கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Property Tax லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Property Tax லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

01.10.2024 முதல் சொத்து வரி (Property Tax) 6% உயர்வு...



01.10.2024 முதல் சொத்து வரியை தமிழ்நாடு அரசு (Property Tax) 6% உயர்த்தியுள்ளது என தகவல்...


 வரும் 2025 - 26ம் நிதியாண்டில், சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்த, தமிழ்நாடு அரசிடம் நகராட்சி நிர்வாகத்துறை அனுமதி கேட்டு உள்ளது.


சென்னை மாநகராட்சியின் பிரதான பகுதிகளில், 1998லும்; சென்னை மாநகராட்சி விரிவாக்க பகுதிகள் மற்றும் பிற மாநகராட்சிகளில், 2008லும் சொத்து வரி உயர்த்தப்பட்டது.



மத்திய அரசு அறிவுறுத்தல்


மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15வது நிதி ஆணைய பரிந்துரைப்படி உள்ளாட்சி அமைப்புகளில், உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்த அறிவுறுத்தப்பட்டது.


அதன்படி, 2022 - 23ம் நிதியாண்டில், உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டது. அப்போது, 600 சதுரடிக்கு குறைவான குடியிருப்புகளுக்கு, 25 சதவீதமும்; 601 - 1,200 சதுரடி வரை என்றால், 50 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டது.


மேலும், 1,201 - 1,800 சதுரடி குடியிருப்பு கட்டடங்களுக்கு, 75 சதவீதமும்; 1,800 சதுரடிக்கு மேலாக இருந்தால், 100 சதவீதமும் சொத்து வரி உயர்ந்தது. அதேபோல, வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு, 100 சதவீதமும்; தொழிற்சாலை, கல்வி நிலைய பயன்பாட்டு கட்டடங்களுக்கு, 75 சதவீதமும் உயர்த்தப்பட்டது.


சென்னை மாநகராட்சியில் பிரதான பகுதிகளில், வணிக பயன்பாட்டுக்கு, 150 சதவீதமும்; தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய கட்டடங்களுக்கு, 100 சதவீதமும் உயர்த்தப்பட்டது. சொத்து வரி உயர்வுக்காக வெளியிடப்பட்ட அரசாணையில், 15வது நிதி ஆணைய பரிந்துரைப்படி, ஒவ்வொரு ஆண்டும் சொத்து வரி உயர்த்தப்படும் என, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.


சென்னை, திருநெல்வேலி, துாத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட மக்கள் கடந்த 2023ல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். அதனால், 2024 - 25ம் நிதியாண்டில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், 2025 - 26ம் நிதியாண்டில் சொத்து வரியை, 6 சதவீதம் உயர்த்த, நகராட்சி நிர்வாகத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.


இருப்பினும், 2025ல் உள்ளாட்சி தேர்தல்; 2026ல் சட்டசபை தேர்தல் உள்ளிட்டவை வர உள்ளதால், சொத்து வரி உயர்வால், ஆளுங்கட்சிக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.


ரூ.110 கோடி கூடுதல் வருவாய்நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், ஒவ்வொரு நிதியாண்டிலும் சொத்து வரி உயர்த்தப்படும் என, அரசாணை வெளியிடப்பட்டது. கடந்தாண்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால், சொத்து வரியை உயர்த்த அரசு அனுமதிக்கவில்லை.


நிதி பற்றாக்குறை போன்ற காரணங்களால், வரும் நிதியாண்டில் சொத்து வரியை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சொத்து வரி 6 சதவீதம் உயர்த்தப்படும். சொத்து வரி உயர்வு அரசின் கொள்கை முடிவை சார்ந்தது என்பதால், அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது.


அரசு அனுமதி அளித்தால் சென்னை மாநகராட்சிக்கு, ஆண்டுக்கு 110 கோடி ரூபாய்க்கு மேல் கூடுதல் வருவாய் கிடைக்கும். இதேபோல, மற்ற உள்ளாட்சிகளிலும், உட்கட்டமைப்பு வசதிக்கான கூடுதல் வருவாய் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


இந்நிலையில் 2025-26-ஆம் நிதியாண்டில் சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்த நகராட்சி நிர்வாகத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.


இடம், கட்டிடத்தின் அளவை பொறுத்து மக்களுக்கான சொத்து வரியில் வித்தியாசம் இருக்கும்.


மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15-வது நிதி ஆணைய பரிந்துரைப்படி உள்ளாட்சி அமைப்புகளில், உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்துவரி விகிதத்தை உயர்த்த அறிவுறுத்தியது. அந்த வகையில், தமிழகத்தில் 2022-ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டது. அப்போது, 600 சதுர அடிக்கு குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25 சதவீதம் உயர்த்தப்பட்டது.


