கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வாக்குப் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாக்குப் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு - விவிபேட் இயந்திரங்களில் பதிவாகிய ஓட்டுச் சீட்டுகளை கொண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்கு எண்ணும் பணி...




கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி வருகிறது. இத்தொகுதிக்கு உட்பட்ட 81 மற்றும் 224 ஆகிய வாக்குச்சாவடி மையத்திற்கு உட்பட்ட மின்னணு இயந்திரங்கள், கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எண் 151ல் இருந்த மின்னணு இயந்திரம், சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நரசிங்கபுரம், நகராட்சி விநாயகபுரம் வாக்குச்சாவடி மின்னணு இயந்திரம் கோளாறு, கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாவலூர் வாக்குச்சாவடி மின்னணு இயந்திரம் ஆகியவற்றில் கோளாறு காரணமாக எண்ணும் பணியில் சிக்கல் ஏற்பட்டது.இதுகுறித்து வேட்பாளர்களின் முகவர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கோளாறு ஏற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒப்படைத்தனர். பின்னர் அதிகாரிகள் ஆலோசனைக்கு பிறகு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் விவிபேட் இயந்திரத்தில் பதிவாகிய ஓட்டுச் சீட்டுகளை கொண்டு வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன..


Poll Monitoring System - PMS_GELS 2024 App தற்போதைய Update...

  


Poll Monitoring System - PMS_GELS 2024 App தற்போதைய Update...


PMS_GELS 2024 App Download Link...



>>> Click Here to Download PMS_GELS 2024 App...



PMS_GELS 2024 App பயன்படுத்தும் முறை...


Log in Screen ல், Mobile Number என்னும் இடத்தில் உங்களுடைய, தேர்தல் அலுவலகத்தில் பதிவு செய்த Mobile No.ஐ உள்ளீடு செய்யவும்.


Enter Pin என்னும் இடத்தில் உங்கள் Mobile எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களை உள்ளீடு செய்யவும். PMS Appஐ பயன் படுத்தலாம்..




Mock Poll - Control Unit & VVPAT Tally Form...

 


Mock Poll - Control Unit & VVPAT Tally Form...


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தேர்தல் - மாதிரி வாக்குப்பதிவு & வாக்குப்பதிவு தொடங்குதல் - 18 படிநிலைகள் - Checklist...



 தேர்தல் - மாதிரி வாக்குப்பதிவு & வாக்குப்பதிவு தொடங்குதல் - 18 படிநிலைகள் - Checklist...


Elections - Mock Polling & Polling Starting - 18 Steps - Checklist...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


PMS_GELS 2024 App Download Link & பயன்படுத்தும் முறை...

 


Poll Monitoring System - PMS_GELS 2024 App இப்பொழுது  உபயோகத்தில் உள்ளது.


PMS_GELS 2024 App Download Link...



>>> Click Here to Download PMS_GELS 2024 App...



PMS_GELS 2024 App பயன்படுத்தும் முறை...


Log in Screen ல், Mobile Number என்னும் இடத்தில் உங்களுடைய, தேர்தல் அலுவலகத்தில் பதிவு செய்த Mobile No.ஐ உள்ளீடு செய்யவும்.


Enter Pin என்னும் இடத்தில் 1234 என்று உள்ளீடு செய்யவும். PMS Appஐ பயன் படுத்திப் பார்க்கவும்..




திருத்திய மாதிரி வாக்குப்பதிவு படிவம் - நகர்புற உள்ளாட்சி தேர்தல் (Revised Mock Poll Format - Urban Local Body Election)...



>>> திருத்திய மாதிரி வாக்குப்பதிவு படிவம் - நகர்புற உள்ளாட்சி தேர்தல் (Revised Mock Poll Format - Urban Local Body Election)...


>>> மாதிரி வாக்குப்பதிவில் அதிகபட்சம் 30 வாக்குகள் போட வேண்டும் & திருத்திய மாதிரி வாக்குப்பதிவு படிவம் - தேர்தல் ஆணைய சுற்றறிக்கை, நாள்: 18-02-2022...


