கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மின்சார சிக்கனம், தேவை எக்கணமும்....

தமிழகத்திற்கு முன்னுரிமை அளித்து, தேசிய மின்தொடருடன் இணைக்க வேண்டும். அதனால் காற்றாலை மின்சாரம் முழுவதும் பயன்படுத்தப்படும். இதற்கு, மத்திய அரசின் பசுமை எரிசக்தி நிதி அதிக அளவில் பயன்படுத்தப்பட, முதற்கட்டமாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில், 7,000 மெகாவாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் நிறுவப் பட்டு உள்ளன. ஆனால், காற்றாலை மின் உற்பத்தி அதிகமுள்ள காலத்தில், தமிழக மின்சார கட்டமைப்பு மூலம், அனைத்து மின்சாரத்தையும் வெளிக்கொண்டு வரவும், பயன்படுத்தவும் முடியாத அளவுக்கு, தொழில்நுட்ப பிரச்னைகள் உள்ளன.
காற்றாலை பிரச்னை: மின்தொடரின் திறன் அளவை கட்டுக்குள் கொண்டு வர, பல நேரங்களில் அதிகப்படியான காற்றாலை உற்பத்தியை, அவ்வப்போது நிறுத்தி வைக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், காற்றாலை மின்சாரம் அதிகமாகும் நேரத்தில், அது நிலையில்லாததாக கருதப்பட்டு, வெளிமாநிலங்களால், இலவசமாக எடுத்து கொள்ளப்படுகிறது. இந்த மின்சாரத்திற்கும் சேர்த்து, தமிழக மின்வாரியம், காற்றாலை அதிபர்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தேசிய தொடர் இணைப்பு: இதை சரிசெய்வதற்கான காரணம் குறித்து, காற்றாலை அதிபர்கள் சங்க தலைவர் கஸ்தூரி ரங்கய்யன் கூறியதாவது: தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளிமாநிலத்திற்கு விற்க முடியாத அளவுக்கு, பிரிவு 11ன் கீழ் தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்ததடையால், காற்றாலையோ அல்லது மற்ற மின் நிலையத்தினரோ, அதிகப்படியான மின்சாரத்தை வெளிமாநிலத்திற்கு விற்க முடிவதில்லை. மேலும், தேசிய மின்தொடருடன், தெற்கு மண்டல மின்தொடரையும் இணைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
மத்திய அரசுக்கு பரிந்துரை: இதுகுறித்து, தமிழக மின்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தெற்கு மண்டல மின்தொடர், கடும் இட நெருக்கடியில் உள்ளது. எனவே, தெற்கு மண்டல மின்தொடரை, தேசிய மின்தொடருடன் இணைக்கும் திட்டத்தை விரைந்து முடிக்குமாறு, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். இதற்கான நடவடிக்கையில், பவர் கிரிட் நிறுவனம் காலம் தாழ்த்தி வருகிறது. இதற்கிடையில், மரபுசாரா  எரிசக்தி துறையை ஊக்குவிக்க, மத்திய அரசின் பசுமை எரிசக்தி நிதியை பயன்படுத்தி, உள்கட்டமைப்பு ஏற்படுத்த முடிவு செய்யப் பட்டு உள்ளது. தமிழகத்தில் தான், அதிக அளவில் காற்றாலை மின் உற்பத்தியாவதால், தமிழகத்திற்கு முன்னுரிமை அளிக்கும்படி, மத்திய மின்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். இதற்கு, மத்திய மின்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் தெற்கு மண்டல மின்சார கமிட்டியும் ஒப்புதல் அளித்து, மின்சார கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டு உள்ளது; மத்திய அரசுக்கும் பரிந்துரைக்கப் பட்டு உள்ளது. விரைவில் தேசிய மின்தொடர் இணைப்புக்கான பணிகள் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
பயன் என்ன: தேசிய மின்தொடருடன் தமிழகம் இணையும் பட்சத்தில், பல்வேறு மாநிலங்களிலிருந்து குறைந்த விலைக்கு மின்சாரம் வாங்க முடியும். தமிழகத்தில் காற்றாலை மின்சாரம் அதிகமாகும்போது, பரஸ்பர ஒப்பந்த அடிப்படையில் மற்ற மாநிலங்களுக்கு காற்றாலை மின்சாரத்தை கொடுத்து, தமிழகத்தில், மின் தட்டுப்பாடுள்ள நேரத்தில் மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும்.
நன்றி-தினமலர்

