கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பாடங்கள் குறைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாடங்கள் குறைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பாடத்திட்டம் குறைப்பு குறித்து விரைவில் அரசாணை வெளியாகும் - பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தகவல்...

 கொரோனா விடுமுறைக்கு பிறகு பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுதினம் பள்ளிகள் திறக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் இதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், எழும்பூரில் உள்ள பிரசிடென்ஸி மகளிர் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட கல்வி அலுவலர்கள் பள்ளிகளில் ஆய்வு நடத்தி வருவதாக கூறினார். மேலும் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு கொரோனா அச்சத்தைப் போக்கும் விதமாக மாணவர்களுக்கு 2 நாட்கள் மனநல ஆலோசனை வழங்கப்படவுள்ளதாகவும் கண்ணப்பன் தெரிவித்தார்.

2020- 21ஆம் கல்வியாண்டு - பத்தாம் வகுப்பிற்கான(10th Standard), குறைக்கப்பட்ட பாடத்திட்ட(Reduced Syllabus) விவரம்...


 2020- 21ஆம் கல்வியாண்டு - பத்தாம் வகுப்பிற்கான, குறைக்கப்பட்ட பாடத்திட்ட விவரம்...

(10th Standard - Reduced Syllabus Details)


>>> தமிழ் வழி தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


>>> Click here to Download English Medium...



எந்தெந்த வகுப்புகளுக்கு எவ்வளவு பாடத்திட்டம் குறைப்பு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு...

 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் பள்ளிகள் கூட்டமைப்பு நடத்திய விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற 23 பேருக்கு 35 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அளவுக்கு பரிசுகளை வழங்கிய அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதைத் தெரிவித்தார்.

தனியார் பள்ளிகள் வேண்டுமானால் ஆன்லைன் மூலமாக அரையாண்டு தேர்வை நடத்திக் கொள்ளலாம் என்றார் அவர்.

நடப்பு கல்வியாண்டில், 9 ம் வகுப்பு வரை 50 சதவீதமும்,10, 11 மற்றும் 12 ம் வகுப்புகளில் 65 சதவீதமும் பாடங்களை நடத்த அறிவுறுத்தியுள்ளதாக செங்கோட்டையன் கூறினார்.

முன்னதாக ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா சந்திப்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிலையை அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பணன் ஆகியோர் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அரையாண்டு தேர்வு ரத்து - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்...

 



பாடத்திட்டத்தை குறைப்பது குறித்து மற்றொரு ஆய்வு செய்யப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...

பாடத்திட்டத்தை குறைப்பது குறித்து மற்றொரு ஆய்வு செய்யப்படும் என்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம் கோபியில், அவர் கூறியதாவது: தமிழகத்தில் இந்த அரசு பொறுப்பேற்ற பின்தான், தேர்வு முறையில் ரேங்க் சிஸ்டம் குறைக்கப்பட்டது. மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே ரேங்க் சிஸ்டம் தற்போது இல்லை. நீட் தேர்வுக்காக, கடந்தாண்டில், 3,942 பேருக்காக, 96 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில், 17 ஆயிரத்து 820 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு இரண்டு கோடி ரூபாய் செலவாகும்.

கொரோனா சூழலில், 60 சதவீத பாடங்களை போதித்து, 40 சதவீத பாடத்தை குறைத்து கொள்ள முடிவு செய்தோம். ஆனால், கொரோனா சூழலில், நாட்கள் ஓடிக்கொண்டே உள்ளது. பள்ளியை திறக்க இயலவில்லை. எனவே, பாடத்திட்டத்தை குறைப்பது குறித்து மற்றொரு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

🍁🍁🍁 நடப்பு ஆண்டு பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், பாடத்திட்டம் குறைப்பை இறுதி செய்வதில் சிக்கல்...

 நடப்பு ஆண்டு பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், பாடத்திட்டம் குறைப்பை இறுதி செய்வதில் சிக்கல் நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 கரோனா வைரஸ் பரவலால் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையிலான குழுவின் பரிந்துரைப்படி 40 சதவீதம் வரை பாடத்திட்டத்தை குறைக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்தது.