மாதிரி வாக்குப்பதிவில் அதிகபட்சம் எவ்வளவு வாக்குகள் போட வேண்டும் (Maximum Votes should be Polled in Mock Poll) - தேர்தல் ஆணைய சுற்றறிக்கை (Election Commission Circular), நாள்: 18-02-2022...



>>> மாதிரி வாக்குப்பதிவில் அதிகபட்சம் எவ்வளவு வாக்குகள் போட வேண்டும் (Maximum Votes should be Polled in Mock Poll) - தேர்தல் ஆணைய சுற்றறிக்கை (Election Commission Circular), நாள்: 18-02-2022...


கொரோனா தொற்று பாதுகாப்பு நெறிமுறைகள் காரணமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேரம் மாற்றியமைப்பு(Local Body Election Polling time changed)...

 கொரோனா தொற்று பாதுகாப்பு நெறிமுறைகள் காரணமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேரம் மாற்றியமைப்பு.


காலை 7 முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.


அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை.


10 மணி நேரத்திற்கு பதிலாக 12 மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெறும்.


மாநில தேர்தல் ஆணையம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் தகவல்.



Ballot Unit, Control Unit(EVM) and VVPATல் ஏற்பட வாய்ப்புள்ள தவறுகளும் அவற்றுக்கான தீர்வுகளும்... (Errors and Solutions)...



>>> Ballot Unit, Control Unit(EVM) and VVPATல் ஏற்பட வாய்ப்புள்ள தவறுகளும் அவற்றுக்கான தீர்வுகளும்... (Errors and Solutions)...


தேர்தல் - மாதிரி வாக்குப் பதிவு, Control Unit மற்றும் VVPAT Seal செய்தல் Flow Chart...



>>> Click here to Download  Election - Mock Poll, Control Unit and VVPAT Seal - Flow Chart...


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 - வாக்குப் பதிவு தொடர்பான வினாக்களும், விடைகளும்...

Tamilnadu Legislative Assembly Election 2021 - Voter Registration Questions and Answers ...



 >>> தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 - வாக்குப் பதிவு தொடர்பான வினாக்களும், விடைகளும்...


தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021 - வாக்குப்பதிவு கண்காணிப்பு அமைப்பு - செயலி (App) செயல்படும் வழிமுறைகள்...

 Mobile App for Poll turn out monitoring system 9170-2021-1


வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் மற்றும் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச் சாவடி தலைமை அலுவலர் (Presiding Officer) பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டிய செயலி குறித்த தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் கடிதம் மற்றும் செயலி செயல்படும் வழிமுறைகள் PowerPoint Presentations...


>>> தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021 -வாக்குப்பதிவு கண்காணிப்பு அமைப்பு - செயலி செயல்படும் வழிமுறைகள் (ஒவ்வொரு படிநிலையாக)...


தேர்தல் பணிக்கு செல்பவர்களுக்கு சில முக்கிய குறிப்புகள்...

Presiding Officers (PrOs) Duty:


1-Pro dairy


2-Form 17 C.


3- 16 points observer report  sheet.


4- visitor sheet.


5- pledge commencement of poll and after close the poll.


 6- Mock poll certificate.  மேற்கண்ட ஆறு படிவங்களை மிகவும் கவனமாக Pro பூர்த்தி செய்யவும்.




Polling Officer (PO) 1 duty . 


 1- elector identify is very important.


2.Marked copy of electoral roll . ஆண்வாக்காளராக இருந்தால் வரிசை எண்ணை நீல மை பேனாவால்  வட்டமிடவேண்டும். பெயரை அடிகோடிடவேண்டும் 

3-பெண் வாக்காளராக இருந்தால் சிகப்பு மை பேனாவால் வரிசை எண்ணை மட்டும் சுழிக்க வேண்டும்              



Polling Officer (PO) 2 duty . 


1- 17-A register. வாக்காளரின் வரிசை எண்ணை குறித்து 

2-அடுத்த கட்டத்தில் Ep என்று எழுதி கடைசி நான்கு நம்பரை குறிக்க வேண்டும்


3 வாக்காளரிடம் கையொப்பம் பெறவேண்டும்


4- Voter slip. வரிசை எண்ணை குறித்து.வாக்காளரின் இடது கை  ஆள் காட்டி விரலில் அழியா மை இடவேண்டும். Voter slip யை வாக்காளரிடம் கொடுக்கவும்.       


