சனை ரத்து செய்யவில்லை. செய்திருந்தால் இடதுசாரிகள் முன்னுதாரணமாக ஆகி இருப்பார்கள். உத்தரப்பிரதேச தேர்தலில் சமாஜ்வாதி கட்சி இப்போது அதே வாக்குறுதியை அளித்துள்ளது.


பெரும்பாலான ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் வந்துள்ளதும், இந்தப் புதிய பென்ஷன் திட்டத்தின் அநியாயம் பற்றிய விழிப்புணர்வு பெருகி உள்ளதும், எல்லா மாநிலங்களிலும் போராட்டம் வலுப்பெற்றுள்ளதும், இந்த கோரிக்கைக்கு அரசியல் ஆதரவு கிட்டியிருப்பதும் மாநில தேர்தல்களில் இந்த கோரிக்கை பிரதிபலிக்கத் துவங்கியுள்ளது.  தமிழகத்தில் கூட அரசு ஊழியர்கள் தமிழக அரசு ஊழியர் சங்கத் தலைமையில் வேலை நிறுத்தங்கள் உட்பட பல கட்ட போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக எந்த கட்சியும் இந்த கோரிக்கையை நிராகரிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. திமுக தன் தேர்தல் அறிக்கையில் பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வாக்களித்துள்ளது. படிப்படியாக தேர்தல் வாக்குறுதிகளை அமல் படுத்துவோம் என்று முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர் சங்க மாநாட்டில் அறிவித்துள்ளார். அமல்படுத்தவில்லை என்றால் ஊழியர்கள் விடமாட்டார்கள்.


மாநில அரசு மாற்ற முடியுமா?


தெலிங்கானா முதல்வர் சொல்வது சரிதானா என்று பார்ப்போம். சட்டம் மத்திய சட்டம்தான். ஆனால் மத்திய அரசு ஊழியர்களுக்குத்தான் அது கட்டாயம். சட்டத்தின் 12(4) பிரிவு கூறுவது என்ன.


“மாநில அரசுகள் விரும்பினால் ஒரு அறிவிக்கை மூலம் தனது ஊழியர்களை தேசிய பென்சன் திட்டத்தில் கொண்டு வரலாம்.”


மத்திய சட்டம் நேரடியாக அவர்களுக்கு பொருந்தாது.


அன்றைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தி பேசிய பேச்சு இன்னும் மக்களவை இணைய தளத்தில் உள்ளதை பாருங்கள்;


“மாநில அரசுகள் சேர கடமைப்பட்டிருக்கவில்லை. அவர்கள் தாங்களாக விரும்பி சேர்ந்துள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்குத்தான் இது 1-1-2004 முதல் கட்டாயம்” (The state governments were not obliged to join. They joined voluntarily. Only for the central government employees, it is mandatory from 1-1-2004)


தெலிங்கானா அரசு ஊழியர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டதற்கு மாநில அரசு விரும்பினால் புதிய பென்சன் திட்டத்தை திரும்பபெற முடியும் என்று PFRDA பதில் அளித்துள்ளது. ஓர் அரசாணையின் மூலம் அவர்களை புதிய பென்சனிலிருந்து விலக்கிவிடலாம். கேரளா குறித்து கேட்ட கேள்விக்கும் அதே பதிலை அளித்தது PFRDA. எனவே சட்டம் தடை இல்லை.


திரும்பிப் போக முடியுமா?


15 ஆண்டுகள் கழித்து திரும்பிப்போக முடியுமா? என்று கேட்கப்படுகிறது. போக முடியும் என்பதுதான் பதில்.