>>> கண்ணீரை வர வைக்கும் காவிரி தண்ணீர்

காவிரியில் தண்ணீர் வந்தாலும், வராவிட்டாலும், தமிழகத்தில் முப்போகம் விளைந்தாலும், கர்நாடக மாநிலத்தவர்களே அதிக பலனை அனுபவித்து வருகின்றனர். இதேபோல, ஆந்திரா, கேரளா மாநிலத்தவர்களும், தமிழகம் மூலம் பலனடைந்து வருகின்றனர்.
தமிழகத்தில், ரியல் எஸ்டேட் தொழில் கொடி கட்டி பறப்பதால், விவசாய தொழில், நாளுக்கு நாள் நசிவடைந்து வருகிறது. ஆண்டுதோறும் பாசன பரப்பும் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 2008 -09ம் ஆண்டில், 29 லட்சத்து, 31 ஆயிரம் ஹெக்டராக இருந்த பாசன பரப்பு, 2009-10ம் ஆண்டில் 28 லட்சத்து, 64 ஆயிரம் ஹெக்டராக குறைந்துள்ளது. தமிழகத்தில் சென்னையை தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் விவசாய தொழில் செய்யப்படுகிறது.ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு விதமாக விளைபொருட்கள் அதிகளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் காய்கறி உற்பத்தி சராசரியாக இருந்தாலும், அது நமது தேவையை பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக இல்லை என்ற கருத்து பரவலாக இருந்து வருகிறது. கரும்பு, நெல், மக்காச்சோளம், பருப்பு வகைகள், தானியங்களை போல அல்லாமல் காய்கறிகள் விலை நிலையற்றதாக உள்ளதால், அவற்றை விவசாயம் செய்வதில் பெரும்பாலான விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதனால், கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, தமிழகத்தின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு பல்வேறு வகையான காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
ஆசியாவின் மிகப்பெரிய சந்தையாக கருதப்படும், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு மட்டும், நாள்தோறும் கர்நாடகாவிலிருந்து 330 முதல் 400 லாரிகள் வரை பலவகை காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இது மட்டுமின்றி, 50க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம், பெல்லாரி வெங்காயம் மற்றும் சாம்பார் வெங்காயமும் விற்பனைக்கு எடுத்து வரப்படுகிறது. இவ்வாறு, ஒரு நாளைக்கு சென்னைக்கு மட்டும் சராசரியாக 5,000 டன்கள் அளவிற்கு கர்நாடகாவிலிருந்து காய்கறிகள் எடுத்து வரப்படுகிறது. ஆந்திராவில் இருந்து, தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் சில வகை காய்கறிகள் 200 முதல் 300 டன்கள் அளவிற்கு எடுத்து வரப்படுகிறது. இவை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களின் காய்கறிகள் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. இதுமட்டுமின்றி, ஓசூர், கிருஷ்ணகிரி, வேலூர், ஆற்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தேவையான காய்கறிகளும், கர்நாடகாவிலிருந்து குறிப்பிட்ட அளவிற்கு கொண்டு வரப்படுகிறது.
தமிழகத்தில் காய்கறிகள் விளைச்சல் அதிகரித்தால், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து அவற்றை கொள்முதல் செய்வது குறையும். இதுபோன்ற காரணங்களை மனதில் வைத்துதான், தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்குவதில் கர்நாடக அரசும், அம்மாநில அரசியல்வாதிகளும், விவசாயிகளும் பாரபட்சம் காட்டி வருவதாக தெரிகிறது. 
அதேநேரத்தில் தமிழகத்தில், ஊட்டியில் விளையும் காய்கறிகள், கேரளா மாநிலத்தின் திருச்சூர், எர்ணாகுளம் சுற்றுப் பகுதிகளுக்கும், கொடைக்கானலில் விளையும் காய்கறிகள் திருவனந்தபுரம், கொல்லம் சுற்றுப் பகுதிகளுக்கும் நாள்தோறும் பல டன்கள் அளவிற்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. கேரளா மாநில அரசு, தண்ணீர் தர மறுத்தாலும், அவர்களின் காய்கறிகள் தேவையை பூர்த்தி செய்வதில் தமிழகத்திற்கு பங்கு உள்ளது.
கர்நாடகா, ஆந்திரா காய்கறிகளை தமிழகத்திற்குள் அனுமதிக்க மறுத்தாலும், தமிழக காய்கறிகளை, கேரளாவிற்கு அனுப்ப மறுத்தாலும் நமக்கு நஷ்டம் ஏதும் இல்லை. கேரளாவிற்கு அனுப்பும் காய்கறிகளை கொண்டு, மாநிலத்தின் தேவையை பூர்த்தி செய்துக்கொள்ள முடியும். ஆனால், தமிழகத்திற்கு காவிரி, பாலாறு, முல்லை பெரியாறு மூலம் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களுக்கே அதிகம் நஷ்டம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்த உண்மையை இம்மூன்று மாநிலங்களின் அரசியல்வாதிகளும், பொதுமக்களும் என்று உணர்கின்றார்களோ, அன்றுதான், மாநிலங்களுக்குள் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னை தீரும் என்கின்றனர் தமிழக வேளாண்மை துறை அதிகாரிகள். இதை, இம்மூன்று மாநிலத்தவர்களுக்கும் புரிய வைப்பதற்கான அணுகுமுறையை கண்டறிந்து, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலதரப்பட்டவர்களின் எதிர்பார்ப்பு.
நன்றி-தினமலர்

