கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஆகஸ்ட் 05 [August 05]....

  • புர்கினா பாசோ விடுதலை தினம்(1960)
  • சந்திரனில் காலடிவைத்த முதல் மனிதரான நீல் ஆம்ஸ்ட்ராங் பிறந்த தினம்(1930)
  • சுதந்திர தேவி சிலைக்கான அடிக்கல் நியூயார்க் துறைமுகத்தில் பெட்லோ தீவில் நாட்டப்பட்டது(1884)
  • தென்னாப்பிரிக்க கறுப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலா, 17 மாத தேடுதலுக்கு பின் கைது செய்யப்பட்டார்(1962)

>>>01.08.2012 நிலவரப்படி மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடம் நிர்ணயம் செய்ய விவரங்கள் கோரி - பள்ளிகல்வி இயக்குனர் உத்தரவு [P.G. FIXATION AS PER STUDENT STRENGTH AS ON 01.08.2012]

>>>MINIMUM MATERIAL FOR 10TH AND 12 STANDARDS - BY DIRECTOR OF SCHOOL EDUCATION

>>> CSSE - I Hall ticket Download (Date of Exam:12.08.2012)

>>>முப்பருவ கல்வி முறையில் முதல் பருவத்தேர்வு நடத்தப்படாதது ஏன்?

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முதல் பருவத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளன. ஆனால், முப்பருவக் கல்வி முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ள, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு மட்டும், முதல் பருவத் தேர்வுகள் நடத்தப்படவில்லை.
மாணவருக்கு, மூன்று பருவத் தேர்வுகள் வழக்கமாக நடத்தப்படும். காலாண்டுத் தேர்வுக்கு முன் முதல் பருவத் தேர்வும், அரையாண்டுத் தேர்வுக்கு முன் இரண்டாவது பருவத் தேர்வும், முழு ஆண்டு தேர்வுக்கு முன் மூன்றாவது பருவத் தேர்வும் நடக்கும்.
ஆனால், முப்பருவக் கல்வி முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இதுவரை முதல் பருவத் தேர்வுகள் நடத்தப்படவில்லை.
இதுகுறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர் தேவராஜன் கூறியதாவது: எட்டாம் வகுப்பு வரையான மாணவ, மாணவியருக்கு, 60 மதிப்பெண்கள் எழுத்துத் தேர்வுக்கும், 40 மதிப்பெண்கள் செய்முறைகளுக்கும் என பிரிக்கப்பட்டு உள்ளது.
இந்த மாணவருக்கு, பருவத் தேர்வுகளுக்குப் பதிலாக, ஒவ்வொரு பாடம் நடத்தி முடிக்கப்பட்டதும், உடனடியாக மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. எனவே, இவர்களுக்கு தனியாகப் பருவத் தேர்வுகள் கிடையாது. காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வை, மற்ற மாணவரைப்போல் எழுதுவர். 60 மதிப்பெண்களுக்கு, எழுத்துத் தேர்வு நடக்கும்.இவ்வாறு தேவராஜன் கூறினார்.

