கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Counting of Votes லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Counting of Votes லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2021 - 9.15 மணி முன்னிலை நிலவரம்...



தமிழ்நாடு தேர்தல் முன்னணி நிலவரம் (82/234):

திமுக+ = 47
அதிமுக+  = 34
அமமுக+ = 1
மநீம+ = 0
நாதக = 0


மேற்கு வங்கத் தேர்தல் முன்னணி நிலவரம் (134/292):

திரிணாமுல் காங் = 76
பாஜக = 58
சிபிஎம் = 0
பிற = 0


அசாம் தேர்தல் - முன்னணி நிலவரம் (39/126):

பாஜக = 24
காங் = 12
பிற = 3


கேரளா தேர்தல் - முன்னணி நிலவரம் (86/140):

சிபிஎம் கூட்டணி = 45
காங் கூட்டணி = 38
பாஜக கூட்டணி = 3
பிற = 0


புதுச்சேரி தேர்தல் - முன்னணி நிலவரம் (9/30):

காங் கூட்டணி = 4
என்.ஆர்.காங் கூட்டணி = 5
பிற = 0

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 - இன்று வாக்குகள் எண்ணிக்கை - நடைமுறைகள்...



தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படும் நிலையில், ஜெயிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இன்று மாலைக்குள், முன்னிலை நிலவரம் தெரிந்து விடும். இதேபோல, சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடக்கும் புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களிலும்,ஆட்சி அமைக்கப் போவது யார் என்ற பரபரப்பு நிலவுகிறது.


தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில், கடந்த மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது.தமிழகத்தில், சட்ட சபை தேர்தலுடன், காலியாக உள்ள கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கான இடைத்தேர்தலும், ஏப்., 6ல் நடந்தது.ஐந்து மாநிலங்களிலும் பதிவான ஓட்டுகள், இன்று காலை, 8:00 மணிக்கு எண்ணப்பட உள்ளன. முதலில், தபால் ஓட்டுகள் எண்ணிக்கை துவங்கும்.சற்று நேரத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படும். காலை, 8:30 மணியில் இருந்து, முடிவுகள் விபரம் வெளியாகத் துவங்கும்.


கடும் போட்டி

தமிழகத்தின், 234 தொகுதிகளிலும், அ.தி.மு.க., கூட்டணி, தி.மு.க., கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அ.ம.மு.க., கூட்டணி கட்சிகள் போட்டியிட்டன.நாம் தமிழர் கட்சி, 234 தொகுதிகளிலும் தனித்து களம் இறங்கியது. இது தவிர, சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.தேர்தலில், பல முனைப்போட்டி நிலவினாலும், ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்பதில், அ.தி.மு.க., -- தி.மு.க., கூட்டணி இடையே, கடும் போட்டி நிலவுகிறது.


 தேர்தலில் ஜெயிக்கப் போவது யார் என்ற முன்னிலை விபரம், இன்று மாலை தெரியும்.யார் ஆட்சியை பிடிப்பார் என்று அறிய, மக்களும் மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர். 'சென்னையில் உள்ள, 16 தொகுதி களின் ஓட்டு எண்ணிக்கை முடிந்து, இறுதி முடிவுகள் வெளியாக, 20 மணி நேரம் வரை ஆகலாம்' என, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகள் வெளியாக, நள்ளிரவுக்கு மேலாகி விடும் என, தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.


மற்ற மாநிலங்கள்

இதேபோல, சட்டசபை தேர்தல் நடந்த புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களிலும், ஆட்சி அமைக்கப் போவது யார் என்ற பரபரப்பு நிலவுகிறது.இந்த மாநிலங்களிலும், இன்று மாலைக்குள் முன்னிலை விபரங்கள் வெளியாகி, ஆட்சியை யார் பிடிப்பர் என்பது தெரிந்து விடும்.


இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சுத்தம்

''தமிழகத்தில் ஓட்டுகள் எண்ணப்படும் அறைகள், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை, கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்படும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:தமிழகம் முழுதும், ஓட்டு எண்ணிக்கை, 75 மையங்களில் நடக்க உள்ளது.இந்த மையங்களில், 5,622 துணை ராணுவ வீரர்கள்; 5,154 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர்; 25 ஆயிரத்து, 59 போலீசார் என, மொத்தம், 35 ஆயிரத்து, 836 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். மற்ற போலீசார், பிற பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

ஓட்டு எண்ணிக்கை நடக்கும் அறைகள், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை, கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்படும். கொரோனா தொற்று காரணமாக, 10 பொதுப் பார்வையாளர்கள், ஆறு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், மூன்று லட்சத்து, 30 ஆயிரத்து, 380 பேர், தபால் ஓட்டுகளை பதிவு செய்திருந்தனர். இந்த தேர்தலில், நேற்று முன்தினம் வரை, ஐந்து லட்சத்து, 64 ஆயிரத்து, 253 பேர் தபால் ஓட்டுகள் போட்டுள்ளனர்.இவ்வாறு சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.


இணையதளத்தில் தேர்தல் முடிவு

தேர்தல் முடிவுகளை, தேர்தல் கமிஷனின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் மாநிலங்களில் நடந்த, சட்டசபை பொதுத் தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை, இன்று நடக்கிறது. அதேபோல, பல்வேறு மாநிலங்களில் நடந்த, இடைத்தேர்தல்களின் ஓட்டு எண்ணிக்கையும் நடக்கிறது.

தேர்தல் முடிவுகளை,https://results.eci.gov.in, https://elections.tn.gov.in என்ற, தேர்தல் கமிஷன் இணையதளங்களில், உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

5,64,253 தபால் ஓட்டுக்கள் பதிவு - கொரோனா விதிமுறைகள் காரணமாக முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும் - சத்தியபிரதா சாகு...




5,64,253 தபால் ஓட்டுக்கள் பதிவு - கொரோனா விதிமுறைகள் காரணமாக முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும் - சத்தியபிரதா சாகு


கொரோனா தொற்று காரணமாக தேர்தல் அலுவலர்கள் 6 பேர் மாற்றம்


இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்கு எண்ணிக்கை மையங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படும்


இடைப்பட்ட நேரத்தில் வாக்கும் எண்ணும் பணிகள் நிறுத்தி வைக்கப்படும்


நள்ளிரவு 12 மணிக்குள் தேர்தல் முடிவுகள்

கொரோனா வழிமுறைகளை பின்பற்றியும், அதிகமான ஓட்டுப்பதிவினால் சட்டமன்ற தேர்தல் முடிவு தாமதமாகலாம்


35,836 போலீசார் பாதுகாப்பிற்கு உள்ளனர்.


மொத்தம் 5,64,253 தபால் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன.


கொரோனா தொற்றால் தேர்தல் அதிகாரி 6 பேர் மாற்றப்பட்டுள்ளனர்.


எவ்வாறாக இருப்பினும் நள்ளிரவு 12 மணிக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும்


- தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 - வாக்கு எண்ணிக்கை - மாவட்ட வாரியாக, சட்டமன்றத் தொகுதி வாரியாக வாக்குச் சாவடிகள், மேசைகள் மற்றும் மதிப்பிடப்பட்டுள்ள சுற்றுகள்...



>>> Click here to Download Tamil Nadu Assembly Election 2021 - Counting of Votes - District wise Assembly Constituency wise Polling Stations, Tables and Rounds Estimated Details...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DSE Proceedings & User manual to download Manarkeni app by 24.01.2025

 மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & பயனர் கையேடு DSE - Manarkeni App Downloading...