1-1-2004 முதல் பணியில் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு இது கட்டாயம். ஆனால் சில நீதி மன்ற தீர்ப்புகளுக்குப் பின் மத்திய அரசு 1-1-2004 க்கு முன் தேர்வாகி, 1-1-2004 அன்றோ அல்லது அதற்கு பின்போ வேலையில் சேர்ந்தவர்கள் புதிய பென்சன் திட்டத்தின் கீழ் இருந்தால், 15 ஆண்டுகள் ஆகி இருந்தாலும் அவர்களை பழைய பென்சனில் கொண்டுவர மத்திய அரசு 17-2-2020ல் உத்தரவு போடவேண்டியதாகிவிட்டது. அவ்வாறு பலர் இப்போது பழைய பென்சனுக்கு மாறி விட்டார்கள். PFRDA ஒவ்வொருவர் கணக்கிலும் ஊழியர்களது பங்களிப்பு, அரசு பங்களிப்பு என தனித்தனியாக பராமரிக்கிறது. பழைய பென்சனுக்கு மாறுகிறவர்களின் சொந்தப் பங்களிப்பு தொகையை அவர்களுக்கு PF கணக்கு திறந்து அதில் செலுத்திவிட்டது. அரசின் பங்களிப்பு தொகையை அரசே எடுத்துக்கொண்டது.


இதே முறையை பின்பற்றி அனைத்து ஊழியர்களையும் பழைய பென்சனில் கொண்டு வருவதற்கு எதுவும் தடை இல்லை. கொள்கைதான் தடை. மத்திய, மாநில அரசு ஊழியர்களின் கணக்கில் 5.66 லட்சம் கோடி உள்ளது. இதை பங்கு சந்தையில் போடவேன்டும். பென்சனை தனியார் மயமாக்க வேண்டும். இதுதான் சீர் திருத்தம். இதிலிருந்து பின்வாங்கக்கூடாது. என்பதுதான் அவர்களின் கொள்கை.


மாநில அரசுகள் பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்தினால் ஆண்டு தோறும் அவர்கள் அளிக்கும் பங்குத்தொகை செலவு இருக்காது. செல்லும்போது செலவு என்னும் முறை தான் இருக்கும்.(pay-as-you-go-system). அரசு இதுவரை செலுத்திய பங்குத்தொகை மொத்ததமாக அரசுக்கு  கிடைக்கும். நிதி பற்றாக்குறையை சமாளிக்கலாம்.


அநியாயமான புதிய பென்சன் திட்டம்


புதிய பென்சன் போதுமான பென்சனுமல்ல. உத்தரவாதமான பென்சனும் அல்ல.  ஒருவர் ரெயில்வேயில் 14 ஆண்டுகள் பணி முடித்து ஓய்வு பெற்றார். அவரது அடிப்படை சம்பளம் ரூ 46000.


பழைய பென்சன் திட்டத்தில் 10 ஆண்டு பணி முடித்து ஓய்வு பெற்றாலே ரெயில்வேயில் முழு பென்சன் உண்டு. அதாவது பாதி  சம்பளம். அதாவது ரூ 23000 பென்சன் தொகை. இதில் 40% அதாவது ரூ9200 கம்யூட் செய்யலாம். அதை கழித்தால் அவரது மாத பென்சன் ரூ 13800. கம்யூட் செய்தாலும் அடிப்படை பென்சனான 23000 க்கு பஞ்சப்படி 6 மாதத்துக்கு ஒரு முறை கிடைக்கும். கம்யூட்டேசன் தொகையாக ரூ 9 லட்சம் கிடைக்கும். ஊழியர் இறந்தால் இணையருக்கோ, விதவை, மணமாகாத, விவாகரத்து பெற்ற மகள்கள் யாருக்காவது பென்சன் கிடைக்கும். பழைய பென்சனில் பிஎஃப் வேறு உண்டு அவர் சேமிப்பில் இருக்கும் தொகை வேறு அவருக்கு கிடைக்கும்.


