கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Schools Merge லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Schools Merge லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை, பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்கும் நடவடிக்கை எதையும் அரசு மேற்கொள்ளவில்லை - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 1276, நாள் : 23-08-2024...



கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளைப் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்கும் நடவடிக்கை எதையும் அரசு மேற்கொள்ளவில்லை – பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விளக்கம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 1276, நாள் : 23-08-2024...



>>>  தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 1276, நாள் : 23-08-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


குறைவான மாணவர்கள் படிக்கும் பள்ளிகளை மூட மாட்டோம் - தொடக்கக்கல்வி இயக்குநர் விளக்கம்...

 

குறைவான மாணவர்கள் படிக்கும் பள்ளிகளை மூட மாட்டோம் - தொடக்கக்கல்வி இயக்குநர் விளக்கம்...

 


மாணவர்கள் எண்ணிக்கை குறைவான பள்ளிகளை, தற்போது மூடும் திட்டம் இல்லை' என, பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது. மாவட்ட அதிகாரிகள் அதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


தமிழகம் முழுதும், அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட, குறைவாக மாணவர்கள் உள்ள பள்ளிகளை மூட, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டிருந்தது.


மாவட்ட வாரியாக இதற்கான பட்டியல் சேகரிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதற்கட்டமாக, 32 பள்ளிகளை மூடி விட்டு, அங்கு படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள வேறு பள்ளிகளில் சேர்க்க முடிவானது.


இதுகுறித்து  நேற்று விரிவான செய்தி வெளியானது. இந்நிலையில், பள்ளிகளை மூடும் முடிவை பள்ளிக்கல்வித்துறை கைவிட்டு உள்ளது.



இதுதொடர்பாக, தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:


அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க, இந்த ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல், மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டுள்ளது.


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், நேற்று வரை, 2.19 லட்சம் பேர் புதிதாக சேர்ந்துள்ளனர். ஒன்றாம் வகுப்பில் மட்டும், 1.88 லட்சம் பேர் சேர்ந்து உள்ளனர்.


இதுமட்டுமின்றி, அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த, வரும் கல்வி ஆண்டில், 20,000 தொடக்க பள்ளிகளில் திறன் வகுப்பறைகளும், 8,000 அரசு நடுநிலை பள்ளிகளில் ஹைடெக் ஆய்வகங்களும் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மேலும், 80,000 ஆசிரியர்களுக்கு நவீன வழியில் பாடம் நடத்த, 'டேப்' என்ற கையடக்க கணினி வழங்கப்பட உள்ளது.


மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது.


இந்நிலையில், சில மாவட்டங்களில் மாணவர் எண்ணிக்கை குறைவான, அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளை மூட, மாவட்ட கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துஉள்ளதாக, தகவல்கள் வந்துள்ளன.


தற்போதைய நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க மட்டுமே திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிகளை மூடும் திட்டம் ஏதும் இல்லை. இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் எச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இவ்வாறு அவர் கூறினார்.


மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள தொடக்க / நடுநிலைப்பள்ளிகள், அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைப்பு...



மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள தொடக்க / நடுநிலைப்பள்ளிகள், அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைப்பு...


வரும் கல்வியாண்டு முதல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவர்கள் குறைவாக உள்ளதால் வேறு பள்ளியுடன் இணைக்கப்படுகிறது...


தொடக்கப்பள்ளி மாணவர்கள் மொத்த எண்ணிக்கை 15 வரையும், நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் 64 வரை உள்ள பள்ளிகள் இணைக்கப்பட்டுள்ளது...


* தொடக்கப் பள்ளி = 15+1= 16 (10%of RTE ACT)

* நடுநிலைப் பள்ளி = 64+1=65 (25% OF RTE ACT)

மாணவர்கள் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


🌻 மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள, அரசு பள்ளிகளை மூட பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 32 பள்ளிகள் மூடப்பட உள்ளன.            


🌻தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், மார்ச் 1 முதல், மாணவர் சேர்க்கை பணி துவங்கப்பட்டுள்ளது.             


🌻அதேநேரம், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி நிர்ணயம் செய்யப்பட்டுள்ள, குறைந்தபட்ச அளவை விட குறைவான மாணவர்கள் எண்ணிக்கை உடைய பள்ளிகளை மூட, அரசு முடிவு செய்துள்ளது.       


🌻அதாவது, கல்வி உரிமை சட்டத்தின்படி, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, தலா, 30 மாணவர்; ஆறு முதல் எட்டு வரை தலா, 35; ஒன்பது மற்றும் 10ம் வகுப்புக்கு தலா, 40 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் தலா, 50 மாணவர்கள் குறைந்தபட்சம் இருக்க வேண்டும்.       


🌻இதன்படி, தமிழகம் முழுதும் மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ள பள்ளிகளை மூட, தமிழக பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.           


🌻முதற்கட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 31 தொடக்கப் பள்ளிகளும், ஒரு நடுநிலைப்பள்ளியும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.                



🌻இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியரை அருகில் உள்ள பிற அரசு பள்ளிகளில் சேர்க்க, கல்வித்துறை இயக்குனர்கள் உத்தரவிட்டுள்ளனர்.            



🌻         இந்த பட்டியலில், உளுந்துார் பேட்டை ஒன்றியத்தில் உள்ள எலவனாசூர் ஊராட்சி பள்ளியில், மொத்தம் உள்ள ஐந்து வகுப்புகளில், ஒன்றாம் வகுப்பில் மட்டும் ஒரே ஒரு மாணவி படிப்பது தெரியவந்துள்ளது.                 


🌻 அதே ஊரில் உள்ள இன்னொரு பள்ளியில், 1,3,4,5 வகுப்புகளில், தலா ஒரு மாணவர் படிப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ரிஷிவந்தியம் ரெட்டியார் பாளையம் ஊராட்சி பள்ளியில், மூன்று பேர் மட்டும் படிப்பது கண்டறியப்பட்டுள்ளது.          



🌻இந்த பள்ளிகளின் மாணவ - மாணவியரை, அருகில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. 13 ஆசிரியர்கள், 23 தலைமை ஆசிரியர்கள், மாணவர் விகிதத்தை விட உபரியாக உள்ளனர். அவர்களையும் இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...