கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Chess லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Chess லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Chief Minister M.K.Stalin presented a cheque of 5 crore rupees to world chess champion Gukesh


உலக சதுரங்க சாம்பியன் குகேஷிற்கு 5 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


Chief Minister M.K.Stalin presented a cheque of 5 crore rupees to world chess champion Gukesh


11 ஆண்டுகளில் உலக சாம்பியனாக குகேஷ் சாதனை படைத்துள்ளார்.


குகேஷின் விடாமுயற்சியை தமிழக இளைஞர்கள் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.


புதிய சாதனை படைத்திருக்கிறார் நம்ம பையன், சென்னை பையன் குகேஷ்.


தனது உழைப்பாலும் திறனாலும் உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்- உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.


தமிழ்நாட்டில் திறமையான செஸ் வீரர், வீராங்கனைகளை உருவாக்க, அரசு சார்பில் செஸ் விளையாட்டுக்கென HOME OF CHESS' என்ற சிறப்பு அகாடமி உருவாக்கப்படும்.


குகேஷின் வெற்றி கொடுக்கக்கூடிய நம்பிக்கை, தமிழ்நாட்டில் கிராண்ட்மாஸ்டர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என உறுதியாக நம்புகிறேன் - உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கான பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


செஸ் உலகின் சிறந்த நகரம் சென்னை: குகேஷ்

இளம் வயதில் உலக சாம்பியன்ஷிப் பட்டம் வெல்ல வேண்டும் என்ற கனவு நனவாகியுள்ளதாக உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் தெரிவித்துள்ளார்.


இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற டி. குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் சென்னையில்  பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் குகேஷுக்கு ரூ. 5 கோடி பரிசாக வழங்கப்பட்டது.


இந்த விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.




குகேஷுக்கு காசோலை வழங்கி பாராட்டும் முதல்வர் மு.க. ஸ்டாலின்


இதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் பேசியதாவது,


’’18 வயதில் உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளேன். இது என்னுடைய நீண்ட நாள் கனவு. இளம் வயதில் உலக சாம்பியன்ஷிப் பட்டம் வெல்ல வேண்டும் என்ற கனவு நனவாகியுள்ளது.


செஸ் உலகில் சென்னை சிறந்த நகரமாக உள்ளது. இதில் ஒரு பகுதியாக நானும் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழக அரசின் உதவி அதில் முக்கியமானது.


2022 ஒலிம்பியாட் போட்டி வரலாற்று சிறப்புமிக்க செஸ் திருவிழா. மிகக் குறுகிய காலத்தில் செஸ் போட்டிக்கு முக்கியத்துவம் கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி.


உலக சாம்பியன்ஷிப் பயணம் சென்னை கிராண்ட் மாஸ்டர்களின் துணையின்றி சாத்தியமாகியிருக்காது. நிதி உள்பட பல்வேறு வகையில் உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கு நன்றி.


செஸ் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று தமிழ்நாட்டுக்குத் திரும்பினால், என்னை பாராட்டவும், நிதியுதவி அளித்து ஊக்குவிக்கவும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தயங்குவதில்லை.


என்னைச் சுற்றியுள்ளவர்கள் என்னுடைய எதிர்காலத்தை வடிவமைத்துள்ளனர். என்னுடைய பெற்றோர், விஸ்வநாதன் ஆனந்த் என எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். விஸ்வநாதன் ஆனந்த் விளையாட்டைப் பார்த்து செஸ் போட்டியின்மீது ஆர்வம் கொண்டவன் நான். அவர் மூலம் எனக்கு கிடைத்த பயிற்சியும், பயிற்சியாளர்களும் ஏராளம்.


என்னுடைய குழுவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’’ என குகேஷ் பேசினார்.


Gukesh from Tamilnadu won the world chess championship title



உலக செஸ் சாம்பியன் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் என்பவர் சாம்பியன் பட்டம் வென்று சாதனை


Gukesh from Tamilnadu won the world chess championship title


”11 வயதில் கனவு கண்டேன்” உலக செஸ் சாம்பியன் குகேஷ் வெற்றி மகிழ்ச்சியில் சொன்ன வார்த்தைகள்


இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் மற்றும் நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. 14 சுற்றுகள் கொண்ட உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 12 சுற்றுகள் வரை குகேஷ் மற்றும் டிங் லிரென் இருவரும் 6-6 என சமபுள்ளிகளை பெற்று சாம்பியன் பட்டத்திற்காக போராடினர்.



அதற்குபிறகுநடைபெற்ற 13வது சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்த நிலையில் இருவரும் 6.5-6.5 புள்ளிகளுடன் மீண்டும் சமநிலையிலேயே இருந்தனர்.


இந்நிலையில் இன்று நடைபெற்ற 14வது மற்றும் கடைசி சுற்று போட்டியானது வெற்றியாளரை தீர்மானிக்கும் ஒரு போட்டியாக நடைபெற்றது. ஒருவேளை இந்த ஆட்டத்திலும் முடிவு எட்டப்படாவிட்டால் டைபிரேக்கர் முறையில் வெற்றியாளருக்கான போட்டி நடைபெறும் என கூறப்பட்டது.


ஆனால் அதற்கு வாய்ப்பளிக்காத இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு உலக சாம்பியனான டிங் லிரெனை வீழ்த்தி புதிய உலக சாம்பியனாக மகுடம் சூடிக்கொண்டார்.


