கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Quarterly Exam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Quarterly Exam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திருத்திய விடைத்தாட்களை ஆய்வு செய்ய கண்காணிப்புக் குழு அமைப்பு - மாவட்ட ஆட்சியர் உத்தரவு...

 

காலாண்டுத் தேர்வு - திருத்திய விடைத்தாட்களை ஆய்வு செய்ய கண்காணிப்புக் குழு அமைப்பு - மாவட்ட ஆட்சியர் உத்தரவு - முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்...


Quarterly Examination - Formation of Monitoring Committee to Scrutinize Revised Answer Sheets - District Collector Order - CEO Proceedings...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



காலாண்டுத் தேர்வு திருத்தப்பட்ட விடைத்தாள்களை ஆய்வு செய்யவேண்டும்: பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்...


காலாண்டுத் தேர்வுக்கான திருத்தப்பட்ட விடைத்தாள்களை கண்காணிப்புக் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.


தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான (காலாண்டுத் தேர்வுகள்) முதல் பருவத் தேர்வுகள் கடந்த செப்டம்பர் 19ல் துவங்கி 27ம் தேதி வரை நடைபெற்றது. 


தொடர்ந்து மாணவர்களுக்கு செப்டம்பர் 28ம் தேதி முதல் அக்டோபர் 6ம் தேதி வரை தொடர் விடுமுறை வழங்கப்பட்டது. 


இந்த விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் அக்டோபர் 7ம் தேதி முதல் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.


இந்நிலையில் காலாண்டுத் தேர்வுக்கான திருத்தப்பட்ட விடைத் தாள்களை கண்காணிப்புக் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் வாயிலாக பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் விவரம்;


 "காலாண்டுத் தேர்வுகளின் விடைத்தாள்களை திருத்தங்கள் மேற்கொண்டு பள்ளிகள் திறப்பின் போது மாணவர்களுக்கு வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.


 தற்போது காலாண்டுத் தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.


இந்த குழுவினர் பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கையை வழங்க வேண்டும். அதன் விவரங்களை மாவட்ட அளவில் தொகுத்து இயக்குநரகத்துக்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அனுப்ப வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Quarterly Examinations - Middle Schools - Class 6 - 8 - Question Papers & Answer Key Download Schedule...

 

 

தொடக்கக்கல்வித்துறை - முதல் பருவத் தேர்வு 2024-2025...


Quarterly Examinations - Middle Schools - Class 6 - 8 - Question Papers & Answer Key Download Schedule...


காலாண்டுத் தேர்வுகள் - நடுநிலைப் பள்ளிகள் - 6 - 8ஆம் வகுப்புகள் - வினாத்தாள்கள் & விடைக்குறிப்புகள் பதிவிறக்கக் கால அட்டவணை...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Dear team, 


Tomorrow (20.09.2024) Tamil exam's question paper is available for download from today morning 9.00 am.


6th to 8th STD Quarterly exam QP download from today 9 am itself. please inform the schools immediately all GOVT  and aided middle schools...



Dear team,

*Important: Quarterly Exam Question Paper Download -Regarding*


As per the Directorate of Elementary Education circular, quarterly exam question papers for classes 6-8 in *government and aided middle schools will be available for download on exam.tnschools.gov.in*. 


Download schedule:

- Availability: 9:00 am (previous day) to 1:00 pm (exam day)

Please find the attached download schedule and instruct schools to:

1. Download question papers and answer keys within the specified timeframe.

Kindly Ensure timely download to facilitate smooth examination proceedings.


பள்ளிக்‌ கல்வி - 2024-2025 ஆம்‌ கல்வியாண்டு - 6 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத்‌ தேர்வு கால அட்டவணை அனுப்புதல்‌ - சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இயக்குநர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌.048688/எம்‌1/இ1/2024, நாள்‌. 09-09-2024...

 

 

பள்ளிக்‌ கல்வி - 2024-2025 ஆம்‌ கல்வியாண்டு - 6 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத்‌ தேர்வு கால அட்டவணை அனுப்புதல்‌ - சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இயக்குநர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌.048688/எம்‌1/இ1/2024, நாள்‌. 09-09-2024...


School Education - Academic Year 2024-2025 - Quarterly Examination Time Table for Class 6 to 12 Students - Proceedings of Director of School Education, Tamil Nadu, RC.No.048688/M1/E1/2024, dt. 09-09-2024...



தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இயக்குநர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌, சென்னை-6

ந.க.எண்‌.048688/எம்‌1/இ1/2024, நாள்‌. 09-09-2024

பொருள்‌: பள்ளிக்‌ கல்வி - 2024-2025 ஆம்‌ கல்வியாண்டு - 6 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத்‌ தேர்வு கால அட்டவணை அனுப்புதல்‌ - சார்ந்து

அரசு / அரசு உதவி பெறும்‌/ தனியார்‌ பள்ளிகளுக்கு 6 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத்‌ தேர்வு கால அட்டவணை இத்துடன்‌ இணைத்து அனுப்பப்படுகிறது. அனைத்து வகை உயர்நிலை/ மேல்நிலைப்‌ பள்ளித்‌ தலைமையாசிரியர்கள்‌ மற்றும்‌ முதல்வர்களுக்கு தெரிவிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

இணைப்பு: காலாண்டுத்‌ தேர்வுகால அட்டவணை 

பெறுநர்‌:

1. இயக்குநர்‌, தனியார்‌ பள்ளிகள்‌

2. அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌

3. அனைத்து மாவட்ட கல்விக்‌ அலுவலர்கள்‌ (இடைநிலை மற்றும்‌ தனியார்‌ )

நகல்‌:

1. தொடக்கக்‌ கல்வி இயக்குநர்‌ தகவலுக்காகக்‌ அனுப்பப்படுகிறது

2. இயக்குநர்‌, அரசு தேர்வுகள்‌ இயக்ககம்‌ தகவலுக்காகக்‌ அனுப்பப்படுகிறது



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை காலாண்டுத் தேர்வை அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுத் தேர்வாக (Common Quarterly Exam) நடத்த மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் கடிதம் - இணைப்பு: 📌 தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 📌 காலாண்டு தேர்வு கால அட்டவணை ( Quarterly Exam TimeTable) 📌 வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் (Proceedings letter from the State Project Director for conducting the Quarterly Examination for Class 6 to Class 12 as Common Quarterly Exam for all districts... Attachments: 📌 Proceedings of Director of Elementary Education... 📌 Quarterly Exam Time Table... 📌 Procedure to Download Question Paper)...

 

6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை காலாண்டுத் தேர்வை அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுத் தேர்வாக (Common Quarterly Exam) நடத்த மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் கடிதம்...

இணைப்பு

📌 தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

📌  காலாண்டு தேர்வு கால அட்டவணை ( Quarterly Exam TimeTable)...

📌 வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்...


>>> Click Here to Download SPD Proceedings & Quarterly Exam Timetable & Procedure to Download Question Paper...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DSE Proceedings & User manual to download Manarkeni app by 24.01.2025

 மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & பயனர் கையேடு DSE - Manarkeni App Downloading...