இதேபோல, 601 முதல் 1,200 சதுர அடி வரை பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதமும், 1,201 முதல் 1,800 சதுர அடி குடியிருப்பு கட்டிடங்களுக்கு, 75 சதவீதமும் 1,800 சதுர அடிக்கு மேலாக இருந்தால் 100 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டது. வணிக பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், தொழிற்சாலை, கல்வி நிலைய பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 75 சதவீதமும் உயர்த்தப்பட்டது.



இதில், சென்னை மாநகராட்சியில் பிரதான பகுதிகளில் 600 சதுர அடிக்கு குறைவான கட்டிடங்களுக்கு 50 சதவீதம், 2011-ம் ஆண்டு சென்னையோடு இணைக்கப்பட்ட பகுதியாக இருந்தால் 25 சதவீதமும் உயர்த்தப்பட்டது. 600 முதல் 1,200 சதுர அடி பரப்பளவு குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதம், 1,201 முதல் 1,800 சதுர அடி பரப்பளவுக்கு 100 சதவீதம், 1,801 சதுரடிக்கு மேல் 150 சதவீதம் உயர்த்தப்பட்டது.


உயர்த்தப்பட்ட இந்த சொத்துவரி சொத்துகளின் அளவு மற்றும் மண்டலங்களைப் பொறுத்து வேறுபட்டது. 2025- 26-ம் நிதியாண்டில் சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்த நகராட்சி நிர்வாகத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.



இந்த நிலையில், சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட அலுவலக கூட்டரங்கில், செப்டம்பர் மாதத்துக்கான மாதாந்திர மன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடந்தது. கூட்டத்தில், சென்னை மாநகராட்சியில் 6 சதவீதம் சொத்து வரியை உயர்த்துவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சொத்து வரி உயர்வு என்பது சொத்துகளின் அளவு மற்றும் மண்டலங்களை பொறுத்து வேறுபட்டு காணப்படும்.


குறிப்பாக, இடம், கட்டிடத்தின் அளவை பொறுத்து மக்களுக்கான சொத்து வரியில் வித்தியாசம் இருக்கும். சென்னை மாநகராட்சியில் 6 மாதத்துக்கு ஒரு முறை சொத்துவரி வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில், 2025-26-ம் ஆண்டுக்கான சொத்துவரி அடுத்த மாதம் முதல் கணக்கீடு செய்யப்படும். எனவே, இந்த உயர்த்தப்பட்ட சொத்து வரி உயர்வு அக்டோபர் 1-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


சொத்துவரி பெயர் மாற்ற கட்டணம் உயர்வு...

 


சொத்துவரி பெயர் மாற்ற கட்டணம் உயர்வு - Property tax name change fee increase...


வீடு வாங்கியவர்கள், அதற்கான சொத்து வரியில் பெயர் மாற்றம் செய்வதற்கான கட்டணம், 20,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.


தமிழகத்தில், பல ஆண்டுகளாக சொத்து வரி உயர்த்தப்படாமல் இருந்தது. 2022 ஏப்ரல் 1ல் சொத்து வரி, 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. அதன் அடிப்படையில், மற்ற கட்டணங்களும் உயர்ந்து வருகின்றன.


இதில், சொத்து வரி அடிப்படையில், வீடுகளுக்கான திடக்கழிவு மேலாண்மை கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், சொத்து வரி பெயர் மாற்ற கட்டணத்தையும், உள்ளாட்சி அமைப்புகள் ஓசையின்றி உயர்த்தி வருகின்றன.


நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில், சொத்து வரி பெயர் மாற்ற, 500 முதல் 1,500 ரூபாய் வரை என்ற, நிலையான கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த கட்டணம் தற்போது மாற்றப்பட்டுள்ளது.


இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது. சென்னை தவிர்த்து பிற மாநகராட்சிகளில், சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய, சொத்தின் மதிப்பு 5 லட்சம் ரூபாய் வரை என்றால், 1,000 ரூபாய்; 10 லட்சம் ரூபாய் வரை என்றால், 3,000 ரூபாய், 20 லட்சம் ரூபாய் வரை என்றால், 5,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


மேலும், சொத்தின் மதிப்பு, 50 லட்சம் ரூபாய் வரை என்றால், 10,000 ரூபாய்; ஒரு கோடி ரூபாய் என்றால், 20,000 ரூபாய் வரை கட்டணம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதற்கு மேல் சொத்து மதிப்பு இருந்தால், பெயர் மாற்ற ஒவ்வொரு ஒரு கோடிக்கும், 20,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.


மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்கள், மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி இந்த கட்டணங்களை நிர்ணயிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடாமல், உள்ளாட்சி அமைப்புகள் இந்த கட்டண உயர்வை அமல்படுத்தி வருவதால், சொத்து வரி பெயர் மாற்றத்துக்கு செல்லும் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...