போட்டியில் நடந்தது என்ன?

விறுவிறுப்பாக நடைபெற்ற 14வது சுற்று போட்டியில், இருவருமே இறுதிவரை அழுத்தத்தின் போது கூட விட்டுக்கொடுக்காமல் விளையாடினர். ஆனால் இரண்டாம் பாதியில் அழுத்தத்தை சீனா சாம்பியன் பக்கம் திருப்பிய குகேஷ், இருவரும் குயின்களை இழந்தபோதும் சிப்பாய்களை கூடுதலாக பெற்றிருந்த குகேஷ் முன்னிலை பெற்றார்.



இருப்பினும் கடைசி 15 நிமிடம் வரை போட்டி டிராவை நோக்கியே சென்றுகொண்டிருந்த நிலையில், கூடுதலாக காய்களை இழந்த டிங் லிரென் அதிகமான அழுத்தம் காரணமாக ரூக் F2 வை நகர்த்தி தவறு செய்ததால், குகேஷ் வெற்றி பெறும் வாய்ப்பு கிடைத்தது. 


முடிவில் 18 வயதில் உலக செஸ் சாம்பியனாக மகுடம் சூடிய குகேஷ், இளம் வயதில் உலக செஸ் சாம்பியனான முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையையும் தனதாக்கி கொண்டார்.


11 வயதில் கனவு கண்டேன்..

உலக செஸ் சாம்பியன் படத்தை வென்றபிறகு பேசிய இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், லீரென் தோல்வியடைந்ததற்கு எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற ஒரு தருணத்தை ஒவ்வொரு செஸ் வீரரும் அனுபவிக்க வேண்டும். சாம்பியனான மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருக்கிறேன். இப்போது உள்ள சந்தோஷத்தில் பேசினால் எதாவது முட்டாள்தனமாக பேசிவிடுவேன்.


ஆட்டம் டிராவில் முடிவடையும் என்றே நினைத்தேன். 11 வயதில்,செஸ் வரலாற்றில் இளம் உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைக்க வேண்டும் என்று கூறி இருந்தேன். தற்போது அது நிறைவேறி உள்ளதாக மகிழ்ச்சியான கண்களுடன் பேசினார் குகேஷ்.


உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற பிறகு குகேஷ் - நெகிழ்ச்சியான தருணம்


Stunning emotions as Gukesh cries after winning the World Championship title 




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...




சர்வதேச செஸ் போட்டியில் தமிழ்நாட்டின் குகேஷ் சாம்பியன்..

சர்வதேச செஸ் போட்டியில் தமிழ்நாட்டின் குகேஷ் சாம்பியன்..


சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டியில் தமிழ்நாட்டின் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார்.


கடைசி சுற்று முடிவில், கருப்பு நிற காய்களுடன் ஆடிய குகேஷ் ( 2 வெற்றி, 5 டிரா), அர்ஜூன் எரிகாசி (3 வெற்றி, 1 தோல்வி, 3 டிரா) ஆகியோர் தலா 4.5 புள்ளிகள் பெற்றிருந்தனர்.


வெற்றி, தோல்வி, டிரா கணக்கிட்டு புள்ளிகள் வழங்கியதில் முதலிடத்தை பிடித்த குகேஷ்க்கு ரூ.15 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.



செஸ் விளையாட்டு தமிழக பள்ளிகளிலும் ஒரு நாள் கட்டாயமாகும் -தலைமைச் செயலாளர் திரு.வெ.இறையன்பு இ.ஆ.ப (Chess game will be compulsory in Tamilnadu schools one day - Chief Secretary Mr. V. Iraianbu IAS)...

 


செஸ் விளையாட்டு தமிழக பள்ளிகளிலும் ஒரு நாள் கட்டாயமாகும் -தலைமைச் செயலாளர் திரு.வெ.இறையன்பு இ.ஆ.ப (Chess game will be compulsory in Tamilnadu schools one day - Chief Secretary Mr. V. Iraianbu IAS)...





சதுரங்க ஒலிம்பியாட் - அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சதுரங்கப் போட்டிகள் - பள்ளி, வட்டார, மாவட்ட, மாநில அளவில் நடைபெறும் தேதிகள் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Chess Olympiad - Chess competitions for Government School Students - Proceedings of the Commissioner of School Education regarding the dates of the School, Block, District and State Level Competitions) ந.க.எண்: 019530/ எம்/ இ4/ 2022, 25-06-2022...



>>> சதுரங்க ஒலிம்பியாட் - அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சதுரங்கப் போட்டிகள் - பள்ளி, வட்டார, மாவட்ட, மாநில அளவில் நடைபெறும் தேதிகள்  சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Chess Olympiad - Chess competitions for Government School Students - Proceedings of the Commissioner of School Education regarding the dates of the School, Block, District and State Level Competitions) ந.க.எண்: 019530/ எம்/ இ4/ 2022, 25-06-2022...




>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

From 01.01.2025 applications all types of leave through Kalanjiyam App only – DSE Proceedings

  01.01.2025 முதல் களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே ஓய்வூதிய கருத்துருக்களும், அனைத்து வகை விடுப்புகளும் விண்ணப்பிக்க வேண்டும் - பள்ளிக்கல்வி ...