>>>தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 024769/கே3/2011, நாள்:07-06-2012ன் படி ஒன்றியவாரியான விலையில்லாப் புத்தகப்பை தேவைப்பட்டியல் 01-06-2012 நிலவரப்படி கோரப்பட்டுள்ளது.

         தமிழக அரசின் அறிவிப்பின் படி ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியருக்கு சிறிய அளவு விலையில்லாப் புத்தகப்பையும், நான்கு முதல் ஏழாம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியருக்கு நடுத்தர அளவு விலையில்லாப் புத்தகப்பையும், எட்டு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியருக்கு பெரிய அளவு விலையில்லாப் புத்தகப்பையும் வழங்கப்படவுள்ளன. தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்:024769/கே3/2011, நாள்:07-06-2012ன் படி ஒன்றியவாரியான விலையில்லாப் புத்தகப்பை தேவைப்பட்டியல் 01-06-2012 நிலவரப்படி (1-8வகுப்பு வரை) கோரப்பட்டுள்ளது.

>>> சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத் துறை அரசாணை எண்.65, நாள்.17-04-2012 மற்றும் தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்:01088/கே3/2012, நாள்:04-05-2012ன் படி பள்ளி வாரியான இலவசச் சீருடை தேவைப்பட்டியல் கோரப்பட்டுள்ளது.

                சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத் துறை அரசாணை எண்.65, நாள்.17-04-2012ன் படி 2012-2013ம் கல்வியாண்டு முதல் 4ஜோடி சீருடைகள் வழங்கப்படும். மேலும் ஆறாம் வகுப்பிலிருந்து மாணவர்களுக்கு அரைக்கால்சட்டைக்குப்(Half Pants) பதிலாக முழுக்கால் சட்டையும்(Full Pants), மாணவியருக்கு பாவாடை தாவணிக்குப்(Pavadai Dhavani) பதிலாக சல்வார் கமீஸ்-ம் (Salwar Kameez) வழங்கப்படும்.
               மேற்காண் அரசாணை மற்றும் தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்:01088/கே3/2012, நாள்:04-05-2012ன் படி பள்ளி வாரியான  இலவசச் சீருடை தேவைப்பட்டியல் கோரப்பட்டுள்ளது.


>>>ஜூன் 10 [June 10]...

  • ஜோர்டான் ராணுவ தினம்
  • போர்ச்சுக்கல் தேசிய தினம்
  • நாசாவின் ஸ்பிரிட் தளவுளவி செவ்வாய் கோளை நோக்கி ஏவப்பட்டது(2003)
  • முதல் ஆட்டோமொபைல் சாப் என்பவரால் உருவாக்கப்பட்டது(1947)

>>>2012-2013 கல்வியாண்டில் தோராயமாக நூறு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படுகின்றன...

>>>2012-2013 கல்வியாண்டில் தோராயமாக நூறு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படுகின்றன....

>>>ஜூன் 9 [June 9]....

  • இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண்பேடி பிறந்த தினம்(1945)
  • தங்கனீக்கா குடியரசானது(1962)
  • வால்ட் டிஸ்னியின் டொனால்ட் டக் வரைகதை வெளிவந்தது(1934)
  • வடமேற்கு சீனாவில் ஜப்பானியரின் ஆக்கிரமிப்பை சீனக் குடியரசு அங்கீகரித்தது(1935)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...