புதிய பென்சன் திட்டத்தின்படி அவர் கணக்கில் இருந்தது ரூ12 லட்சம். 60 சதம் அதாவது ரூ 7.2 லட்சம் அவர் எடுத்துக்கொண்டார். 4.8 லட்சம் அவர் பென்சனுக்காக ஆனுவிட்டியில் முதலீடு செய்தார். ஒரு லட்சத்துக்கு ரு 523 வீதம் அவருக்கு கிடைப்பது வெறும் ரூ 2510. பழைய பென்சனில் அடிப்படை பென்சன் ரூ 13800 ம் அதற்கான பஞ்சப்படியும் கிடைக்கும். எனவே இது பழைய பென்சனுக்கு ஈடு இல்லை. அத்துடன். ஆனுவிட்டி கம்பெனிகள் அந்தத் தொகை 4.8 லட்சத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்கிறார்கள். அசலே பறிபோகும் அபாயம் இருப்பதாக செபி கூறுகிறது. குறைந்தபட்ச பென்சன் உத்தரவாதமும் கிடையாது. ஊழியர் இறந்தால் இணையருக்கு அதே தொகை கிடைக்கும். வேறு யாருக்கும் கிடைக்காது. எனவே இது உத்தரவாதமுமில்லை. போதுமானதும் கிடையாது. இதற்கு பஞ்சப்படி கிடையாது. பிஎஃப் கிடையாது.


புதிய பென்சன் திட்டம் எந்த நியாயமும் இல்லாதது. எனவே தான் இன்று எந்த தொழிற்சங்கமும் இதை ஆதரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாஜகவின் சங்கமான பிஎம்எஸ் கூட புதிய பென்சனை எதிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. புதிய பென்ஷன் திட்டத்தை கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியின் முதல்வரே ராஜஸ்தானில் அதன் அநியாயம் குறித்து பேசி ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.


எனவே இனி புதிய பென்ஷன் திட்டம் நல்லது என்று சொல்லி யாரும் ஊழியர்களை ஏமாற்ற முடியாது. சாத்தியமில்லை என்று சொல்லியும் ஏமாற்ற முடியாது. அவர்களின் போராட்டம் இறுதி வெற்றி பெறும் வரை ஓயாது. அரசியல் நிர்பந்தம் வெற்றிக்கு வழி வகுக்கும்.


அக்கினிகுஞ்சு ஒன்று பொந்திடை வைத்தாகிவிட்டது. வெந்து தணியும் காடு. இது காட்டுத்தீ போல பரவும்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்திட தமிழ்நாடு அரசுக்கு வைகோ அவர்கள் வேண்டுகோள் (Vaiko appeals to the Government of Tamil Nadu to cancel the new pension scheme and re-implement the old pension scheme)...



>>> புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துக! தமிழ்நாடு அரசுக்கு வைகோ வேண்டுகோள்! 


தமிழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் சீருடைப் பணியாளர்கள் முதலான அரசு பணியாளர்களுக்கு 01.04.2003 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, இத்திட்டத்தில் சுமார் ஆறு இலட்சம் அரசு ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.



புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வூதியம், பணிக்கொடை, மருத்துவக் காப்பீடு முதலான எந்தவிதப் பலன்களும் இல்லாததால், இதனை இரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நிறைவேற்ற வேண்டுமென 19 ஆண்டுகளாக, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராடி வருகிறார்கள்.



இதனை வலியுறுத்தி, கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிற அரசு ஊழியர்கள், 25.03.2022 அன்று தமிழ்நாடு முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து, கையெழுத்துப் படிவங்களை வழங்கி, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தக் கோரிக்கை வைக்க உள்ளார்கள்.


மேற்கு வங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகள் புதிய ஓய்வூதியத் திட்டத்தினை இரத்து செய்வதாக அறிவித்துள்ளது. கேரளா, ஆந்திரா, டில்லி ஆகிய அரசுகள் இது குறித்து வல்லுநர் குழுவின் பரிந்துரைகளைப் பெற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது.



2016, 2021 சட்டமன்றத் தேர்தல்களின்போதும், 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போதும் தி.மு.கழகம் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளிலும் இந்த கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.



எனவே புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை முற்றாக இரத்து செய்துவிட்டு, ஏற்கனவே நடைமுறையில் இருந்த பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, அரசு ஊழியர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்குமாறு மறுமலர்ச்சி தி.மு.க சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க

‘தாயகம்’

சென்னை - 8

03.03.2022

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Tamil Nadu State PTA - Question Bank Outlets for 10th and 12th standard - District Wise Release

தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் - 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான வினா வங்கி விற்பனை  இடங்கள் - மாவட்ட வாரியாக வெளியீடு - செய்தி வ...