>>>துப்பாக்கி! * வெள்ளி வென்றார் விஜய் * இந்தியாவுக்கு 2வது பதக்கம்


லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம் கிடைத்தது. துப்பாக்கி சுடுதலில் விஜய் குமார் (25 மீ., ரேபிட் பயர் பிஸ்டல்) வெள்ளிப் பதக்கம் வென்று சாதித்தார். இதன்மூலம் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற நான்காவது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார்.
லண்டனில் 30வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. நேற்று நடந்த ஆண்களுக்கான 25 மீ., "ரேபிட் பயர் பிஸ்டல்' துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா சார்பில் விஜய் குமார் பங்கேற்றார். நேற்று முன்தினம் நடந்த முதலாவது தகுதிச் சுற்றில் 292 புள்ளிகள் பெற்ற விஜய் குமார், இரண்டாவது தகுதிச் சுற்றுக்கு முன்னேறினார். நேற்று நடந்த இரண்டாவது தகுதிச் சுற்றில் 293 புள்ளிகள் பெற்றார். இதன்மூலம் மொத்தம் 585 புள்ளிகள் (292 + 293) பெற்ற விஜய் குமார் 4வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார்.
வெள்ளி பதக்கம்:
முக்கியமான பைனலில் துவக்கத்தில் இருந்தே அபாரமாக ஆடிய விஜய் குமார், 30 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடம் பிடித்தார். இதன்மூலம் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கத்தை பெற்றுத் தந்தார்.
* இது, ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு கிடைத்த நான்காவது பதக்கம். முன்னதாக 2004ல் நடந்த ஏதென்ஸ் ஒலிம்பிக் "டபுள் டிராப்' பிரிவில் இந்தியாவின் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் வெள்ளிப் பதக்கம் வென்றார். கடந்த 2008ல் நடந்த பீஜிங் ஒலிம்பிக் 10 மீ., "ஏர் ரைபிள்' பிரிவில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார். லண்டன் ஒலிம்பிக் 10 மீ., "ஏர் ரைபிள்' பிரிவில் இந்திய வீரர் ககன் நரங் வெண்கலப் பதக்கம் வென்றார்.
* இது, ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவுக்கு கிடைத்த 22வது பதக்கம்.
* தவிர இது, தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்த 9வது பதக்கம். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 1900ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பிரிட்டன் வம்சாவளியை சேர்ந்த நார்மன் பிரிட்சர்ட் பங்கேற்றார். இவர் 200 மீ., ஓட்டம் மற்றும் 200 மீ., தடை ஓட்டத்தில் தலா ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு மொத்தம் 11 பதக்கம் கிடைத்துள்ளது.
இப்போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கத்தை முறையே கியூபாவின் புபோ (34 புள்ளி), சீனாவின் பெங் டிங் (27) கைப்பற்றினர்.
யார் இந்த விஜய் குமார்
இமாச்சல பிரதேசத்தின் ஹமிர்புர் மாவட்டத்தின் ஹர்சவுர் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் குமார், 27. இந்திய ராணுவத்தில் சுபேதாராக பணிபுரிகிறார். 25 மீ., "ரேபிட் பயர் பிஸ்டல்' பிரிவில் 2006 காமன்வெல்த் போட்டியில், 2 தங்கம் வென்றார். பின், 2010 டில்லி காமன்வெல்த் போட்டியில் 3 தங்கம், ஒரு வெள்ளி கைப்பற்றினார். 
* லண்டன் ஒலிம்பிக்கில் 10 மீ., "ஏர் பிஸ்டல்' பிரிவில் பங்கேற்ற இவர், 31வது இடம் பிடித்திருந்தார்.
* துப்பாக்கிசுடுதலைத் தவிர, குத்துச்சண்டை, டேபிள் டென்னிசில் அதிக ஆர்வம் கொண்டவர்.
* இவருக்கு ரஷ்யாவின் பாவெல் ஸ்மிர்நாக், தனிப்பட்ட பயிற்சியாளராக உள்ளார்.
காலிறுதியில் விஜேந்தர்:
ஆண்களுக்கான குத்துச்சண்டை "மிடில் வெயிட்' 75 கி.கி., எடைப்பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் விஜேந்தர் சிங், அமெரிக்காவின் டெரல் கவுஷாவை சந்தித்தார். இதில் விஜேந்தர் சிங் 16-15 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். ஆக., 6ம் தேதி நடக்கவுள்ள காலிறுதியில் விஜேந்தர் சிங், உஸ்பெகிஸ்தானின் அபாஸ் அடோயிவை சந்திக்கிறார்.
ஜாய்தீப் ஆறுதல்:
ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 50 மீ., "ரைபிள் புரோன்' பிரிவு பைனலுக்கான தகுதிச் சுற்றில் இந்தியா சார்பில் ஜாய்தீப் கர்மகர், ககன் நரங் பங்கேற்றனர். இதில் ஜாய்தீப் கர்மகர் 595 புள்ளிகள் பெற்று 7வது இடம் பிடித்தார். இதன்மூலம் பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் ககன் நரங் 593 புள்ளிகளுடன் 18வது இடம் பிடித்து பைனல் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
பைனலில் இந்திய வீரர் ஜாய்தீப் கர்மகர் 104.1 புள்ளி பெற்றார். மொத்தம் 699.1 (595+104.1) புள்ளிகள் பெற்ற ஜாய்தீப் கர்மகர் 4வது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
லீக் சுற்றில் 600 புள்ளிகள் பெற்ற பெலாரஸ் வீரர் செர்ஜி மார்டினோவ், பைனலில் 105.5 புள்ளிகள் பெற்றார். மொத்தம் 705.5 புள்ளிகள் பெற்ற மார்டினோவ் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். தவிர இவர், புதிய <உலக சாதனை படைத்தார். வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தை முறையே பெல்ஜியத்தின் லியோனல் காக்ஸ் (599 + 102.2 = 701.2), சுலோவேனியாவின் ராஜ்மண்டு டெபிவச் (596 + 105.0 = 701.0) கைப்பற்றினர்.

>>>பள்ளிக் கல்வி இயக்குனராக தேவராஜன் நியமனம்

பள்ளிக்கல்வி இயக்குனராக தேவராஜன், நேற்று நியமிக்கப் பட்டார்.
ஈரோடு மாவட்டம், குமலன்குட்டை கிராமத்தைச் சேர்ந்த 55 வயதான தேவராஜன், எம்.ஏ., - எம்.எட்., பட்டதாரி. 1995ல், போட்டித் தேர்வு மூலம் மாவட்டக் கல்வி அதிகாரியாக தேர்வு பெற்று, பின் முதன்மைக் கல்வி அலுவலராக, பல மாவட்டங்களில் பணியாற்றினார்.
இணை இயக்குனர் பதவி உயர்வு பெற்று, தேர்வுத்துறை, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும், இயக்குனர் பதவி உயர்வுக்குப் பின், தொடக்கக் கல்வி இயக்குனர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் ஆகிய பதவிகளுக்குப் பின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனராக பணிபுரிந்து வந்தார். தற்போது பள்ளிக்கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வரும் 6ம் தேதி, புதிய பொறுப்பை ஏற்கிறார். புதிய பாடத் திட்டங்களை மெருகேற்றியது; முப்பருவ கல்வி முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு திட்டங்கள் குறித்து பயிற்சி கையேடுகளை தயாரித்து, மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தது உள்ளிட்ட பல்வேறு பணிகளை, தேவராஜன் சிறப்பாக செய்து முடித்தவர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல...