கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படும் ஹேண்ட் சானிடைசர் குழந்தைகளின் கண்களில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல கோடி பேரின் உயிர்களை பறித்துவிட்டது. இன்னும் பல கோடி மக்கள் கொரோனா பிடியில் இருந்து மீண்டுவரவில்லை. இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், அறிமுகப்படுத்தப்பட்டதுதான் சானிடைசர்.
இதனை பயன்படுத்துவதன் மூலம் கொரோனா வைரஸ் அழிந்துவிடுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதனையடுத்து, சானிடைசருக்கு உலகம் முழுவதும் மவுசு கூடியது. இன்று சானிடைசர் பயன்படுத்தாத நபர்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சானிடைசர் குழந்தைகள் கண்களை மிகவும் பாதிப்பதாக இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக, பிரான்சில் ஜமா கண் மருத்துவ இதழில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், குழந்தைகளுக்கு உருவாகியுள்ள இந்த புதிய ஆபத்து குறித்து விளக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் வரை 232 வழக்குகள் இது தொடர்பாக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய இடங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் போது சானிடைசர் பயன்படுத்தும் குழந்தைகள் அதனை தெரியாமல், தங்களது கண்களில் தொட்டுவிட்டுவதால், கண்களில் விஷத்தன்மை பாய்ந்து விடுகிறது. இதனால், நூற்றுக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எனவே, சானிட்டைசர்களை பயன்படுத்தும்போது குழந்தைகள் மட்டும் அல்ல பெரியவர்களும் கூட எச்சரிக்கையாக இருக்கவேண்டியது மிக முக்கியமானது என்கின்றனர் மருத்த ஆய்வாளர்கள்.