இதையடுத்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிமையம் (எஸ்சிஇஆர்டி) சார்பில் பாடஅளவு குறைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அறிவிப்பு வெளியாகி ஒரு மாதமாகியும் பாடஅளவு குறைப்பு சார்ந்த விவரங்களை பள்ளிக்கல்வித் துறை வெளியிடவில்லை. இதனால் மாணவர்களுக்கான கற்பித்தல் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:

என்சிஇஆர்டி பரிந்துரை

கல்வியாண்டு தாமதத்தால், பாடத்திட்டத்தை கணிசமாக குறைக்க தேசிய கல்வியியல் ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) பரிந்துரை செய்தது. அதையேற்று சிபிஎஸ்இ, கேந்திரிய வித்யாலயா உட்பட மத்தியவாரியப் பள்ளிகள் கடந்த ஜூலை மாதமே 30 சதவீத அளவுக்கு பாடங்களை குறைத்து, அதன் முழு விவரங்களையும் வெளியிட்டன.

அந்த வழிகாட்டுதலை பின்பற்றி சிபிஎஸ்இ, கே.வி. பள்ளிகள் பாடங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் 40 சதவீதம்வரை பாடஅளவு குறைக்கப்படும். அதற்கான பணிகள் இறுதி கட்டத்தில் இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை கடந்த செப்டம்பரில் அறிவித்தது. ஆனால், குறைக்கப்பட்ட பாடங்களின் விவரங்களை இதுவரை அரசு வெளியிடவில்லை.

மாணவர்களுக்கு சிரமம்

இதன் காரணமாக மாணவர்களுக்கு எந்தெந்தப் பாடங்களை நடத்துவது என்ற குழப்பம் ஆசிரியர்கள் மத்தியில் நிலவிவருகிறது. தனியார் பள்ளிகள் அனைத்து பாடங்களையும் நடத்தி வருகின்றன. ஆனால், அரசுப் பள்ளி மாணவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தற்போது கல்வித் தொலைக்காட்சி மூலமே பாடங்கள் நடத்தப்படுகின்றன.

அதுவும் அனைத்து தரப்பு மாணவர்களையும் முழுமையாகச் சென்றடையவில்லை. இத்தகைய சிக்கல்கள், கற்றலில் பின்தங்கிய மாணவர்களின் கல்விக்கு சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது. இதைக்கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு, பொதுத்தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும். மேலும், பாடக்குறைப்பு விவரங்களையும் உடனே வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘நிபுணர் குழு பரிந்துரையின்படி 1 முதல் 10-ம் வகுப்பு வரை 40சதவீதமும், 11, 12-ம் வகுப்புகளுக்கு 30 சதவீதமும் பாடங்களைகுறைக்க முடிவானது. என்சிஇஆர்டி வழிகாட்டுதலின்படி பாடத்தின் முக்கிய பகுதிகளில் மாற்றம் செய்யாமல் கூடுதல் விளக்கங்கள் மட்டும் நீக்கப்பட்டன.

அதேநேரம் பள்ளிகள் திறப்பை அக்டோபர் மாத இறுதியில் மேற்கொள்ள திட்டமிட்டே பாடத்திட்டக் குறைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தொற்று தணியாததால் பள்ளிகள் திறப்பை முடிவு செய்வதில் தொடர்ந்து சிக்கல் நிலவுகிறது. இதனால் பாடஅளவு குறைப்பையும் இறுதிசெய்ய முடியவில்லை. ஏனெனில்,பள்ளிகள் திறப்பை முன்வைத்துதான் எவ்வளவு சதவீதம் பாடத்திட்டத்தை குறைக்கலாம் என்று முடிவெடுக்க முடியும்.

தீபாவளிக்குப் பிறகு...

தற்போதைய சூழலில் தீபாவளி முடிந்ததும் நவம்பர் இறுதியில் பள்ளிகளைத் திறந்து மேல்நிலை வகுப்புகளை மட்டும் சுழற்சி முறையில் நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், பள்ளிகள் திறப்பு, தமிழக அரசின் கொள்கை சார்ந்தவிவகாரம் என்பதால் முதல்வரே இதில் இறுதி முடிவை மேற்கொள்வார். பள்ளிகள் திறப்பு இறுதியானதும் பாடத்திட்டக் குறைப்பு விவரங்களை அமைச்சர் வெளியிடுவார்’’ என்றனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...