Polling Officer (PO) 3 duty . 


 வாக்காளர் கொண்டுவரும் Voter slip யை பெற்றுக்கொண்டு Control unit. உள்ள Ballot பட்டனை அழுத்தவும்.


GENERAL INSTRUCTIONS...


    49 0 என்றால் வாக்காளர் கையில் மை வைத்தபிறகு யாருக்கும் வாக்களிமாட்டேன் என்று வாக்காளர் அறிவித்தால் வாக்காளரின்  பெயருக்கு  நேரில் உள்ள Remarks காலத்தில் 49 -0 என்று குறிப்பிடவேண்டும்   refused the Vote என்று எழுத வேண்டும்.              *49-M என்றால் வாக்களருக்கு மை வைத்தபிறகு Before  enterd the vote he declared the symbol or candidate name சொன்னால் அந்தவாக்காளரை வாக்கு பதிவு எந்திரத்தில் வாக்களிக்க Pro அனுமதிக்ககூடாது. இந்நேர்வில் 17-A register ல் வாக்காளர் கையொப்பம் அடுத்து Remarks காலத்தில் 49-M என்று குறிப்பிடவேண்டும்.


 49 MA என்றால் வாக்காளர்வாக்களித்தபின் அந்த வாக்காளர் நான் வாக்களித்த Symbol பதிலாக Vvpat ல் வேறு ஒரு Symbol பதிவாகிறது என்று  தெரிவித்தாள் இந்நேர்வில் Pro அந்த வாக்காளரிடம் இதுவரை வாக்களித்தவர்கள் யாரும் இவ்வாறு தெரிவிக்கவில்லை நீங்கள் மட்டுமே  தெரிவிக்கீரீர்கள் நான் உங்களுக்கு மறுபடியும் Testng vote வழங்குகிறேன் அதற்கு முன்பு நீங்க தெரிவித்த கருத்து தவறாக இருந்தால் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று எச்சரித்து உள்ளே இருக்கும் Polling agent மற்றும்  வெளியே இருக்கும் காவல்துறை சார்ந்தவரை உள்ளே அழைத்து அந்த நபரை மீண்டும் வாக்களிக்க செய்யவேண்டும் இந்நேர்வில் 17-A registerல் மீண்டும் அந்த நபரின் வரிசை எண் Epic எண் குறித்து கையொப்பம் பெறவேண்டு Remarks காலத்தில் Testing vote என்று குறிப்பிடவேண்டும் இதற்கு முன்பாக Pro 49 MA படிவத்தில் அவருடைய பெயர் த/பெ. மற்றும் Part no,serial no, serial no in 17 A register of voters.குறித்து அந்த வாக்காளரிடம் கையொப்பம் பெறவேண்டும்.மறு வாக்கு பதிவின் போது வாக்காளர் தெரிவித்தது நிருபனம் ஆகவில்லை எனில் அவரை உடனடியாக. காவல்துறையிடம் ஒப்படைக்கவேண்டும்


1.Tendered votes ஆய்வுக்குரிய வாக்குகள்


2.Challenged votes எதிர்க்கப்பட்ட வாக்குகள்


3.Test votes


4.proxy votes


மேற்கண்ட நிகழ்வுகள் Maximum நடக்கவாய்ப்பில்லை இருந்த போதிலும் ELECTION RULES தெரிந்து  வைத்திருப்பது நமக்கு மிகவும் அவசியம். 

 

குறிப்பு


தேர்தல் முடிந்தவுடன் CONTROL UNIT OFF செய்யவேண்டும். VVPAT ல் BATTERY ஐ கழற்றி விட வேண்டும். மறவாதீர்கள்


எவ்வித மனக்கசப்புக்கும் ஆளாகாமல் குழு ஒற்றுமையுடன் தேர்தல் பணி புரிவோம். தேர்தல் பணியை 100% எவ்வித இடையூறுமின்றி செய்வோம்

மாதிரி வாக்குப் பதிவு குறித்த நடைமுறைகள்...


