கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

E-EPIC லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
E-EPIC லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Information about e_EPIC



e_EPIC பற்றிய தகவல்


 1. e_EPIC என்பது தேர்தலின் நோக்கத்திற்கான அடையாளச் சான்றாகும்.


2. EPICஐ வைத்திருப்பது வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதற்கு உத்தரவாதம் இல்லை.  ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் தற்போதைய வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைச் சரிபார்க்கவும்.  தயவுசெய்து www.voters.eci.gov.in ஐப் பார்வையிடவும்.


3. இந்த அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பிறந்த தேதி வாக்காளர் பட்டியலில் பதிவு செய்தல் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் வயது அல்லது பிறந்த தேதிக்கான ஆதாரமாக கருதப்படாது.


4. இந்தியாவில் உள்ள எந்தத் தொகுதிக்கும் நீங்கள் வாக்காளர் பட்டியலில் சேரும் வரை eEPIC நாடு முழுவதும் செல்லுபடியாகும்.


5. உண்மையான மற்றும் பாதுகாப்பான QR குறியீடு ரீடர் பயன்பாட்டைப் பயன்படுத்தி eEPIC சரிபார்க்கப்படலாம்.


 6. இது மின்னணு முறையில் உருவாக்கப்பட்ட ஆவணம்.


முதல்முறை இளம் வாக்காளர்கள் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி?



 18 வயது நிரம்பிய, முதல் முறை இளம் வாக்காளர்கள்  சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் முறை வாக்காளர்களுக்கு, ‘இ-எபிக்’ எனப்படும் மின்னணு வாக்காளர் அட்டையை வழங்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.இந்த ‘இ-எபிக்’ மின்னணு வாக்காளர் அட்டை முதல் முறை இளம் வாக்காளர்களுக்கு மட்டுமே முதற்கட்டமாக வழங்கப்படுகிறது. அடுத்தடுத்த கட்டங்களில், அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.’இ-எபிக்’ தேவைப்படும் முதல் முறை இளம் வாக்காளர்கள், தேர்தல் ஆணையத்தின் www.voterportal.eci.gov.in இணையதளத்தில், பதிவு செய்து மொபைல் போன் எண் அல்லது இ-மெயில் ஐடி கொடுத்து உள்நுழைந்து, ‘இ-எபிக்’ டவுன்லோடு செய்து கொள்ளலாம்.மேலும் சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு மார்ச் 13, 14 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் மின்னணு வாக்காளர் அடையாள அட்டைகளை பதிவிறக்கம் செய்வதற்காக சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த முகாம்களில் சிறப்புச் சுருக்க முறை திருத்தம் 2021-ல் பதிவு செய்து கொண்ட இளம் வாக்காளர்கள் சிறப்பு முகாம்களில் தங்களது பதிவு பெற்ற மொபைல் போன் எண்ணைத் தெரிவித்து மின்னணு வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Teachers suffer as online training links are not available - Daily News

 இணையதள பயிற்சி இணைப்பு கிடைக்காதால் ஆசிரியர்கள் தவிப்பு - நாளிதழ் செய்தி  Teachers suffer as online training links are not available - Dail...