 >>> மாதிரி வாக்குப் பதிவு குறித்த நடைமுறைகள் (Mock Poll Instructions)...


வாக்குப் பதிவு நாளன்று வாக்குச் சாவடி தலைமை அலுவலர் மற்றும் பிற வாக்குப்பதிவு அலுவலர்களின் கடமைகள்...

 Duties of Presiding Officer and other Polling Officers on Polling Day...


>>> வாக்குப் பதிவு நாளன்று வாக்குச் சாவடி தலைமை அலுவலர் மற்றும் பிற வாக்குப்பதிவு அலுவலர்களின் கடமைகள்...


தமிழ்நாடு சட்டசபைக்கான பொதுத் தேர்தல், 2021 - வாக்காளர் அடையாள அட்டை (EPIC) இல்லாத வாக்காளர்களுக்கான இதர அடையாள ஆவணங்கள்...

 >>> தமிழ்நாடு சட்டசபைக்கான பொதுத் தேர்தல், 2021 - வாக்காளர் அடையாள அட்டை (EPIC) இல்லாத வாக்காளர்களுக்கான இதர அடையாள ஆவணங்கள் - செய்தி வெளியீடு எண்(P.R.No.): 186, நாள்: 11-03-2021...


வாக்காளரின் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணங்கள் எவை? தேர்தல் ஆணையம் விளக்கம்...

What are the documents confirming the identity of the voter? - Election Commission...



ஓட்டு போடும்போது வாக்குச்சாவடியில் வாக்காளரின் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணங்கள் எவை? என்பது பற்றி தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. புகைப்பட அடையாள அட்டை இதுகுறித்து சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- 

 நடைபெறவுள்ள சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும், அவர்கள் வாக்களிப்பதற்கு முன்பு, வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்கவேண்டும். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக, பின்வரும் மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பிக்க வேண்டும். 


மாற்று ஆவணங்கள் எவை? 

  1. கடவுச்சீட்டு,
  2. ஓட்டுனர் உரிமம், 
  3. மத்திய அல்லது மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் அல்லது வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், 
  4. புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்கு புத்தகங்கள், 
  5. வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை, 
  6. தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, 
  7. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, 
  8. தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, 
  9. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், 
  10. நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் அல்லது சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை, 
  11. ஆதார் கார்டு ஆகியவை ஆகும். 

 

தகவல் சீட்டு ஆவணம் அல்ல 

 வாக்காளர்களுக்கு புகைப்படம் இல்லாத வாக்காளர் தகவல் சீட்டை அளிக்க தேர்தல் ஆணையம் முன்வந்துள்ளது. வாக்குப்பதிவுக்கு குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு முன்பு இந்த சீட்டு ஒவ்வொரு வாக்காளருக்கும் தரப்படும். ஆனால் வாக்களிக்க வரும்போது, இதை தனித்த அடையாள ஆவணமாக காட்ட முடியாது. இந்தச் சீட்டை வாக்காளரின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான ஆவணமாக வாக்குச் சாவடியில் ஏற்க முடியாது. 


பட்டியலில் பெயர் 

ஒரு வாக்காளர் வேறொரு சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருப்பாரேயானால் அந்த அடையாள அட்டையையும் இந்திய தேர்தல் ஆணையம் காட்டும் ஆவணமாகப் பயன்படுத்தலாம். ஆனால் அந்த வாக்காளருடைய பெயர் அந்த வாக்குச்சாவடிக்குரிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். 


 வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது இந்திய தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட மேற்கூறிய எந்த ஒரு அடையாள ஆவணம் வைத்திருப்பதால் மட்டுமே ஒரு வாக்காளர் தனது வாக்கைச் செலுத்தி விட முடியாது. அவருடைய பெயர் வாக்குச்சாவடிக்கு அனுப்பப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் மட்டுமே அவர் வாக்குரிமையைச் செலுத்த தகுதியுடையவர் ஆவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

21-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம்: குடிமை கு...